பொறுப்பான மகளாக, கனிவான தோழியாக வலம் வரும் அழுத்தமான பெண் நந்தினி திருமண பேச்சுவார்த்தையில் நடந்த நிகழ்வுகளால் தன்னால் ஒரு அன்பான மனைவியாக இருக்க முடியாது என்று உறுதியாக நம்புகிறாள்.
அதே நேரம் கார்த்திக், நந்தினியின் வருங்கால கணவனாக பேசி முடிக்கப்பட்டவன் அவளுடைய புகைப்படத்தைக் கண்ட அக்கணமே காதலில் விழுந்தவன் மனைவியிடமும் அதே காதைலை எதிர்பார்த்துத் திருமண வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கிறான்.
வைராக்கியமான நந்தினியை கார்த்திக்கின் காதல், அன்பான காதல் மனைவியாக மாற்றுமா? ஒரு சராசரி நடுத்தரக்குடும்பத்தைச் சேர்ந்த தம்பதியினரின் வாழ்வில் உண்டாகும் சிக்கல்கள், அவர்களுக்கிடையேயான புரிதலை எளிமையாகப் படம் பிடித்திருக்கும் ஒரு குறுநாவல் தான் ஆழியிலே முக்குளிக்கும் நிலவே.....