இந்த ஊரில் ஓடும் ஆற்றுக்கு ஆயிரமாயிரங் காலத்து வரலாறு இருக்கிறது. நான்கு ரத வீதிகளில் ஓடும் நெல்லையப்பர் காந்திமதி தேருக்கு ஐநூற்றாண்டு கால கம்பீரம் இருக்கிறது. அம்மன் சன்னதித் தெருவில் இருக்கும் இந்த வீட்டின் திண்ணைக்கு நூற்றாண்டு கால ரகசியம் இருக்கிறது. மனித மனத்தின் வரலாறு எத்தனை காலத்தையது? தெரியவில்லை.