Jump to ratings and reviews
Rate this book

Pandhaya Pura

Rate this book
பந்தயப் புறா- திருநிறைச் செல்வியா, திருவளர் செல்வியா, அவள் நெஞ்சில் பதிந்து நிறைந்து விட்டாள்.
பிற்பட்ட வகுப்பு (B.C.) கட்டுப்பாடான குடும்பத்துப் பெண் ஒருத்தி- மற்றவர்களின் வாழ்க்கை முறைகளையும், பறந்து திரிபவர்களையும் பார்த்து தானும்- மேலே மேலே பற பற... எனத் துடிப்பது- மீன் குழம்பும், மிளகு ரசமும் மட்டும் வாழ்க்கை அல்ல எனப் புரிந்து எழுவது? ஓர் அற்புதமான படைப்பு.
ஒரு கதாசிரியனின் கதைகளைப் படித்துவிட்டு ஆண்களுக்குள்- சிவசுவைப்போல- அகல்யா நாவலின் கதாநாயகன்- ஒருவன் இருப்பானா எனத் தேடுகிறாள்.
தன் வீட்டைவிட அண்ணி வீடு இன்னும் பயத்தைத் தருகிறது. எதிர் வீட்டு எத்திராஜுலு நாயுடு மனைவியை "எச்சே" என்று அழைப்பதையும், அதன் பொருளையும் அறிந்தபோது மேலும் பயம், அத்தனை கேவலமும் பொறுத்துக்கொண்டு முதுகு சொரிந்துவிடும் காட்சி, ஆண்களைப் பற்றி ஓர் அலர்ஜியே உண்டாக்கி விடுகிறது.
ஆனால் செல்வியைப் போலவே அவள் அண்ணியின் பாத்திரப் படைப்பும் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவள் நல்லவள், பத்து வயது முதல் தாயில்லாத செல்வியை வளர்த்தவள். தன் குடும்ப கெளரவத்தில் அலாதியான பற்று. தனக்குக் குழந்தை பிறக்காது என அறிந்தபோது ஏற்பட்ட பெரிய பயம். தன் வீட்டைவிடத் தகப்பன் வீட்டுச் செல்வம் கொடுக்கும் கர்வம், மரியாதை, தன் நகைகளையும், சொத்துக்களையும் கொடுத்தேனும் தன் நாத்தியைக் கரையேற்ற வேண்டும் என்னும் ஜாதி என்ற பற்று. அவள் சாடுவதெல்லாம் அதன்பின் பிரதிபலிப்பே- நெகடிவ் அப்ரோச்

335 pages, Kindle Edition

First published January 1, 1981

19 people are currently reading
158 people want to read

About the author

Balakumaran

252 books574 followers
Balakumaran was born in Pazhamarneri village near Thirukattupalli in Thanjavur district in 1946. As a child, he was highly inspired by his mother, who was a Tamil scholar and a Siromani in Sanskrit, used verses of Sangam and other ancient literature to motivate him when ever he was emotionally down. This created a deep interest in Tamil literature which made literature his passion. His first stories were published in a literary magazine called ‘Ka-Sa-Da-Tha-Pa-Ra’ and for which he was also a founding member, a self-anointed militant literary journal that had been launched with a mission to blaze new trails in modernist literature.

He has also contributed to Tamil periodicals such as Kalki, Ananda Vikatan, Saavi and Kumudam. Later he became a famous Tamil writer, author of over 200 novels, 100 short stories, and dialogue/screenplay writer for over 14 films. His writings are noted for a distinct philosophical and religious tone. He is fondly called 'Ezhuthu Sithar' by his fans. He is a disciple of "Sri Yogi Ram Surath Kumar".

In his many novels he shows immense interest in enlightenment. He is considered as "Maanasiga Guru" for many individuals, who are in search of the formless almighty. His lucid but powerful expressions of man-woman relationship and human-God union is a tribute to mankind.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
41 (42%)
4 stars
30 (31%)
3 stars
20 (20%)
2 stars
3 (3%)
1 star
2 (2%)
Displaying 1 - 7 of 7 reviews
Profile Image for Prabha Nagarajan.
6 reviews1 follower
February 1, 2024
பந்தயப் புறா-பாலகுமாரன்
"எழுத்து சித்தர்" பாலகுமாரன் அவர்கள் 1980- களில் எழுதிய கதை. அப்போதைய மெட்ராஸ், சாதி கட்டமைப்புகள் உள்ள, நடுத்தர வர்க குடும்பம். தாய்-தந்தை இல்லாமல், மூத்த சகோதரனின் ஆதரவில், உயர்நிலை பள்ளி படிப்புடன் வாழும் வீட்டு சிறைப்பறவை திருவளர் செல்வி. வீட்டு வேலையும், புத்தகம் படிப்பதுமாக பொழுதுகளை கடத்தும் செல்விக்கு, ஒரு எழுத்தாளர் எழுதிய கதைகளினால் முற்போக்கு சிந்தனைகளுடன் வாழ்வை வடிவமைக்க எண்ணுகிறாள். இதனால் வரும் தடங்கல்களையும் அவமானங்களையும் கடந்து அவள் வாழ்வின் படிகளை எவ்வாறு கடக்கிறாள் என்பதே இக்கதை.

பாலகுமாரரின் எழுத்துக்கள் என்றும் சமகாலத்திற்கு மட்டுமல்லாது "ahead of his times" என கூறப்படுவது போல் இருக்கும். அவரை இவ்வளவு காலம் கடந்து வாசிக்கிறோமே என்று கூட தோன்றுகிறது. அவர் எழுத்துக்களை வாசிக்கும் போது, ஒருவரால் எப்படி இவ்வளவு ஆழ்ந்து சிந்திக்க முடிகிறது? அதை, எப்படி இப்படி நயம் பட எழுத முடிகிறது? என்று ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

அக்கால செல்வியை மட்டுமல்ல, இக்காலத்திலும் ஏதோ ஓர் சிறையில் அடைப்பட்டு இருக்கும் பல செல்விகளை சிறை உடைத்து, சிறகு விரித்து, வானில் பறக்க வைக்கும் இந்த "பந்தயப்புறா".
Profile Image for Saranya Dhandapani.
Author 2 books177 followers
March 10, 2024
Book 11 of 2024- பந்தயப்புறா
Author- பாலகுமாரன்

“மனிதன் கண்டு பிடித்த ஆயுதங்களில் மிகக் கொடூரமான ஆயுதம் வார்த்தைதான்.”

மாதம் ஒரு பாலகுமாரன் புத்தகம் படிக்க வேண்டும் என்ற ஆசை தொடங்கி போன மாதம் நான் படித்த புத்தகம் தான் இது.

செல்வியை பற்றிய கதை இது. அவளுக்கு மூன்று அண்ணன்கள்,சிறு வயதிலே தாய் தந்தை இறந்ததால் அண்ணன்கள் தான் எல்லாம். பெரிய அண்ணன்,அண்ணியோடு தான் செல்வி வளர்கிறாள். அண்ணிக்கு திடீரென உடலில் ஒரு பிரச்னை, குழந்தை பாக்கியம் இல்லை என மருத்துவர்கள் அறிவிக்க, அண்ணியின் தவிப்பு செல்வியின் மீது கோவமாய் மாறுகிறது. இது ஒரு புறம்! அவர்களின் எதிர் வீட்டில் அந்த கணவன் மனைவியை அநாகரிகமாய் நடத்தும் விதம்..இப்படியான சூழலில் தான் செல்விக்கு திருமணம் வேண்டாம்,படித்து வேலைக்கு போக வேண்டும் என ஆசைப்படுகிறாள். அவள் ஆசை நிறைவேறியதா என்பது தான் கதை.

இதில் எந்த கதாபாத்திரத்தையும் இவர் தான் நல்லவர்,இவர் தான் கெட்டவர் என சொல்லவே முடியாது. சூழ்நிலைகளே அனைத்தையும் தீர்மானிக்கிறது.”அகல்யா” புத்தகம் படித்தப்பின் எல்லாருக்குள்ளும் இருக்கும் கேள்வி தான் இந்த புத்தகத்தின் தொடக்கம். “சிவசு” போன்ற ஆண்கள் நிஜத்தில் உண்டா என யோசித்து, தான் சந்திக்கும் எல்லா ஆண்களிலும் சிவசுவைத் தான் தேடுகிறாள். இந்த குடும்பத்தில்,பெண் ஏன் வேலைக்கு செல்லக் கூடாது? ஏன் வண்டி ஓட்டக்கூடாது எனத் தொடங்கி அத்தனை தடைகளையும் தாண்டி, அவள் எடுத்து வைக்கும் அந்த முதல் அடி பல பெண்களுக்கும் ஊக்கமளிக்கும். கதை விறுவிறுப்பாக நகர்கிறது.இந்த புத்தகம் எழுதப்பட்ட நாளில் இது way ahead of time என்பதில் சந்தேகமில்லை. சாதி,மதம்,இனம்,பால்,சமுதாய வேறுபாடு என எல்லாவற்றையும் ஒரு கதையில் உள்ளடக்கியிருக்கிறார் பாலகுமாரன்.

இதை படிக்கும் எல்லாருக்குமே சிறகு விரித்து கனவுகளை நோக்கி பறக்க ஆசை எழும்!
Profile Image for Pooja S.
47 reviews1 follower
July 9, 2024
தமிழில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர் எழுத்துச் சித்தர் பாலகுமாரன். பந்தயப் புறா புத்தகம் தான் நான் முதன்முதலில் படித்த நாவல். எனக்கு 12 வயது இருக்கும் போது இந்த புத்தகத்தை படிக்குமாறு என் தாத்தா எனக்கு பரிந்துரை செய்தார்.

அன்றைய மெட்ராஸ், கட்டுப்பாடான, நடுத்தர குடும்பத்தில் தாய், தந்தை இல்லாமல், அண்ணனின் ஆதரவில் வளரும் செல்வி தான் கதை நாயகி. ஒரு எழுத்தாளரின் கதைகளைப் படித்து முற்போக்கான சிந்தனைகளை வளர்த்துக் கொண்டு செல்வி எவ்வாறு வாழ்வில் வரும் தடங்கல்களை வெற்றி கொள்கிறாள் என்பதே இக்கதை.

1980களில் வெளி வந்த இந்த கதை, பெண் ஏன் வேலைக்கு செல்லக் கூடாது? ஏன் வண்டி ஓட்டக் கூடாது? போன்ற கேள்விகளைக் கேட்டு சிறைப் பறவையாய் இருந்த பல பெண்களுக்கு சிறகடிக்க கற்றுத் தந்தது. சிறகடிக்க வேண்டும் என ஆசை படும் ஒவ்வொரு பெண்ணும் படிக்க வேண்டிய கதை.
ஆண்களை கதை நாயகர்களாக வைத்து கதை எழுதப் பட்ட கால கட்டத்தில் பெண்ணியம் பேசியவர் பாலகுமாரன்.
Profile Image for Vijay Ramdu.
58 reviews
June 11, 2013
Pengal kandippaga padikka vendiya kadhai.. adhai vida aangal padika vidiya kadhai..
Profile Image for S L  Dhanya.
6 reviews
July 26, 2022
Amazing writer Mr.Balakrishnan i got all the collections of your books
Displaying 1 - 7 of 7 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.