Jump to ratings and reviews
Rate this book

வீரயுக நாயகன் வேள்பாரி #2

வீரயுக நாயகன் வேள்பாரி, இரண்டாம் தொகுதி

Rate this book
"சங்க இலக்கியப் பாடல்களின் வழியாக, ஒரு பூவின் மகரந்தத் துகள் அளவிற்கு மட்டுமே கிட்டும் வரலாற்று நுண்குறிப்புகளைக்கொண்டு,யூகிக்கவியலாத பெருங்காடே புனையப்பட்டிருக்கிறது.

நிலம், இயற்கை, பண்பாடு, நீதி, விழுமியங்கள் யாவும் விற்பனைப் பண்டமாக மாறிக்கொண்டிருக்கும் சூழலில், ஒரு தாவரத்தைக் காட்டிலும் பெருந்தச்சர்கள் ஆக்கிய தேர் பெரிதில்லை என்பதறிந்த இயற்கையாளன் பாரி, மீளாக்கம் செய்யப்படுவது காலத்தினால் நிகழும் அற்புதம்.

தமிழரின் நாகரிகம், சிந்தனை மரபு, இயற்கை அறிவு, விஞ்ஞானம், கலை இலக்கிய நுண்திறன், வீரம், காதல், வாழ்வு என பெரும் வரலாறு ஒன்றைப் புனைவின் துணையோடு கவிதையின் மொழியில் சித்திர நுட்பத்தில் ஆக்கித் தந்திருக்கிறார் சு.வெங்கடேசன்.

மொழியாலும் புனைவாலும் மதம்பிடித்த ஒருவரால் மட்டுமே இப்படியொரு காவியத்தை உருவாக்க முடியும்.

வரலாறு, இலக்கியத்தின் வாயிலாக இத்தனை அரசியல் சரிநிலையோடு மீளுருவாக்கம் செய்யப்படுவது நவீன சூழலில் இதுவே முதல்முறை.”
- வெய்யில்

800 pages, Hardcover

First published January 1, 2016

86 people are currently reading
1012 people want to read

About the author

Su. Venkatesan

8 books282 followers
Su. Venkatesan (சு. வெங்கடேசன்), also known as S. Venkatesan, is a Tamil writer from Tamil Nadu, India and Tamil Nadu State Committee member of Communist Party of India (Marxist). His debutant novel Kaaval Kottam published in 2008 was awarded the Sahitya Academy Award for Tamil in 2011. The Tamil film 'Aravaan' is based on it. The Sahitya Academy-winning writer is also the president of the Tamil Nadu Progressive Writers Association. His second novel 'Veerayuga Nayagan Velpari' was serialised in Tamil popular magazine Ananda Vikatan. 'Veerayuga Nayagan Velpari' is the second Novel after Ponniyin Selvan to make a big craze between the readers at that time.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
633 (85%)
4 stars
83 (11%)
3 stars
17 (2%)
2 stars
4 (<1%)
1 star
7 (<1%)
Displaying 1 - 30 of 106 reviews
Profile Image for Akila.
21 reviews
October 24, 2023
Goodreads மீது தீராத கோபம் - மொத்தம் 5 stars மட்டுமே உள்ளது. இந்த புத்தகத்துக்கு 100 நட்சத்திரங்கள் கொடுக்கலாம்.
"பனையன் மகனே பனையன் மகனே "என்று பாடும் பொழுது உள்ளுக்குள் பறம்பு மக்களோடு சேர்ந்து நாமும் ஆடுவோம்.
ம.செ செய்திருப்பது ஓவியங்கள் இல்லை உயிரோட்டங்கள், தேக்கனையும் பாரியையும் இரவாதனையும் பறம்பின் எல்லா மக்களையும் மறக்க முடியாமல், அந்த மக்களையும் அவர் போற்றும் காடுகளையும் இடையறாது என் வாழ்நாள் முழுவதும் காதலிக்க ஆசிரியரும் ஓவியரும் வழிவகுத்து விட்டனர்.

கண்ணீர் ஒரு துளியும் இல்லாமல் நெஞ்சில் யானை மிதித்தது போல் தாக்கத்தை மட்டும் விட்டு செல்கிறார் ஐயா சு.வெங்கடேசன் அவர்கள்.
ஐயா சு.வெங்கடேசன் அவர்களின் ஆளுமைக்கு என் வணக்கங்கள்.
வேள் பாரி :
அண்டுவார் தன்னை அணைக்கும் தாய்மடி !
அளவிலா அன்பை பொழியும் தொல்குடி !
Profile Image for Sampath Kumar.
86 reviews33 followers
October 17, 2019
இப்புத்தகத்தை வர்ணிக்கப் புது வார்த்தைகள் செய்ய வேண்டும். எழுத்தால் புல்லரிக்கச்செய்யும் கலை ஆசிரியரின் குருதியில் கலந்துள்ளதுபோல் உள்ளது. வரலாற்றுப் புதினங்களின் விசிறிகள் கொற்றவைக் கூத்தெடுத்துக் கொண்டாடப்பட வேண்டிய ஒருவர் சு. வெங்கடேசன். இப்புத்தகத்தின் சிறப்பே இதன் ஆராய்ச்சியும் நடையும் தான். படிக்கத் தொடங்கிய கணம் முதல் என்னைப் பறம்பின் குடியாக்கும் கள் கொண்டது இந்தப் புதினம். மணியம் செல்வத்தின் ஓவியங்கள் பேரழகும், தந்தையை விஞ்சிய கலை வெளிப்பாடுமாய் உள்ளது. இருபத்தோராம் நூற்றாண்டின் மிகச்சிறந்த வரலாற்றுப் புதினம் இது தான். இதையும் தாண்டி வேறொன்று வர வேண்டுமாயின் அது சு.வெங்கடேசனால் மட்டும் தான் முடியும் என்று தோன்றுகிறது. மொத்தத்தில் என் வாழ்வில் ஓர் மைல் கல்லாய் இந்தப்புத்தகம் அமைந்துவிட்டது.
Profile Image for Gautami Raghu.
229 reviews22 followers
April 4, 2024
First read in 2022:
பாண்டியனின் துறைமுகத்தை அழித்த பாரி, மூவேந்தர்கள் ஒன்று கூடிப் போர் தொடுத்தால் என்ன செய்வான் என்பதே 2-ஆம் பாகம். முதல் பாகம் ஒரு எடுத்துக்காட்டே எனும் அளவிற்கு பறம்பின் ஆற்றலை வெகு விமரிசையாகக் கொண்டாடுகிறது இப்பாகம். பாரி மட்டுமல்லாது பறம்பின் தூண்களான தேக்கன், முடியன், இரவாதன், வேட்டூர்ப் பழையன் ஆகியோரின் பேராற்றலை சிறப்பாக எடுத்துரைத்து பிரமிப்புக்குள்ளாக்குகிறார் ஆசிரியர்.
எல்லைகள் விரிய, வளங்கள் மீட்க அழித்தொழிப்பையே யுக்தியாகக் கொண்ட வேந்தர்கள் மீதான மதிப்பு கானல் நீராய் மறைகிறது. அறம், மக்கள், இயற்கை ஆகியவற்றை முழுமூச்சாய் கொண்டு வாழும் பாரியின் மதிப்பு வானுயரத்தைத் தொட்டு நிற்கிறது.
இயற்கையோடு சேர்ந்த யுக்தியின் முன்பு எண்ணிக்கைகள் தூசே என்பதைப் பறை சாற்றுகிறது இப்படைப்பு!
வேந்தர்களின் பிரமாண்டமான படைகள், வணிகம், கட்டமைப்புகள் எவையும் என்னை சட்டை செய்யத் தவறியதேனோ? கபிலரைப் போல் பறம்பு சென்ற மனம், இதுவன்றோ வாழ்க்கை என எண்ணுகிறது! ❤
முல்லைக்குத் தேர் கொடுத்தவன் மட்டும் அல்லன் பாரி! ஒரே நேரத்தில் மூவேந்தர்களையும் சிதறச் செய்த மாவீரன் ஆவான்! ❤
இதுவன்றோ தமிழ் காவியம்! இவனன்றோ தலைவன்! ❤

கல்கியின் சில பிரபலமான புதினங்களை வாசித்த பிறகு தோன்றியவை:
எப்புதினத்தை வாசித்தாலும் வேள் பாரி அளவிற்கு இல்லையே. அதற்கு ஈடாகுமா என்றே எண்ணுகிறேன் (பாரியின் ஆற்றலும், ஆசிரியரின் மொழி வளமும்). வேள் பாரியும் பறம்பும் என்னோடு ஒன்றியவை ஆகி விட்டன.
கல்கி இராஜா தந்திரத்தை அழகாக விவரிக்கிறார். அவை யாவும் மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதற்குச் சான்று. வேள் பாரியோ ஒரு படி மேலே! மனிதர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குச் சான்று. போட்டி, பொறாமை, மண்ணாசை எதுவுமின்றி இயற்கையோடு ஒத்த வாழ்க்கையே அசல் ஆகும், உன்னதமாகும். அப்பெரும் உணர்தலை உயிரோட்டமாய்க் காண்பித்த வேள் பாரி என்றென்றும் தலை சிறந்த தலைவன் ஆவான், அப்பெரும் படைப்பு தலை சிறந்த புதினம் ஆகும்!

Re-read in 2022: Knowing the plot & the conclusion did not slow down the pace of reading. I was still glued to my seat with anxiety while reading the war sequences. This book is certainly beyond words! The author has done justice in effectively portraying the strengths of every individual and not just Paari. That is something I like the most in Part II. It just gets to you when you realize Paari & his people had the capability to destroy the entire force of the Muvendar but they chose to do it the right way only when one of them was taken away. Their righteousness is top-notch! I have to say that my Tamil spirits were re-kindled after reading Su.Ve's words. Now, in a world of mediocre writing (esp Tamil), his writing was like heaven! So beautifully pure. Reading every book of Su.Ve is one of my definite goals in 2023. :)
As the author rightly says, "பாரி அழியக்கூடாத மனிதப் பண்பின் பேரடையாளம்"!❤️ Vel Paari is too special & too close to heart! No matter how much I try, my words do not do justice to how magnificent the book is.
கடக்கவே முடியாத கனவாய் நிற்கின்றன பாரியும் பறம்பும்!
Profile Image for Just one more page please .
49 reviews8 followers
March 22, 2019
The Research and thought work that has gone into this great work of art is astounding !!!
the sociological , philosophical and political takes on this one is nailed on right or should i say left.
Its an Epic !!
I never thought I would read a work that comes close to Ponniyin Selvan ever again.
This one actually surpasses it in someways...
Profile Image for Bhuvan.
253 reviews42 followers
October 24, 2023
மிகச் சிறந்த படைப்பு !!

புத்தகம் படித்த பின்பும் பாரியின் பரம்பு காடுகளில் இன்னும் திரிந்து கொண்டிருக்கிறேன்.

ஒரு புனைவு இவ்வளவு அழகாக எழுதப்பட முடியுமா

இத்தனை சொல்வளம் கொண்ட எழுத்தாளர்களைப் படிப்பது தான் எத்தனை சுகம்

பரம்பின் காடுகள் மீதும்
பாரியின் கொடை மீதும் கபிலரின் சொல்வளம் மீதும் இரவாதனனின் வீரம் மீதும் தேக்கனின் அறிவின் மீதும்
வாரிக்கியனின்
பொறுத்தாலும் தன்மை மீதும்
முடியனின் உணர்ச்சி மீதும்
காதல் கொள்ளாமல் இருக்கவே முடியாது

ஏனெனில் இவையெல்லாம் நாம் எப்படி இருக்க வேண்டும் என்று நம் அடி மனதில் நாம் கனவாய் நினைத்துக் கொண்டிருக்கும் சிறு துகள்கள் இவை.

மனிதன் என்னவாக இருக்கிறான் என்பதை தாண்டி என்னவாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது வேள்பாரி.

நான் படித்த புத்தகங்களில் மறக்க முடியாத புத்தகமாகவும் மறுபடி மறுபடி படித்து தீர்த்திட விரும்புகிற புத்தகமாகவும் வேள்பாரி இருக்கும்.
Profile Image for Cruz J.
21 reviews2 followers
November 11, 2020
“மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்.”

“ஏன்?”

“அது அவ்வளவு விரிந்து பரந்தது... அளவற்றது.”

முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன், சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்...

“எங்கள் பாரியின் கருணையை விடவா?”

பாரியின் பெருமைக்கு இந்த வரிகளே சான்றாக இருக்கும்
Profile Image for Nivetha.
7 reviews3 followers
February 24, 2024
பாரியோடு பறம்பில் பயணித்தது போல் ஒரு அனுபவம். பாரியை பிரிய மனமில்��ாமல் இந்த புத்தகத்தை கீழே வைத்தேன். தட்டியங்காட்டில் புரியும் போர் நாம் மூவேந்தர்களுக்கு எதிராக நடப்பதைப் போல் மணம் எண்ணியது. கருங்கைவாணனை அழிக்க மனம் துடித்தது. தேக்கனின் உடல் நலம் சரியாக வேண்டினேன். அவரது இழப்பை ஏற்க மறுத்தேன். அவர் ஒரு கதையின் கதாபாத்திரம் என்பதை ஏற்க முடியவில்லை.

இரவாதனின் உயிர் மூவேந்தர்களின் சூழ்ச்சியால் பிரிந்தது கணம் அதை திசைவேழர் விளக்கியதும் மனம் பதறியது.

வேட்டுர் பழையனை இழக்க நேரிடும் என்று எண்ணவில்லை. பாரி எப்படி இத்தனை துயரத்தை தாங்குவான் என்று எண்ணும் போது மனம் பதறியது. கபிலர் எல்லாம் அறிந்த புலவர் ஆனால் பறம்பு வந்த பிறகு அவர் பாரியிடம் பயிலவே நினைத்தார். அவ்வளவு அறிவோடு பறம்பு மக்கள் இருந்தனர்.

சோம பானத்தை பருக வேண்டும் என்ற ஆசை மனதில் பெருகியது.

போரில் எப்போது பாரி எதிரிகளை வீழ்த்தி வெற்றி பெற்று நீலனை மீட்டு பறம்பு வந்து சேரும் நாள் வர காத்திருந்தேன்.

நான் வாழ்வில் சில காலங்களை பறம்பில் கழித்தது போன்ற ஒரு உணர்வு. அனைவரும் வேள்பாரி புத்தகத்தை படித்து விட்டு பொன்னியின் செல்வன் புத்தகத்தை விட இது சிறந்தது என்று சொல்லும் போது நான் அப்போது நினைத்தேன் பொ.செல்வனை விட அப்படி என்ன சிறப்பு இதில் இருந்து விட போகிறது என்று. ஆனால் இப்போது பாரியையும் பறம்பையும் பிரிய‌ மனமில்லை. பொ.செல்வனை விட சிறந்ததா என்ற விவாததிர்கு நான் வரவில்லை ஆனால் ஆசிரியர் இந்த புத்தகத்தை அவரது எழுத்துக்களாள் தலைசிறந்த புதினமாக மாற்றியுள்ளார்.

என் வாழ்வின் தலை சிறந்த நாட்களில் தலைசிறந்த புத்தகத்தை படித்த அனுபவம். ஆசிரியருக்கு நன்றிகள் பல.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Rohith.
31 reviews3 followers
May 23, 2023
I hope someone without changing the essence of the author's story will cook a series based on this book.

Things I loved about this book.

1. Portrayal of Pari. He was shown as a leader who is loved by everyone just like a member of their family (for eg People will oppose his opinion, he will listen to other people's opinions just like a family) rather than showing people touching the hero's feet to show how people respect him.

2. The characters love nature and how they fight to protect it. This is exactly how people should show nature is god god is nature.

3. Thanks to the author for showing the hill tribes just like how they live than showing them either poor or some people who does some stupid things. Every culture has its own customs just because they differ from you doesn't mean they are lower or uncultured. Hill tribes are the only people with deep history still attached to them.

4. The research the author did for this book is immense. The animals, the plants the living way of the people everything has some sort of accuracy attached to it.

5. Portrayal of the kings, didn't show them as good or evil, showed them as the dictators who worry only about their own pride and selfishness.


Warning ⚠️: Hide this book from Maniratnam
Profile Image for Saravana Sastha Kumar.
229 reviews4 followers
December 7, 2024
Wonderful book. His condescending political ideology in volume 1 are missing in this and thus makes uit far more enjoyable. Read 400 pages today at a stretch to complete it. Fantastic
Profile Image for Marudhamuthu.
68 reviews12 followers
June 4, 2023
கிட்டத்தட்ட 600 பக்கங்களுக்கு போர் களம் காட்சிகள் மட்டும் தான் ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் அத்தனை புதுமை. நாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டிராத பல தகவல்களை கொண்டு மிக நேர்த்தியாக எழுதப்பட்டுள்ளது.
Profile Image for Gowsalyaa.
78 reviews28 followers
December 26, 2024
பனையன் மகனே ! 🤲🛐 I have no words to express the amount of emotions I felt while reading this. This experience can’t be described in words. This book will forever be woven in my chest as a part of it.
Profile Image for Mayuran Senthurselvan.
22 reviews3 followers
March 11, 2025
இயற்கையுடன் மனிதன் கொண்டிருந்த உறவையும், மன்னர்கள் நிகழ்த்திய குரூர அழித்தொழிப்புகளையும் பாரி மற்றும் பறம்பின் பின்னணியில் விவரிக்கும் நாவல் தான் வேள்பாரி. இரண்டு பாகங்களாக இது வெளிவந்திருக்கிறது. (உண்மையில் விகடனில் தொடராக வந்ததை இரு நாவல் பகுதிகளாக வெளியிட்டிருக்கிறார்கள்).

இரண்டாம் பாகம் போரும் அதன் தந்திரங்களும் யுத்திகளும் என முதலாம் பாகத்தில் இருந்து வேறுபட்டு நின்றாலும் ஆசிரியர் சொல்ல வந்த இயற்கையின் முக்கியத்துவமும் மனிதனாய் பிறந்தவனின் மாண்பும் எந்த இடத்தில் பிறழவில்லை. பாரியின் பெயரை புத்தகம் முன் அட்டையில் தாங்கி நின்றாலும், நாவல் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் நாவலை தாங்கி நிற்கின்றன. முக்கியமாக எல்லா கதாபாத்திரங்களும் தங்களது பார்வையில் அவர்கள் தருமம் என நினைப்பதை விட்டு எப்போதும் விலகவில்லை. பொற்சுவையின் பகுதிகள் வரும்போது சில இடங்களில் ஒட்டாமல் அமைந்திருக்கும். இறுதியில் அந்த கதாபாத்திரத்தின் பங்கு அளப்பரியது. இது மாதிரியான கதைகளில் துரோகம் எனும் புள்ளி பெரிய பங்கு வகிக்கும். மூவரசர்களும் எந்த நிலையிலும் தங்கள் இடையிலேயே நம்பிக்கையை உருவாகவில்லை. நம்பிக்கை இல்லாத இடத்தில துரோகத்துக்கு இடமில்லை. இருந்தும் துரோகங்கள் இருக்கின்றன, ஆனால் வாசிப்பவர்கள் பரிதாபப்படும்படியான துரோகங்களாக தான் இருக்கின்றன.
Profile Image for Anitha Ponraj.
274 reviews42 followers
March 1, 2023
புத்தகம் : வீரயுக நாயகன் வேள்பாரி பாகம் 2
ஆசிரியர் : சு. வெங்கடேசன்
பக்கங்கள் : 800
பதிப்பகம் :விகடன் பிரசுரம்
ஓவியங்கள் :மணியன் செல்வன்

பாரியையும் பறம்பையும் கண்டு வியந்து முதல் பாகம் நகர்ந்து வர இரண்டாம் பாகம் யுத்த காண்டம்.

மூவேந்தர்களின் கூட்டுப்படை ஒன்று சேர்ந்து பறம்பு மலையை வெற்றி கொள்ள மேற்கொள்ளும் முயற்சிகளை தன் மதிநுட்பத்தாலும் ஆற்றலாலும் இயற்கையையே ஆயுதமாக மாற்றி வேளிர்குலத்தலைவன் வேள்பாரி கொள்ளும் பெருவெற்றிதான் இரண்டாம் பாகம்.

இப்படி ஒரு தலைவனா? என்று வியந்தும், இப்படி ஒரு வணங்கத்தக்க மாமனிதன் தமிழ் நிலத்தில் எப்போதோ வாழ்ந்து மறைந்திருக்கிறான் என்றும் மனம் பூரித்து மகிழ்கிறது.வரலாற்றுப் புனைவுக்கதை தான் என்றாலும் பாரி போன்று மக்கள் நலமும் இயற்கை நலமும் முதன்மையாகக் கொண்ட தலைவர்கள் வாய்க்க மாட்டார்களா என மனம் ஏங்குகிறது.

"பனையன் மகனே.. பனையன் மகனே.."என்ற பாடலோடு புத்தகம் முடியும் போது மனம் பறம்பு மலையை விட்டு இறங்கி வர மறுக்கிறது.
Profile Image for Elankumaran.
140 reviews25 followers
November 30, 2021
வேள் பாரி ❤️

இதுவரை நான் வாசித்த நாவல்களில் மிகவும் பிடித்தமான புத்தகம் என்றால் வேள்பாரி தான். நான் மீள வாசித்த ஒரே புத்தகமும் கூட. வேள்பாரி ஏற்படுத்திய தாக்கம் அத்தகையது. காதலையும் வீரத்தையும் வெங்கடேசன் சொல்லும் அழகு தனித்தன்மையானது. பறம்பின் மக்களாகவே இருந்து பாரியுடனே பயணம் செய்யும் வாயப்பு. வெங்கடேசனைப்போல் போர் காட்சிகளை விவரிக்கும் கலை யாரிடமும் பார்த்திராதது. அப்படியே கண் முன்னால் கதை நடத்தும் கலைப்படைப்பு இது. என் மட்டில் வேள்பாரி ஒரு பொக்கிஷம். ❤️

“கதைகள்தான் நல்லவர்களுக்கான கடைசி நம்பிக்கை. பறவைகள், விலங்குகள், மரம், செடி, கொடி என இயற்கை எல்லாம் நமக்கு துணை நிற்க, அழித்த���ழிப்பவர்கள் வீழ்வார்கள்; அழிக்கப்பட்டவர்கள் எழுவார்கள் என்ற நம்பிக்கையை, கதையன்றி வேறு யார் கொடுப்பது?”
Profile Image for Saravanan Meivel.
179 reviews8 followers
February 4, 2020
A gripping story telling not failed to fell in love with Vel Parri... But slightly disappointed two things in this novel 1. death of Parri was not covered 2. MS pictures came earlier than writing content which spoils the story flow..if the pictures came after the written content that would be a spectacular reading...hope it may covered in upcoming revised versions
Profile Image for Vadivel C.
24 reviews2 followers
December 19, 2022
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் கடல் பார்க்க வேண்டும்.”

“ஏன்?”

“அது அவ்வளவு விரிந்து பரந்தது... அளவற்றது.”

முன்னால் போய்க்கொண்டிருந்த நீலன், சட்டெனத் திரும்பி கபிலரை நேர்கொண்டு பார்த்துக் கேட்டான்...

“எங்கள் பாரியின் கருணையை விடவா?”

கபிலர், மனதுக்குள் சுருங்கிப் போனார்!
Profile Image for Kesavaraj Ranganathan.
45 reviews7 followers
January 6, 2023
அறம் என்னும் ஒற்றை தன்மையை அச்சாணியாக வைத்து புனையப் பட்ட வரலாற்றுப் புதினம் வேள்பாரி! கடையேழு வள்ளல்களில் முதன்மையானவரான பாரியின் பறம்பு மலையையும் அங்கு வாழும் மனிதர்களையும் பெரும் சங்கப் புலவர் கபிலரின் வழியே காட்டுகிறது இந்தப் புதினம்…

காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறுவதில்லை என்பதை உணர்த்தும் கதைக்களம்… அப்போதைய பேரரசுகளைப் போலவே இன்றைய மக்களாட்சி அரசுகளும் மலை மக்களை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை என்பதை கதை ஓட்டதின் ஊடாக உணரலாம்…

எவ்வியூரின் தன்மை அங்கு செல்லும் பயணத்தின் பொழுதில் கபிலருக்கும் நீலனுக்கும் நடக்கும் உரையாடல் என ஆரம்பமே நாமும் கதையுடனே பயணிக்க ஆரம்பித்து விடுகிறோம்…
ஒவ்வொரு அத்தியாயத்திலும் எண்ணற்ற தகவல்கள் ஊடாக கதையின் பிரவாகம் நம்மை உள்ளிழுத்துக் கொள்கிறது! பறம்பின் காடுகளும் அதன் உச்சியில் அமைந்திருக்கும் எவ்வியூரும் அதற்கான மணியம் செல்வம் அவர்களின் ஓவியங்களுமாக நாம் எவ்வியூரின் சிகரத்திற்கே சென்று வந்த உணர்வு!

காலம் காலமாக நாம் பார்ப்பன மயமாக்கப்பட்ட முருகனின் கதைகளையே கேட்டு வந்து இருக்கிறோம் ஆனால் இந்த புத்தகதில் தான் முருகனும் வள்ளியும் அவர்களின் சுயத்தோடு வந்திருக்கிறார்கள். அவர்கள் வரும் இடங்களில் காதலும், காமமும் சரியாக அந்த இடத்தை நிரப்பிக் கொள்கிறது! தேவையான இடங்களில் கிளைக் கதைகள் மூலம் காலத்தை முன்னும் பின்னும் நகர்த்தி கதை சொல்லியிருக்கிறார்.

மதுரை நகரின் கோட்டையை பற்றியும், அதன் துறைமுகங்கள் பற்றியும் அங்கு நடந்த வணிகத்தைப் பற்றியும் வர்ணிப்புகள் அதிகம் துருத்திக் கொண்டு இருக்காமல் அதே நேரம் வாசகர்கள் அதன் காட்சிகளை எளிதாக உருவகப் படுத்திக் கொள்ள முடிகிறது!

கதையில் பாரி-ஆதினி, எவ்வி-சோமா, அங்கவை சங்கவை, நீலன் – மயிலா, தேக்கன், முடியன், வெட்டூர்ப் பழையன், கூழையன், இரவாதன், கருங்கைவானன், மையூர்க் கிழார், பொற்சுவை, பொதியவெற்ப்பன், குலசேகரப் பாண்டியன், கபிலர், திசைவேழர், இகுனிக் கிழவன் என நிறைய கதாப்பாத்திரங்கள் இருந்தாலும் வாசகனுக்கு குழப்பம் வராமல் கதை சொல்லிய பாங்கினை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை!

வேந்தர்களின் போர் யுக்திகள் பறம்புப் படையினரால் எப்படி எல்லாம் முறியடிக்கப்படுகிறது என்பதையும், போர்க்காட்சிகளும் நம்மை இருக்கை நுனியில் அமர்த்தி நகம் கடித்து வாசிக்க வைக்கிறது! ஒவ்வொரு நாள் போரும், அதில் பறம்புப் படை அடைகிற வெற்றியும் வாசகர்களே வெற்றி பெற்றதைப் போல உணர வைத்தது தான் இந்த புதினத்தின் வெற்றிக்குக் காரணம் என எண்ணுகிறேன்!

கதையின் வழியே பிரதானமாக சொல்லப் பட்ட அறம் பிறழாமை திகழ்தாலும், சமவெளி மக்களுக்கு இருக்கும் ”நமக்கு எல்லாம் தெரியும், மலை மக்கள் காட்டுமிராண்டிகள் அவர்களுக்கு அறிவை நாம் தான் கற்பிக்க வேண்டும்” என்கிற இறுமாப்பை உடைத்து ”அவரவர் நிலையில் அவரவர் பெரியவரே” என்னும் பாடத்தை பாரியின் மூலம் உணர்த்தி இருக்கிறார் சு.வெ!

இவ்வளவு பெரிய கதைக் களத்தை இத்தனைக் கதை மாந்தர்களையும் வைத்து தவம் போல் கதையை உருவாக்கி அதை வாசகர்களுக்கு கொடுத்து இருக்கிறார் சு.வெ. அனைவரும் நிச்சயம் வாசித்து அனுபவிக்க வேண்டிய ஒப்பில்லா புதினம் வேள்பாரி!

புத்தகம் – வீரயுக நாயகன் வேள்பாரி
ஆசிரியர் – சு.வெங்கடேசன்
பதிப்பகம் – விகடன் பிரசுரம்
பக்கங்கள் – 608+800 மொத்தம் 1408
விலை – ₹1350
Profile Image for S. Suresh.
Author 4 books12 followers
July 17, 2022
பாகம் 3 - சோமபானம்
பெரியதொரு புயலடித்த மறுநாள் மலரும் ஆதவனுடன் கலந்த மெல்லிய காற்றைப் போல மூன்றாவது பாகம் சோமபானம் துவங்குகிறது. முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியின் கதை, சேரனுடன் அவனுடைய முதல் போர், ஆதினியுடன் திருமணம் போன்ற கடந்து சென்ற கால நினைவுகளில் துவங்கி நிகழ் காலத்துக்கு வரும் சமயம் கதை மீண்டும் வேகம் கொள்கிறது. அப்பப்பா! என்ன வேகம்... என்ன வர்ணனை... வடமேற்கே சேரர்களின் படை புதிய உத்திகளுடன் பறம்புடன் போர் தொடுக்க குட்ட நாடு, மற்றும் குட நாட்டின் தளபதிகளின் ஒருங்கிணைந்த பலத்துடன் வருகிறது. அதே சமயம், தெற்கே சோழனின் ஐநூறு யானைகளையும் ஐயாயிரம் காலாட்படைகளையும் கொண்ட பிரம்மாண்டமான படை பறம்பின் பொக்கிஷங்களை சூறையாட சோழ வேந்தன் தலைமையில் முன்னேறுகிறது. நீலன் - மயிலா மணவிழா முடிந்த கையோடு ஒரே சமயம் நிகழும் இந்த இரண்டு போர்களின் வர்ணனையும், எதிரிகளை முறியடிக்க பாரியும், பறம்பு வீரர்களும் கையாளும் உத்திகள் அபூர்வமானவை.

பாகம் 4 - செருக்களம்
சேரனும், சோழனும் தோல்வியுற்ற அதே சமயம் குலசேகரப் பாண்டியன் கிழக்கே தன்னுடைய பெரும் அணிவகுக்கிறான். தோல்வியடைந்த வேந்தர்கள் பாண்டியனுடன் சேர்ந்து பாரியை வெல்ல முடிவெடுக்கிறார்கள். கேவலமான யுக்தி ஒன்றைப் பயன்படுத்தி காடுகளும், மலையும் நிறைந்த பறம்பிலிருந்து பாரியை சமதளத்தில் போர் செய்யும் கட்டாயத்திற்கு உடன்படுத்துகிறார்கள். 500 பக்கங்கள் கொண்ட செருக்களம் மூவேந்தர்கள் இணைந்து பாரியின் மீது தொடுக்கும் போரின் கதை. தட்டியங்காட்டில் நடக்கும் போரை வெங்கடேசன் வர்ணித்துள்ள விதம் இரண்டாம் பாகத்திலும், மூன்றாம் பாகத்திலும் விவரித்த போரின் வர்ணனை ஒன்றுமில்லை என்று தோன்றவைக்கும் அளவு அற்புதமாக அமைந்துள்ளது. விற்படை, குதிரைப் படை, யானைப் படை, வாள் போர், மற்றும் இவற்றில் உபயோகப்படுத்தும் ஆயுதங்கள், உத்திகள்... அப்பப்பா, என்ன வர்ணனை... எத்தனை விவரங்கள்... கிட்டத்தட்ட ஒரே மூச்சில் படிக்க வைக்கும் திறன் படைத்தது நான்காவது பாகம்.

வீரயுக நாயகன் வேள்பாரி (முதல் தொகுதி)யைப் போலவே இந்த இரண்டாம் தொகுதியிலும் மணியன் செழியனின் வண்ணப் படங்கள் சு. வெங்கடேசனின் சிறப்பான எழுத்துக்கு மேலும் மெருகூட்டியுள்ளது.
Profile Image for Kalaiselvan selvaraj .
134 reviews18 followers
July 12, 2021
வீரயுக நாயகன் வேள்பாரி இரண்டாம் தொகுதி இருபாகங்களை(சோமபானம், செருக்களம்) கொண்டது. அடிபொலி, சாரே கொல மாஸ், மரண மாஸ், பக்கா மாஸ், தெறிக்கவிடுது,.... இன்னம் இருக்க மாஸ் டயலொக் எல்லாத்தையும் சொல்லி நாம் புகழ இந்த கதைக்கு பொருத்மான தகுதியிருக்கு. படிக்கும் போது நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் இடங்கள் பல உண்டு. சு.வெங்கடேசன் எழுத்தில் கதை சொல்ல, ம.செ(மணியம் செல்வம்) அழகிய ஓவியத்தின் வழியே நமக்குள் கதையை கடத்திவிடுகிறார் -கலைச்செல்வன் செல்வராஜ்.

வீரயுக நாயகன் வேள்பாரி இரண்டாம் தொகுதியின் கதை சுருக்கம் :

வைப்பூர் துறைமுக அழிவுக்கு பழிவாங்க பாண்டியன் தனது படையை பறம்பு நாட்டி எல்லையில் குவிக்கிறான். சேரன் தோகைநாய் உதவியுடம் பறம்பு உள்ளே நுழைந்து தாக்க திட்டமிடுகிறான். சோழன் காடர்கள் உதவியுடன் பறம்பின் பழிநாகர் செல்ல படைதிரட்டி பறம்பின் உள்ளே வருகிறான். சேரன், சோழன் இருவரின் படையும் பறம்பு வீரர்களால் பந்தாடப்படுகிறது. உதியஞ்சேரலும், செங்கனச்சோழனும் செய்வதறியாது பின்வாங்குகிறார்கள். இதையறிந்த குலசேகரபாண்டிய மன்னன் சேரன், சோழன் இருவரும் பறம்பின் பாரியை அழிக்க தன்னுடன் இணைந்து போரிட அழைக்கிறான்.

வேந்தர்கள் மூவரும் பாரிக்கு எதிராக படைதிரட்டி நிறக்க பறம்பின் பாரியோ அவர்கள் நம் எல்லைக்குள் வந்தால் மட்டுமே நாம் தாக்க வேண்டும் என்கிறான். மூவேந்தர்களும் நாம் பறம்புக்குள் நுழைந்து தாக்கினால் தோற்றுவிடுவோம் என உணர்ந்து சதி வேலை செய்து பறம்பின் வீரன் நீலனை சிறைபிடிக்கிறார்கள். கொதித்தெழும் பாரி மூவேந்தருக்கு எதிராக போர்புரிந்து நீலனை மீட்க்க முடிவெடுக்கிறான்.

மூவேந்தர்களின் பெரும் படைக்கு எதிராக பறம்பின் படை போர்களம் செல்கிறது. போர் விதிகள் உருவாக்கப் படுகிறது. இரு பக்கமும் இழப்புகள் நேர்கின்றன். ஆறாம் நாள் போரில் போர் விதியை வேந்தர்கள் மீறுகிறார்கள். அறம் பிறழ்ந்துவிட்டது இனி அழித்தொழிப்பே, பறம்பு நாட்டின் அனைத்து குடிகளும் களம்புகுந்து மூவேந்தர்களின் படைகளை அழிக்கிறார்கள். - கலைச்செல்வன் செல்வராஜ்
Profile Image for வெங்கட் பீமசேனன்.
86 reviews1 follower
April 26, 2025
முதல் பாகமே என் மனதை பெரிதும் கவர்ந்தது. ஆனால் இரண்டாம் பாகம் எனது வாழ்நாளில் என்றும் மறக்க முடியாத அனுபவமாக அமைந்துவிட்டது. இதனை மிஞ்சக்கூடிய புதினம் இனி கிடைக்குமா என்பதே சந்தேகமாக தோன்றுகிறது.

இப்பாகத்தில் விரிவாக சித்தரிக்கப்பட்டுள்ள போர்க்கள காட்சிகள் உயிருடன் பளிச்சென்று நம்முன் நின்று நடப்பதைப் போலவே உணர்த்துகின்றன. அதிலும், திரையர்கள் களத்தில் வருவதன் பேரில் எழும் உற்சாகம் வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கதை இறுதி பகுதியில் நிகழும் மாபெரும் போர் அத்தியாயங்கள் திரைப்படங்களை நிஜமாக முந்திச் செல்கின்றன.

பாரி காட்டின் இயற்கையை ஆயுதமாக மாற்றி, செடி கொடிகளைப் பயன்படுத்தி போராடும் விதம் மனதை பெரும் வியப்பில் ஆழ்த்துகிறது. காட்டிற்குள் திரையர் தலைவனுடன் பாரி நேரடியாக மோதும் காட்சி என் மனதில் என்றும் அழியாத கண்ணோட்டமாக பதிந்துவிட்டது.

யானைகள் மோதும் சண்டை, பாரியின் அறிவின் கூர்மை, காட்டுப் போரின் நுணுக்கமான விளக்கங்கள் அனைத்தும் கதையின் துள்ளலான ஓட்டத்தை அழகாக தாங்கி செல்லுகின்றன.

மொத்தத்தில், இந்த காவியம் தமிழ் இலக்கியத்தில் நம்மை இழுத்துச் செல்லும் அபூர்வமான அனுபவம். பாரியுடன் வாழ்ந்துபார்த்த அனுபவத்தை இவ்வளவு நேர்த்தியான செந்தமிழிலும் உயிர்ப்பூட்டும் கதையிலும் அளித்த சு. வெங்கடேசன் அவர்களுக்கு என் நன்றியும் அன்பும் உரித்தாகிறது.

"பாரியின் காடும், பாரியின் கரணமும், நம்மைத் தொட்டுவிடும் இந்தக் காவியம் ஒரு வாழ்நாள் நினைவாகவே நம் உள்ளத்தில் நிலைக்கும்."
Profile Image for MAHENDRAN S.
19 reviews
December 31, 2021
முதலில் வேள்பாரி முழுக்க கற்பனை கதை மற்றும் கதை மாந்தர்கள் என்பதை அறிந்து படிக்க ஆரம்பித்த தனாலோ என்னவோ தெரியவில்லை குறைந்த ஈடுபாட்டுடன் படிக்க ஆரம்பித்தேன்..
போக போக நம் தமிழ் குடிகளின் தரவும், சங்க இலக்கியங்களில் பாடல் குறிப்பும் , பல்வேறு வித விளங்குகள் பறவைகள் என அதன் சிறப்போடு நம்மை சுண்டி இழுத்து சென்றது கதை .
இறுதி போர் தந்திரம், வானியல் அறிவு, காட்டை ஆல்பானின் உத்தி, என காட்டை மட்டும் ஆண்ட ஒரு குறு நில மன்னனாக பாரியை பார்க்க முடியவில்லை என்றால் மிகையாகாது......
சு வெங்கடேசனின் எழுத்து நடை மிகவும் விறுவிறுப்பாக அமைத்து மணியம் செல்வத்திடம் ஓவிய பணியை ஒப்படைத்து சிறப்பு செய்திருக்கிறது விகடன் குழு ....
58 reviews
September 26, 2020
பனையன் மகனே! பனையன் மகனே!
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே!
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே!

வார்த்தைகள் இல்லை இக்காவியத்தைப் பற்றி பேச. எங்கள் காலத்தில் இப்பெரும் உணர்வை எமக்கு ஊட்டிய ஆசிரியர்க்கு கோடி நமஸ்காரங்கள். பாரி என்னும் மாமன்னன் வாழ்ந்த காலத்தில் பிறவாமல் பிறந்த பலனையே இழந்து விட்டோம் என்று தோன்றுகிறது.
Profile Image for Nive.
14 reviews6 followers
August 10, 2020
I loved it is all that I can put in words. Many books test our patience in the first few pages as they are trying to give us a good understanding of the characters and timeline. But for those who could make it to the pages beyond it, a compelling intricately written story is waiting to treat you!
20 reviews2 followers
March 19, 2022
பறம்பு மலையும் அதன் இயற்கை எழிலும், குடிகளின் கதையும்,
போர் திறனும், மருத்துவ முறையும்
தற்காப்பு ஆயுதங்களும் வாசிக்கும் போதே மெய் சிலிர்க்க செய்தவை!
சோம பானம், தேவாங்கு, கொல்லி காட்டு விதை, பாழி நகர், ஆட்கொல்லி மரம் ♥️
தட்டியங்காட்டு போர் 🥺
பாரி-தேக்கன்-முடியன்-பழையன்-நீலன் - இரவாதன்❤️
168 reviews1 follower
May 5, 2020
One of the best.. War sequences, Paari's love and marriage are shown here ... The characters stole our hearts...
Profile Image for Dhevaguru S.
71 reviews7 followers
September 19, 2023
I started this volume after taking an after taste break of 6 months as i was completely delighted by the volume 1  and was determined to relish and savour the richness of immersive world building to its best. I thought there wouldn't be much of world building since vol 1 has unbelievably established the geography of Parambu with plentiful of intricate details on flora and fauna. Also there's been so much exposure to the cultural and societal aspects of parambu in vol 1. Yet to my great surprise volume 2 overwhelmed me with more of the above-mentioned details, further building the world and expanding the cultural lore. The book additionally emphasizes the rituals, practices, and procedures in the context of war. It paints a very contrasting depiction of moovendhargal or three crowned kings of ancient tamil nadu from their popular noble and valorous image as it exposes the vengeful, covetous, treacherous nature of them.

As the first few hundred pages span over various narratives leading to the war narrative of the last 300 hundred pages that turned swiftly. The war narrative itself was very intriguing as it features the three warring kingdoms coming together to destroy a small mountain clan of thousands. The last hundred pages put me in a fusion of emotions ranging from rage to grief. Paari and parambu going against the three mighty kingdoms with nothing but nature and the knowledge they attained from nature was exhilarating and also it was satisfying when the three kingdoms with all their might and treachery struggled to face the virtuous and valiant mountain clan. Like the previous volume the author baffled me with his immense research on the details of geography, flora, fauna, rituals and culture acquiring from the sparsely available historical accounts. It effectively deconstructs the populous image of mighty kingdoms and emphasizes the greatness of velir clans.
15 reviews14 followers
September 23, 2025
வேள்பாரி பாகம் 2 – போரின் அதிரடி, அரசியலின் சூழ்ச்சி, மனித உணர்வுகளின் ஆழம்… ஒரு வரலாற்று காவியம் உயிர் பெற்று நிற்கிறது!

Velpari Part 2 – a breathtaking blend of war, politics, and raw human emotions; history brought alive like never before!

Detailed Review:

வேள்பாரி இரண்டாம் பாகம் – என்ன ஒரு அதிரடி தொடர்ச்சி!
போரின் சூடு, அரசியலின் குருதி, பாண்டியர்களின் சூழ்ச்சி—இவை எல்லாம் வாசகனை நிமிஷம் கூட சலிக்க விடாமல் இழுத்துச் செல்கின்றன. வேள்பாரியின் வீரமும், அவரைச் சுற்றிய மனிதர்களின் உறவுகளும் மிகக் கம்பீரமாய் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. சில இடங்களில் கண்ணீர் வரவைக்கும் உணர்ச்சி, சில இடங்களில் கைதட்ட வைக்கும் தைரியம்.
இது வெறும் வரலாறு அல்ல—உணர்ச்சிகளின் உச்சம்.
சு. வெங்கடேசனின் ஆராய்ச்சி ஆழமும், எழுத்தின் தீவிரமும் மனதை கொள்ளை கொள்ள வைக்கின்றன.

Velpari Part 2 – what a powerful continuation!
The heat of battle, the intensity of politics, and the cunning of the Pandyas keep you hooked till the very end. Velpari’s bravery shines, but equally touching are the human bonds and emotions surrounding him. At moments, it brings tears; at others, it fills you with pride.
This isn’t just history—it’s raw emotion brought to life.
S. Venkatesan’s research depth and narrative strength make this book unforgettable.
August 27, 2023
பனையன் மகனே பனையன் மகனே
பல்லுயிர் ஓம்பும் பாரி வேளே
தினையின் அளவே பிறவுயிர் வாடினும்
துடித்துக் காக்கும் தொல்குடி வேந்தே - நின்

வீரயுக நாயகன் வேள்பாரி 2 - சு.வெங்கடேசன்

3. சோமபானம்  இடைக்கழிநாட்டு  நல்லூர்  நத்தத்தனார்.( சிறுபான், 87 - 91)  &

4. செருக்களம் ( மதுரை  நக்கீரனார்  ( அகநானூறு 78. 15- 20).   இரண்டு பாகங்களை  உட்கொண்ட வீரயுக நாயகன் வேள்பாரி (இரண்டாம் தொகுதி.)

இரண்டாம் தொகுதி சிறப்பு :

பறம்பு மலையும் அதன் இயற்கை போர் திறனும், மருத்துவ முறையும்
தற்காப்பு ஆயுதங்களும் வாசிக்கும் போதே மெய் சிலிர்க்க செய்தவை.
இச்சி பிசின்,செந்நாய்கள்.😎😎

வேள்பாரி+ ஆதினி😍
பொற்சுவை + சுகமதி
சோபானம், பாழி நகர், ஆட்கொல்லி மரம்
தட்டியங்காட்டு போர் 🥺
பாரி-தேக்கன்-முடியன்-பழையன்😭நீலன் - இரவாதன்.

●அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்😎😎 

● எரிந்து மறைதலும்.  ஒளிர்ந்து அடகங்குதலுமே வாழ்வு


● அறங்காக்கும் தெய்வங்கள் எமது குலத்தை ஆளட்டும். எம் மக்களை ஆளட்டும் எம்மை ஆளட்டும் - வேள்பாரி

கதை களத்திற்கு ஏற்ப உயிரோட்டமுள்ள ஓவியங்களை வரைந்த
திரு_மணியம்_செல்வம் (ம.செ) கண்முன் கொண்டு வந்து மேலும் அழகூட்டுகிறார்.

அறத்தின் உச்சம் அனைவரும் ஒரு முறையேனும் வேள்பாரியை
சுவாசிக்க வேண்டும்.🫡😍
Profile Image for Anu.
4 reviews
August 19, 2025
தமிழ்,அறம்,போர்,காதல் என அனைத்தையும் கொண்டு
காலத்தை மீறும் காவியம்.!
Profile Image for Sharavanan Kb.
35 reviews26 followers
July 18, 2021
அறங்காக்கும் தெய்வங்கள் எமது நிலத்தை ஆளட்டும், எம் மக்களை ஆளட்டும் , எம்மை ஆளட்டும் - வேள்பாரி.

இயற்கையை தங்கள் வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் மலைவாழ் மக்கள், பழங்குடியினர் , காடுகளில் வசிப்போர் என பலரையும் வணிக நோக்கங்களுக்காக ஆக்கிரமிப்பு செய்து அவர்களை இடம்பெயர்க்கும் , அழிக்கும் வேலைகள் உலகம் முழுதும் நடந்து வருவதே , அதை எதிர்பவர்களை அரசின் ஆதரவோடு ஒடுக்கி அவர்களுக்கு தீவிரவாதி , தேச துரோகி , சமூக விரோதி என பெயரிடுவதும் கார்ப்பரேட்டின் வழக்கமே.

இன்றைய கார்ப்பரேட்டின் ஆதி வடிவமாக மூவேந்தர்கள், மலைவாழ் மக்களின் மன்னனான பாரியின் பாரெங்கும் பரவியிருந்த புகழை சகிக்காமல் அவனை அழித்து பறம்பு மலையின் வளத்தை தங்கள் வணிகத்திற்கு பயன்படுத்த ஒன்றினைந்து படையெடுக்க, பாரி அவர்களை சமதளத்திற்கு இறங்கி வந்து போர் புரிந்து தோற்கடித்த கதை/வரலாறே வீரமிகு நாயகன் வேள்பாரி.

பாரியும் பறம்பும் ஏற்படுத்திய பிரம்பிற்கு இனையான பிரம்மிப்பை ஏற்படுத்தியது சு.வெங்கடேசன் அவர்களின் உழைப்பு கிட்டதட்ட 2281 சங்க இலக்கிய பாடல்களையும் பல்வேறு புத்தகங்களையும் ஆய்வு செய்து அருமையான நூலினை தந்திருக்கிறார் உதாரணமாக யானைகள் பற்றிய குறிப்பிற்காக கஜ சாஸ்திரம் என்ற நூலை மூன்று வருடங்களாக தேடி கண்டறிந்ததாக ஒரு கூட்டத்தில் பகிர்ந்திருக்கிறார்.

மூவேந்தர்கள் கோலோச்சிய காலத்தில் பேரரசனாக அல்லாமல் சாதாரண குறுநில மன்னனாக மலையில் வாழ்ந்த பாரியின் புகழ் பாணர்கள் மூலமாக அனைவருக்கும் சென்று சேர்ந்தது பின்னர் கபிலர் மூலம் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றது , பாரியின் மறைவிற்கு பின் பல நூற்றாண்டுகள் ஆட்சி செய்த மூவேந்தர்களால் திட்டமிட்டே கபிலர் பாரி பற்றி எழுதிய பல பாடல்கள் அழிக்கபட்டதாக நம்பப்படுகிறது.

இவையனைத்தும் தாண்டி காலம் காலமாக மக்களின் நினைவடுக்கில் பாரி வாழ்ந்து கொன்டிருக்கிறான் என்பதன் சாட்சியாக தமிழகத்தில் பாரி என்ற பெயரில் 3446 நபர்கள் இருக்கிறார்கள் என்கிறார் ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் இந்த புத்தகம் வெளிவந்த பின் பலர் பாரியின் பெயரை தங்கள் குழந்தைகளுக்கு சூட்டியிருக்கிறார்கள் .

பாணர்கள் , கபிலருக்கு பின் பாரியின் புகழை அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தும் பெரும்பணியை செவ்வனே செய்திருக்கும் சு.வெங்கடேசன் அவர்களுக்கு நன்றிகள்.
Displaying 1 - 30 of 106 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.