இலங்கை தமிழர்களின் வலியை மனதார உணர வைத்துவிட்டீர்கள். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
தலைப்பை தேர்ந்தெடுத்தே மிகவும் அருமையாக இருந்தது. கதைகளின் போர்வையில் வெறும் பொழுதுபோக்கை மட்டும் முன்னிருத்தாமல் நல்ல கருத்தை பதியவைத்தீர்கள். இந்தக் கதையை படித்த அனைவரும் நிச்சயம் தாங்கள் எந்த உணர்வோடு எழுதினீர்களோ அதை அப்படியே உணர்ந்திருப்பார்கள். ஈழத்தமிழர்கள் பிரச்சனைகள் குறித்து மிகவும் விரிவாக தெரிந்துக் கொள்ள முடிந்தது. அவர்கள் தினம்தோறும் அனுபவிக்கும் கஷ்டம், திடிரென மாறிய வாழ்க்கை சூழல், வேலையின்மை, தீவிரவாதிகளாக சித்தரிக்கப்படுவது, சிறைக் கைதிகள் போல நடத்தப்படும் முறை, அவர்களுக்கு உதவுவதில் உள்ள சிக்கல்கள், அவர்களை ஆதரிக்கும் நாடுகளின் நிலை, இழந்த சொந்தங்கள், சொத்துக்கள், உரிமைகள் என எல்லாவற்றையும் மிகவும் தெளிவாக கூறினீர்கள். சில படைப்புகளில் குறையை மட்டும் கூறுவார்கள் ஆனால் நீங்கள் இதில் இருக்கும் சிக்கலை அழகாக புரியவைத்தீர்கள். இப்படிப்பட்ட படைப்புகள் நிச்சயம் மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்புவோம். கூடியவிரைவில் தனிமனித மாற்றம் ஏற்படும். உங்கள் எழுத்துக்களில் அவர்கள் அனுபவிக்கும் வலியை அப்படியே உள்வாங்க முடிந்தது. மனதை உலுக்கியது. கருத்து சொல்ல கூட அங்கே காதல் தேவைப்படுகிறது. காதலை அழகாக கூறி இருக்கிறீர்கள். எல்லாவற்றையும் அழகாக தொகுத்து விட்டீர்கள். உங்களை போன்ற எழுத்தாளர்கள் என்றும் எழுத்துத் துறையில் உயிர்ப்புடன் இருக்க வேண்டும். அப்போது தான் தனிமனித மாற்றம் விரைவில் சாத்தியமாகும். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருங்கள். எத்தனைபேர் படிக்கிறார்கள் என யோசிக்காமல் தொடர்ந்து எழுதுங்கள். நிரஞ்சனாவின் கனவு என்னவானது, நிரஞ்சனாவின் தாயாரின் நம்பிக்கை உண்மையாகி கணவரை கண்டுபிடித்தார்களா, என சஞ்சனாவின் கனவுகளை/லட்சியங்களை தொகுத்து இரண்டாம் பகுதியாகக் கூட வெளியிடலாம். ஏனெனில் காதலை முன்னிலைப்படுத்தி படிக்க ஆரம்பித்தாலும் அவர்களோடு பயனிக்கும்போது சஞ்சனாவின் கனவு எங்களது கனவாகவே மாறிவிட்டது. அதனால் அதற்கு பிறகு என்ன ஆனது என்றே ஆர்வமாக உள்ளது. உங்களது நல்லெண்ணம் நிறைவேற, சமூகப்பணி தொடர வாழ்த்துக்கள்.