“திருப்பங்கள்” என்பதை மிகவும் சரியாக வரையறுக்க முடியாது. "அடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது தெரியாது" என்பதே சரியான விளக்கமாயிருக்கும். "நாம் ஓன்று நினைக்க தெய்வம் ஓன்று நினைக்கும்" என்றும் சொல்லலாம். ஆறு பாகங்களாக ஏற்கனவே வெளி வந்த ஒரு வரி கதைகளின் தொகுப்பே இந்த புத்தகம். இந்த புத்தகத்தில் “நூறு” ஒரு வரி கதைகளைத் தந்துள்ளேன். கதையின் நீளம் ஒரே ஒரு வரி தான். ஒரு சிறிய நிகழ்வு அந்த ஒரு வரிக்குள் நடந்து முடிந்து விடுகின்றது. அந்த ஒரு வரியில் முடிந்த வரையில் ஒரு சூழ்நிலையை தந்துள்ளேன். கதையும் முக்கியம் அல்ல; அந்த சூழ்நிலையும் முக்கியம் அல்ல. அதில் வருகின்ற திருப்பம் உங்களுக்கு எந்தவிதமான பாதிப்பை ஏற்படுத்தப்போகிறது என்பது தான் எனது எதிர் பார்