டி.டி.கே., அதுல்ய கோஷ், எஸ்.கே. பாட்டீல் போன்றவர்கள் காமராஜைத் தலையில் தூக்கி வைத்துக் கூத்தாடிக் கொண்டிருந்தார்கள். டி.டி.கே. இல்லத்தில் ஒரு நாள் நடந்த விருந்து ஒன்றில் அதுல்யகோஷ் காமராஜைக் கட்டிப் பிடித்து, உயரத்தில் தூக்கிப் போட்டு விளையாடிய காட்சி இன்னும் என் நினைவில் இருக்கிறது. காமராஜ் கர்ம வீரர் என்றும், தன்னலமற்ற தியாகி என்றும், அவர் ஆட்சி நடத்திய மெட்ராஸ் ஸ்டேட் ரொம்ப ‘காம்ராஜ் மயமாய் இருக்கிறதென்றும் அவர்கள் பாராட்டிப் பேசிக் கொண்டு இருந்ததையும் மறக்கவில்லை. காமராஜ் அதையெல்லாம் சங்கோஜத்துடன் கேட்டுக் கொண்டு மெளனமாக உட்கார்ந்திருந்தார். டில்லியில் காமராஜின் அன்றாட அலுவல்களைப் போட்டோ எடுத்துத் தரும்படி நண்பர் நடராஜனைக் கேட்டிரு&
Sa. Viswanathan alias Saavi a famous Tamil author contributed important novels in Tamil history. Washingtonil Thirumanam was written by Saavi. A gentle story with a hilarious touch by Chavi would keep the readers (of course born with Tamil as mother tongue) laughing till the end.