சொந்த ஊர் மதுரை. பணி நிமித்தம் வசிப்பது சென்னையில். 2007-ல் எழுதத் தொடங்கி, தொடர்ந்து தமிழின் முதன்மையான இதழ்களில் சிறுகதைகள் மற்றும் தொடர்கதைகள் பிரசுரமாகிக் கொண்டிருக்கின்றன.
90-களின் மதுரையை, மாந்தர்களை எழுதுவதில் அதிக ஆர்வம் கொண்டவர்.
அய்யனார் கம்மா (2010), ஒரு வெய்யில் நேரம் (2012), பைத்தியக்காலம் (2017), மதுரைக் கதைகள் (2017) ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் தீக்கடல் (2010), தற்கொலைக்கு முயன்று தோற்றவன் (2013) ஆகிய கவிதைத் தொகுப்புகளும் அலப்பறை (2017) என்கிற நாவலும் இதுவரை வெளிவந்துள்ளன.
உயிருதிர்காலம் என்ற சிறுகதை, நவீன விருட்சத்தால் வெளியிடப்பட்ட சிறந்த சிறுகதைகள் தொகுப்பில் இடம்பெற்றது.
‘அய்யனார் கம்மா’ என்ற சிறுகதை குறும்படமாக எடுக்கப்பட்டு, அது ஃபெட்னா உட்பட பல விருதுகளை வென்றுள்ளது.
காமம் என்ற சொல்லையே வெளிப்படையாகப் பேசத்தகாத சொல்லாகக் கருதும் மக்களிடையே நூல் தலைப்பிலேயே அச்சொல்லை வைக்கிறார் Kavignar Narsim. கற்றாரைக் கற்றாரே காமுறுவர் என்பது சான்றோர் கூற்றன்றோ. விழைவே காமம் விருப்பமே காமம்
Kindle கருவியில் அதுவும் எனக்கு அவ்வளவாகப் படிக்க வராத Kavidhai தொகுப்பு நூலை வாங்கிப் படிப்பது இதுவே முதல்முறை. எனக்கு Kavidhai படிக்கத் தெரியாதென்பதை இந்நூலிலுள்ள சில kavidhai நினைவூட்டின. Kavi மனம் kavidhai எழுத மட்டுமன்று படிக்கவும் தேவை போலும். படிக்கப்படிக்க வளருமோ?
முதல்முறை சிந்தையின்றிக் கடந்த சில kavidhai மீண்டும் படிக்கையில் ஆழம் காட்டி அமிழச் செய்தன. செய்யுள் படிக்கும் என் முறையிலே Kavidhai படிக்க வேண்டும் போலும். என்ன ஒன்று செய்யுளுக்கு உரை கிட்டும். ஆனால் Kavidhai படிக்கையில் நம் மனம் அவ்வுரையைத் தானே உணரவுரைத்துக்கொள்ள வேண்டும்
தன் வீட்டுச் சுற்றுச் சுவரில் கூடப் பறவை அமர முடியாதவாறு உடைந்த கண்ணாடிச் சில்லுகளைப் பதித்துவிட்டுத் தான் மட்டும் வக்கணையாக அமர நாற்காலி செய்யப் பறவை கூடு கட்டி வாழும் மரத்தைப் பறிக்கும் மாந்தனின் கொடூரச் செயலை 2ஆவது முறை படித்தபொழுதே என் மனம் உணர்ந்தது. நானும் மாந்தன் தானே
இதற்கு நேர்மாறாகச் சில Kavidhai முதல் முறை படிக்கும் பொழுதே எலும்பையும் உறைய வைத்தன. பிணம் எரியும் சுடுகாட்டின் எதிர் வீட்டுச் சிறுமியின் கண்களும் இரவில் எதையோ அடையாளங்கண்டு ஊளையிடும் தெருநாயும் இதோ இப்பொழுது எழுதும்பொழுது கூட மயிர்க்கால்களை எழுந்துநிற்கச் செய்கின்றன
அந்த ஒரு கேள்வியை எப்போதும் கேட்கமாட்டேன் எனும் நண்பனும் மாமாவின் படத்தைச் சுவற்றில் மாட்டும் அப்பாவும் மனத்தைப் பிசைந்தனர். தன்னைக் கொத்தித்தூக்கும் அலகைப் பறவை இறந்தபின் முட்டும் மீன்குஞ்சும் உதிர்த்த காற்றின் திசையில் பறக்கும் இலையும் பெரியவை நிரம்பிய சிறுமனமும் முரணெழில்
நினைவில் காடுள்ள விலங்கைப் பலர் அறிவோம். கொம்பின் நிழலில் காடுள்ள மான் தலை காண்கிறார் Narsim
சில Kavidhai முதல்முறை படித்தபோதே மனத்தை இலகுவாக்கி இறக்கை அளித்து எழுத்துவானில் எழுந்து பறக்கவைத்தன. நகம்பதிக்கா நளினப்பற்றல் Sonia Sonia பாடலில் வரும் மென் ஆணை நினைவூட்டியது
மீப்பெருஞ்சுடர் கடலெழுஞாயிறு நகும் இதழ் மடிப்பு பால்முலை மாற்றும் கணநொடி விலங்கு mirugam சொல்லாடல் பிழையெழிற்காட்சி மழை தலைகீழ்த்தீ தனிமை அரவம் நினைவுப்பருந்து படிமம் போன்ற Narsim முத்திரை நிறைந்த 2019ஆம் ஆண்டில் வெளிவந்த இச்சிறு தொகுப்பு இவ்வைந்தாமாண்டில் மீள்வலம் வரவேண்டும்