அருவக் கவிதைகளை உண்மையான அனுபவப் புலத்திலிருந்து தொடங்கி, தன் அதிகபட்ச சாத்தியப் புள்ளிவரை கொண்டுசென்ற முதன்மையான தமிழ் நவீனக் கவிஞர் அபி மட்டுமே. குறுகிய, சிறிய இக்கவியுலகினுள் தமிழ்க் கவியுலகின் மிகச் சிறந்தபல கவிதைகள் உள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றிஒரு தமிழ்ச் சாதனையே. - ஜெயமோகன்.
அவரது அனுபவநிலை அருத்திரண்டது. சூன்யமானது.காலமற்றது. தத்துவச் சுமையில்லாதது. வலியில்லாதது. நான் - இல்லாத ஒரு வாழ்க்கை அது. இதை நிரூபிக்கும் ஓர் அகப்பயணத்தை அவர் தம் கவிதைகளில் இயற்றுகிறார். அக உலகிற்குள் சொற்களுள் நடக்கும் நாடகத்தை அபியைப் போல் எழுதுவதற்கு ஒருவர் மெய்ம்மையுணர்ந்தோனாக இருத்தல் வேண்டும். - தேவதேவன்.
அபி என்ற பீ. மு. அபிபுல்லா என்பவர் தமிழ்க் கவிஞர் ஆவார். தமிழில் அருவக் கவிதைகளுக்குக் கவனிக்கப்பட்ட புதுக்கவிஞராவார். இவரது கவிதைகள் ஆங்கிலம், இந்தி மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
அபி என்கிற ஹபிபுல்லா தமிழ் கவிஞர்களில் புகழ்வெளிச்சம் அடையாதவர் ஆனால் அவர் தமிழின் மிக முக்கியமான கவியாக கருதப்படுகிறது ஆகவே அவருக்கு விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. அவர் பெருவாரியான வாசகர் பரைப்பை அடையாததற்கு காரணம் அவரு கவிதைகள் அரூபமானவை புரிந்து கொள்ள கடினமாக இருக்கிறது.
"இல்லாமையின் இருப்பை, சொல்லாமையின் சொல்லை".
என்கிறார்.. ஒரு கவிதையில்.
அதாவது இன்மையை இருப்பதை வைத்து அளந்து பார்க்கிறார். மனதின் அக தத்தளிப்பை, மனித மனம் போடும் வேடங்களை சொல்கிறார்.. நிகழ்வதை நிகழ்வின்மையில், இருப்பை, இருத்தலை இல்லாது பாடி பார்க்கிறார். இல்லாமல் இருத்தலும் இருத்தல் தானே ?. பல கவிதைகள் ஒன்றுமே புரியவில்லை என்றாலும் சில கவிதைகள் புரிகிறது, சில கவிதைகள் இரண்டு முறை மூன்று முறை வாசித்தால் புரிகிறது.
பொய்கள் போதையில் பேசி வஞ்சகம் செய்து ஏமாற்றி வாழும் மனிதர்களை விட்டு காலவெளியிலா காலம் விட்டு பிரிய எத்தனிக்கிறது ஒரு கவிதை...
"பொய்களின் போதையில் புரளும் வஞ்சகத்தின் வாயில் இருந்து வெளியேறி போகிறேன்."
சூன்யத்தில் எல்லாம் நன்றாக இருந்தது, பெரு வெடிப்பின் பின் பூமி உயிர் மனித என்று இரண்டு வரி எவ்வளவு தூர காலத்தை கடந்து விடுகிறது. இது தான் கவிதையின் மகத்துவம் கவிஞன் காலம்மற்றவன் காலவெளி கடைந்தவன்..