நம் மகனோ, மகளோ அரசியல் சார்ந்த விசயங்களைப் பேசக்கூடாது என்று வீடு முதல் கல்லூரி வரைக்கும் கட்டுப்பாடு என்ற கோட்டுக்குள் தான் வைத்துள்ளோம். ஆனால் நம் வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடமும் தீர்மானித்துக் கொண்டு இருப்பது அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் மட்டுமே. நல்லது கெட்டது என்று இரண்டுமே உண்டு. தமிழக கிராமங்களில் உள்ள முடிதிருத்தும் கடைகளே 50 ஆண்டுகளுக்கு முன் திராவிட இயக்கத்திற்கு முக்கிய களமாக இருந்தது. இன்னமும் உள்ளது. ஆனால் வீரியமாக இல்லை. தொழில் நுட்பம் அதனை எடுத்துக் கொண்டு விட்டது. வீட்டிலிருந்தபடி ஒவ்வொருவரின் பேச்சையும் நாம் கேட்டுக் கொண்டு இருக்கின்றோம். இங்கு எல்லோருக்கும் மாற்றம் வர வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உள்ளது.