குப்பி~ தினம் தினம் மனதை சித்ரவதை செய்யும் வரலாற்றையே மனித இனம் நமக்கு அன்பளித்துள்ளது, அந்த வரிசையில் ஈழத்து வரலாற்று பதிப்பு, குப்பி. " படித்து முடிக்கும்போது அழுது முடித்திருப்பீர்களானாள்நீங்களும் என் தோழர் தான்" இந்த வரிகள் சமீபத்தில் நான் சமூக வலைத்தளங்களில் படித்தவை, அதற்கேற்றார் போல் குப்பி கண்ணீருக்கானது, கண்ணீரை துடைக்கக்கூடியாது, துடைத்து ஆறுதலும் சொல்லக்கூடியது.
சாகத்தான் போகிறோம் !
செத்தும்தான் போகிறோம் !
கொன்றும்தான் குவிக்கிறார்கள் !
வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலனா
எங்கள் நியாயங்களே துப்பாக்கிகள்🖤.