Jump to ratings and reviews
Rate this book

கிளாரிந்தா

Rate this book

284 pages, Paperback

First published January 1, 1915

1 person is currently reading
23 people want to read

About the author

A. Madhaviah

5 books1 follower

A. Madhaviah (Tamil: அ. மாதவையா) or Anantanarayanan Madhaviah (16 August 1872 – 22 October 1925) is one of the pioneer Tamil writers, novelists and journalists. His writings were about social reformation and misogyny in society. He is the author of one the early Tamil Novels named Padmavathi sarithiram.

His book Muthumeenakshi is a commentary on marital politics, sexuality, female illiteracy and patriarchy in his time in south India. His take on the reformation in society can be achieved through education.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (33%)
4 stars
2 (33%)
3 stars
2 (33%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Aravind Sathyadev.
16 reviews10 followers
December 25, 2022
இந்த நூல் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட ஆங்கில நாவலின் தமிழாக்கம். கதை, வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்ட ஓர் உண்மையான கிளாரிந்தாவைப் பற்றியது. அவர் ஒரு மராட்டிய பிராமண விதவை. அவருடைய கணவர் தஞ்சை அரசரின் பணியாளர்களில் ஒருவர். கிளாரிந்தா தம் கணவரின் மரணத்திற்குப் பிறகு, உடன்கட்டை ஏறும் நிலைக்கு ஆளாகிறார். அதிலிருந்து அவரை மீட்கும் லிட்டில்டன் என்ற ஆங்கில அதிகாரி, பிறகு அவருடனேயே இணைந்து வாழ்கிறார். இந்த அசாதாரணமான பெண்ணை மையமாகக் கொண்டது இந்த நாவல். காலப்போக்கில் கிளாரிந்தா தம் வாழ்க்கையைக் கட்டுக்குள் எடுத்துக்கொண்டது மாதவையாவுக்குப் பிடித்த சில மையக்கருவை விரிவாக்கிக் கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது. இதன்மூலம் பெண் கல்வி, சதி, விதவை மறுமணம், இந்து-கிறிஸ்தவ மதங்களுக்கிடையே நிலவும் வேறுபாடுகள் ஆகியவற்றை விசாரணைக்குள்ளாக்குகிறார். மேலும், இந்நாவலின் அடிநாதமாக விளங்கும் பண்பாட்டுக் கலப்பும் கலப்புமத உறவும் வழக்கத்திற்கு மாறானவையாகவும் அளவிடற்கரிய ஆர்வத்தைத் தூண்டுபவையாகவும் இருக்கின்றன.

- நூலின் பின் அட்டைக்குறிப்பு.



இந்நாவலின் முதல் பாகம் பதினெட்டாம் நூற்றாண்டில் ஆங்கிலேயர், பிரெஞ்சு ஆதிக்கத்தின் விளைவாக தஞ்சை அரண்மனையின் அப்போதைய நிலையை வரலாற்று குறிப்போடு புனைவாக கூறுகிறது. வரலாற்றின் காரணமாக முதல் பாகத்தில் வாசிப்பின் வேகம் தடைபடுகிறது. இரண்டாம் பாகத்திலிருந்து கிளாவிருந்தா பாயின் தனிப்பட்ட பிரச்சினைக்குள் செல்வதால் விறுவிறுப்பாக நகர்கிறது. நாவலின் இறுதியில் பின்னிணைப்பாக வரலாற்றுக் குறிப்புகள் இணைக்கப்பட்டுள்ளது.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.