"எவ்வளவோ யுத்தச் சத்தங்களுக்கு மத்தியிலும் ஒரு பூ ஒன்று ஓரமாய் மலரத்தான் செய்கிறது" இதுதான் இந்நூலின் மையஇழை. வாழ்வின் பயணக் களைப்பிற்க்கு நடுவில் ஆங்காங்கே நம்மை ஆசுவாசப் படுத்துவது அடுத்தவர் மேல் காட்டும் அன்பு மட்டுமே... அப்படி ஒரு அன்பின் சுவடை ஒரு மருத்துவமனையின் அசாதாரண சூழலில் உணர்கிறான் அஸ்வின்.அதோடு படித்துறை சுரங்கம், அங்கு இருக்கும் புதையலை காவல் காக்கும் பூதம், சுற்றி இருப்பவர்களின் மரணம் தரும் வலி,அரசு மருத்துவமனை மருத்துவர்களின் அரக்கப்பறக்க நிமிடங்கள், அவர்களது வாழ்வின் இன்னொரு பக்கம் என கலந்து கட்டி பயணிக்கிறது இந்த கதை....எந்தவித எதிர்பார்ப்புமின்றி எவரிடமாவது பேரன்பைக் கொட்டியிருக்கிறீர்களா?ஒரு காதல் மலர குறைந்தது எ
Aswin sara இருவரின் காதல் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது இவன் ஒரு microbiologist அவள் ஒரு டாக்டர் தொழில் நிமித்தமாக ஏற்படும் நட்பு அழகான காதலாக மாறுகிறது. இக்கதையில் வரும் சில twistகள் அருமை. வரிசையாக ஒரே மாதிரியாக சிலர் இறப்பதும் அதற்கான சரியான காரணங்கள் தெரியாமல் இருப்பதும் காதல் கதையில் ஒரு thriller scific படம் பார்ப்பது போல் உள்ளது. இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்படுவதை வார்த்தைகளால் அவர்கள் விவரிக்கவில்லை என்றாலும் நம்மால் அதை உணர முடிகிறது. இந்த கதையில் வரும் காதல் பகுதி என்னை மிகவும் ஈர்த்தது உண்மையை சொல்ல வேண்டும் என்றால் சில மணி நேரம் அஸ்வினாக வாழ்ந்தேன். சில பக்கங்கள் என் வாழ்க்கையில் நடந்த அழகான நினைவுகளை கண் முன்னே கொண்டு வந்து நான் வாழ்ந்த அந்த இனிமையான நாட்களுக்கு காதலுடன் அழைத்து சென்றுவிட்டது. அனைவரின் வாழ்க்கையிழும் நம் மனதிற்கு பிடித்த ஒருவர் கூறிய சில வார்த்தைகள் தான் நம்மை நம் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். அப்படி செல்லமாகவும் கோபமாகவும் அழுகைகளாகவும் சிணுங்களாகவும் சொல்லப்பட்ட வார்த்தைகள் எழுதப்படாத பல நாவல்களுக்கு சமமானது. சில வார்த்தைகள் மிகவும் சாதாரணமாகவும் அடிக்கடி அனைவரும் பயன்படுத்தும் வார்தைகளாகவும் இருக்கும். ஆனால் நமக்கு மட்டும் தான் தெரியும் அந்த வார்த்தைகளுக்குள் பல ஆத்மார்த்தமான நினைவுகள் புதைந்து கிடக்கிறது என்பது. #போகவேண்டாம் #எல்லாரும்பாக்குறாங்க #பார்த்தாபார்க்கட்டும் #போடலூசு #missyou #HATEYOU. இது ஒரு அழகான MEDICAL SCIENCE FICTION LOVESTORY
Book name : Q Author : Ponraj Ramu #AmazonKindle #kindleunlimitedbooks
இது ஒரு medico thriller வகை நாவல். பொன்ராஜ் இராமு அவர்களின் pen to publish 2019 போட்டிக்காக எழுதப்பட்டது. முதல் அத்தியாயம் 300 ஆண்டுகளுக்கு முன்பு மதுரைக்கு அருகில் பழுவூர் என்ற ஊரிலுருந்து தொடங்குகிறது. அடுத்து நிகழ் காலத்தில் ஒரு பிரபல மருத்துவமனையில் பணி புரியும் டாக்டர் அஸ்வின் & பயிற்சி மருத்துவர் சாராவின் காதல் அத்தியாயம் வருகிறது. இரண்டு வெவ்வேறு கதைகள் ஒரு புள்ளியில் சந்திக்கும் போது கதை medico திரில்லராக வேகம் பிடிக்கிறது. அமானுஷ்யம், ஆவி, பேய் கதை போன்ற ஒரு உணர்வை இடையில் கொடுத்தாலும் இது ஒரு பேய் நாவல் இல்லை. பல மருத்துவ ஜார்கன்ஸோடு நாம் நம்பும் படியான க்யூ அவுட்பிரேக் பற்றி சொல்லும் இடங்களில் கொரோனா காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்க முடிகிறது. ஆசிரியர் ஒரு மருத்துவர் ஆதலால் மருத்துவமனை சார்ந்த இடத்தில் எல்லாமே கதை இயல்பாக இருக்கிறது. கதையின் முடிவு திடீர் திருப்பமாக இருந்தாலும், அதை கொஞ்சம் மறுபரிசிலனை செய்து இருக்கலாம்.
"பிரபஞ்சத்தின் எங்கோ ஒரு மூலையில் எப்போதும் ஒரு போர் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஒற்றை செல் ஆகட்டும், ஒரு அரசன் ஆகட்டும் தனக்கான இருத்தலை தக்க வைக்க யுகம்தோறும் யுத்தம் நிகழத்தான் செய்கிறது. ஆம்.. யுத்தம் செய்யும் உயிர் மட்டுமே தக்கன பிழைக்கும்." அடடே!!!
Wonderful and a gripping story inculcating history,love,science and above all speaks the irony of instable human life which was floating on the love. Loved it to the core with a sad ending, a must read.
I wanted to check all the PenToPublish Tamil stories and found this was top rated. I understand why, this is such a pleasant surprise. Could not see any need for improvements, but the part about the could have been written in a better way. Sounded cliche! All the best to the author!
Insight on the life of medicos ... Every event wud have been related to a medics life at some point of life.. interesting perspective and learning of life