சாளக்கிராமம் என்பது தெய்வீகம் நிறைந்த ஒரு கல் ஆகும். இது பூஜிக்கத் தகுந்த ஒரு பொருள். இது மகாவிஷ்ணுவின் உருவங்களில் ஒன்று. இமயமலைக்கு அருகே உள்ள கண்டகி நதியில் மட்டுமே சாளக்கிராமம் உற்பத்தியாகிறது. சாளக்கிராமக் கற்கள் உள்ள இடத்தில் எம்பெருமான் மகாவிஷ்ணுவும், சகல இறைசக்திகளும் நித்திய வாசம் செய்வார்கள். சகல செல்வங்களும் பரிபூரணமாக விருத்தியாகும். இப்புத்தகத்தில் சாளக்கிராமத்தின் வகைகள், அதன் தெய்வீக சக்தி, சாளக்கிராமம் தரும் வளங்கள், சாளக்கிராமத்தை வழிபடும் முறை ஆகியவை பற்றி விளக்கப்பட்டுள்ளது.