Jump to ratings and reviews
Rate this book

மரபும் புதுமையும்

Rate this book
நிறுவனமயமாகிச் சாத்திர வரன்முறைகளுக்குள் ஒடுங்கிக் கெட்டிதட்டிப்போன ‘மரபு’களுக்கு மாறாக, நெகிழ்ந்து நிலைக்கும் மக்கள் பண்பாட்டு மரபின் உயிர்ப்பை அகழ்ந்து கூட்டுவனவே தொ.ப.வின் ஆய்வுகள். அவ்வாறு கெட்டிதட்டிப் போனவற்றின், போக வாய்ப்புள்ளவற்றின் ஆதிக்க அரசியல் உள்நோக்கத்தை இத்தொகுப்பிலுள்ள கட்டுரைகள் தோலுரித்துக் காட்டுகின்றன. பண்பாட்டு மரபைப் பேணும் அதேவேளையில் நலங்குன்றாப் புதுமைகளுக்கு இசைவான தகவமைப்பையும் இக்கட்டுரைகள் வலியுறுத்துகின்றன. A collection of articles by Tho.Paramasivam on tradition and moderntiy. Tho.pa’s research cherishes the cultural tradition of masses that is ever evolving, against the institutionalised ritualistic tradition that is rigid. He exposed the political reasons that enforce the rigidity of certain traditions through his articles. Tho.pa portrays the dual necessity of cherishing a cultural tradition and allowing a modernity to evolve.

103 pages, Paperback

Published January 1, 2019

9 people are currently reading
104 people want to read

About the author

தொ. பரமசிவன்

34 books231 followers
Tho. Paramasivan (Tamil: தொ. பரமசிவன்; 1950 – 24 December 2020), often known as Tho Pa, was an Indian Tamil anthropologist, writer, folklorist, archeologist and professor. He was the first graduate in his family. He grew up to serve as a professor of Tamil at Manonmaniam Sundaranar University, simultaneously pursuing a writer’s career.

Fondly called as ‘Tho Pa’, he has written more than 15 books which focus on the historical, archaeological and anthropological aspects of Tamil society. His works also dwell a lot on folklore. One of his finest work in this area is Alagar Kovil.

பேராசிரியர் முனைவர் தொ. பரமசிவன் தமிழகத் தமிழறிஞரும், திராவிடப் பண்பாடு ஆய்வாளரும், மானிடவியல் ஆய்வாளரும் ஆவார். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றியவர்.

பண்பாடு, சமயங்கள் தொடர்பான இவரது ஆய்வுகள் மார்க்சிய பெரியாரிய அடிப்படையைக் கொண்டது. அடித்தள மக்களின் அழிந்து வரும் பண்பாடுகளை காக்கவேண்டியதன் அவசியத்தைக் கூர்மையாக முன்வைப்பவர். திராவிடக்கருத்தியலோடு கூடிய புதிய ஆராய்ச்சி முறையியலைக் கண்டுபிடித்த பெருமைக்குரியவர். கலாச்சாரம் என்பது மறு உற்பத்தி சார்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் பேசுகின்ற தத்துவார்த்த மொழியை உடைத்தெறிந்துவிட்டு எளிமையான மொழியின் வழி நுண் அரசியலைப் புரியவைத்தவர். எச்சங்களாகவும், மிச்சங்களாகவும் சிதறிக் கிடக்கும் தமிழ்ப் பண்பாட்டின் வேர்களை தன் கட்டுரைகள் வாயிலாக எடுத்துரைத்து வருபவர். மேலிருந்து எழுதப்பட்ட வரலாற்றிற்கு மாற்றாக கீழிருந்து வரலாறு எழுதுவதற்கான பயிற்சியை இவரது கட்டுரைகள் தருகின்றன.

அழகர் கோயில் குறித்த இவரது முனைவர் பட்ட ஆய்வேடு கோயிலாய்வுகளுக்கு முன்னோடி நூலாகத் திகழ்கிறது. ஆய்வாளர்கள் மட்டுமில்லாமல் அனைவரும் தேடி வாசிக்கும் நூலாகவும் இந்நூல் இருக்கிறது.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
37 (48%)
4 stars
25 (32%)
3 stars
14 (18%)
2 stars
0 (0%)
1 star
1 (1%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Sugan.
144 reviews38 followers
January 13, 2021
Thought provoking collection of essays.

Things I liked about the book.
1. The cover.
2. Starting from demystifying Chola period. The current image of Chola period is very rosy partly due to the books of Kalki and his predecessors. Yes, they did build marvels. But then Tho. Pa breaks it in one line.
"ஏகாதிபத்தியத்துக்கென்று சில கலாச்சார வெளிப்பாடுகள் உண்டு. அவற்றில் ஒன்று அளவின் பிரம்மாண்டம்".
3. When I grew up in my village, பொங்கல் was the most celebrated festival. To be frank I don't remember celebrating Diwali or New Year. His essay on Pongal confirms it.
"சேனை, சேம்பு, கருணை, சிறுகிழங்கு, பனங்கிழங்கு ஆகிய மண்ணுக்கு அடியில் விளையக்கூடிய கிழங்கு வகைகள் பொங்கலுக்குப் படைக்கப்படுபவை. இவை உயர் சாதியினர் எனச் சொல்லப்படுபவர்களால் விலக்கப்பட்டவை. இன்றும் இவை பெருங்கோயில்களில் பயன்படுத்தப்படவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இதுவே பொங்கல் எளிய மக்களின் இனிய கொண்டாட்டம் என்பதற்குச் சாட்சி."
4. This is another tradition not many knows of. Pongal around the corner, thanks to Tho. Pa, now I know the reason behind it.
"தைப் பொங்கலையடுத்த மறுநாள் (கரிநாள் என்பது மக்கள் வழக்கு; ‘கனு’ என்பது மேலோர் மரபு) ஊரிலுள்ள மக்கள் சாதி, மத வேறுபாடின்றிக் காட்டுப் பகுதியில் வேட்டைக்குச் சென்று முயல், உடும்பு, காட்டுக்கோழி, கவுதாரி போன்றவற்றை வேட்டையாடி ஊருக்குள் கொண்டுவந்து ஊர் நடுவில் இறைச்சியைப் பகிர்ந்து எடுத்துக்கொள்கிறார்கள். ஊர்் மந்தை ‘மன்றம்’ ஆக மாற்றம் பெற்று வளர்ந்த கதையின் ஒரு பகுதி இது."
5. "பகிர்ந்துண்ணும் கலாசாரம் இந்நாட்டுத் தொல்குடி மக்களிடம் அரும்பிய வெளிப்பாடாகும். மேலோர் மரபு பேசும் சனாதான தருமம், மக்கள் கூடியும் கலந்தும் உண்ணும் வழக்கத்தைத் தடை செய்தது என்பதே வரலாற்றுண்மையாகும்." - These lines reminded me of again another childhood memory where all the kids in the street used to sit together and eat in the street. It was a daily affair, everyone brings what was cooked in their home and food was shared. Now its just a memory.

Worth reading.
194 reviews9 followers
October 15, 2022
This is an essential read for those who read native anthropology of tamil nadu/ India.

Every article is simple, insightful and political.
15 reviews3 followers
May 14, 2020
Tho.Pa books will widen your knowledge on how to separate the myth and history. All his articles are very precise and fact based.
April 30, 2021
வாங்கிய நாள்: 03- February-2021
வாங்கிய இடம்: வள்ளி புத்தக உலகம், குரோம்பேட்டை.

தொ.பரமசிவன் அவர்களின் புத்தக வரிசையில் நான் வாசித்த முதல் புத்தகம் இது.

லகே ரஹோ முன்னா பாய் என்ற திரைப்படத்தில் ஒரு காட்சியில் கதாநாயகன் காந்தியடிகள் குறித்த தகவல்களை தெரிந்து கொள்ள நூலகத்தில் இருந்து நிறைய புத்தகங்களை தேர்வு செய்வதற்காக பார்வை இடுவார். கடைசியாக ஒரு புத்தகம் மேசை மேல் வந்து விழும் போதுதான் தெரியும் கதாநாயகன் முன்னா பாய் தேர்ந்தெடுத்தது குறைந்த பக்கங்கள் கொண்ட ஒரு சிறிய அளவிலான புத்தகம் என்று.
மரபும் புதுமையும் என்ற புத்தகமும் அவ்வாறே!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்ற பழமொழிக்கு ஏற்ப தொ.பரமசிவன் அவர்களின் படைப்புகளை நுகர ஒரு அருமையான நுழைவாயிலாக இந்த புத்தகத்தை எண்ணுகிறேன்.

முதல் கட்டுரையிலேயே நம்மை இந்த களஞ்சியத்தில் மிதக்க செய்வார் எழுத்தாளர்.

பொதுவாக கட்டுரை நூல்கள் தகவல் நிறைந்த அபுனைவு படைப்பாக படைக்கப் பட்டிருக்கும். ஆங்காங்கே சில நிகழ்ச்சிகளை கதை வடிவில் சொல்லி சொல்ல வந்த கருத்தை முன்வைக்கும் வடிவமைப்பு இருக்கும். ஆனால் தொ. பரமசிவன் அவர்களின் இந்த கட்டுரை தொகுப்பு வெறும் சுவாரஸ்யத்திற்காக மட்டும் இல்லாமல் சொல்ல வந்த தகவலை நீர்த்துபோகாமல் இருக்க கள ஆய்வுகள் செய்து கண்டறிந்த உண்மை நிகழ்வுகளை நேர்மையாக நமக்கு பகிர்ந்து இருக்கிறார்.

மரபு என்ற சொல்லே இன்று ஒரு பழஞ் சொல்லாக பார்க்கும் இந்த காலத்தில் இந்த புத்தகம் மிக அவசியமாக படுகிறது. காரணம் மரபு என்ற உடனே ஏதோ நாட்டார் தெய்வமும் எந்த பலனும் தராத பழமையையும் கட்டி கொண்டிருக்கும் மூடர்கள் என்ற கருத்தாக்கம் மேற்கத்திய மக்களால் புகுத்தப்பட்டு, இன்று நம்மவர்களே இதற்கு துணை போகும் அளவிற்கு மூளை சலவை செய்யப்படுகிறது.

உழுவை மீன், கோரோசனை , சோழர் காலத்தில் இருந்த சேரி பகுதிகளின் நிலை, தொன்மை வாய்ந்த அறிவியலை முன்னரே கண்டறிந்த நம் இனம், போபால் விட வாய்வு கசிவு, பெங்களூர் சூரியகாந்தி விளைச்சலை அதிகரிப்பதாக சொல்லி விவசாயிகளை ஏமாற்றிய நிறுவனம், குஜராத்தில் உப்பு எடுப்பதற்காக அயல்நாட்டு நிறுவனத்துக்கு குத்தகைக்கு விட்ட அரசாங்கம், வளர்ந்த நாடுகள் நம் நாட்டின் மீது தொடுக்கும் மரபுப்போர், உலக வர்த்தக மையத்தின் நிபந்தனைகள் என ஒவ்வொரு விடயமும் நாம் தெரிந்து கொண்டு அதன் கூறுகளை ஆய்ந்து நம் மண்ணையும் மக்களையும் பேண வேண்டும் என்ற அக்கறை மிக்க படைப்பு இந்த படைப்பு.

இந்த படைப்புக்கு பின்னால் இருக்கும் உழைப்பு சாதாரணமாக எண்ணிவிட முடியாது.

அமரர் தொ.பரமசிவம் நமக்கு விட்டு சென்ற களஞ்சியங்கள் இன்னும் ஏராளம். அறியப்படாத தமிழகம் என்ற புத்தகத்தை நான் வாங்கி இன்னும் வாசிக்காமல் வைத்திருக்கிறேன்.

என் அடுத்த வாசிப்பு அந்த புத்தகத்தை நோக்கியே.
Profile Image for GaneshPandian RK.
12 reviews3 followers
January 7, 2021
தொ.ப வின் கட்டுரைகள் ஆதிக்க அரசியலின் மறுபக்கத்தை இடதுசாரி கண்ணோட்டத்தில் அதன் தாக்கத்தை தோலுரித்துக் காட்டுகின்றன.
Profile Image for Gokulraj D.
3 reviews
July 19, 2021
"புதுமை"என்ற சொல்லுக்கென்று தனியே அகராதியே தேட வேண்டியதில்லை "நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்" என்பதைப்போல் தினம் தினம் ஏதாவது ஒரு நிகழ்வு புதுமையைச் சந்தித்துக் கொண்டு தான் இருக்கின்றோம். கவலையெல்லாம் மரபை எண்ணித்தான். மரபிற்கும் புதுமைக்கும் இடையேயான இடைவெளி என்பது ஒரு கடலைப் போலவும் வானைப் போலவும் அளத்தலுக்கறியது.இவ்வளவு இடைவெளி இருக்கின்ற போதிலும் அந்தந்த காலகட்டங்களில் முளைக்கின்ற சிறுசிறு நிகழ்வுகள் மரபை எவ்வாறு முழுங்கி நிற்கின்றன என்பதை இந்நூலில் தொ.ப விவரிக்கிறார். தொ.ப தனது ஆய்வுகளின் மூலம் மறைந்து போன அல்லது தனதியல்பை இழந்துகொண்டிருக்கின்ற மற்றும் புதுமையும் நவநாகரிக காரியங்களால் அரித்துக்கொண்டு காணப்படுகிற பண்பாட்டு அடுக்குகளுக்கு புத்துயரூட்டுகின்றன.

விருந்தில், வாழை இலையின் எந்த பகுதி வலப்புறம் அமைய வேண்டும் என்பது தொடங்கி, முதலில் பரிமாறப்படும் இனிப்பு,உப்புகளினால் எவ்வாறு இரண்டு பிரிவினர் தத்தம்‌ மரபால் வேற்றுண்டு கிடக்கிறார்கள் என இந்நூல் விவரிக்கிறது.

புதுமை வரவினால் நாம் இழந்த உணவுப்பொருட்கள் பற்றியும், அவற்றின் செய்முறை எல்லாம் காலம்‌ எவ்வாறு தானுண்டு செரித்துக்கொண்டது எனவும் தொ.ப தனது ஆதங்கத்தை முன்வைக்கிறார். இணையம் நமது‌ "பிசா" ஆர்டரை உறுதிப்படுத்திக்கொண்டிருந்த அதே வேளை, "அக்கானி" என்ற ஒரு ஊர்நாட்டு உணவுப்பொருள் வழக்க��ழிந்துகொண்டிருந்தது.

ஒரு நிலத்தில் ஒரேவகையான விளைச்சலுக்கு உதவும்,அதிகம் வாங்கும் இரசாயன உரங்களுக்கு மாற்றான "செங்கொடுவேரி" என்ற ஒரு மருந்துப்பயிர் ஒரே நிலத்தில் நான்கு வகையான விளைச்சலுக்கு உதவியது என்ற உண்மையை எண்ணி ஏன் நாம் ஆச்சரியப்படுவது இல்லை. புதுமையை பிரகடனப்படுத்த தொலைக்காட்சி விளம்பரங்களும், தினசரிகளும் ஆங்காங்கே முளைத்த அதேவேளைகளில்தான் நம் கதைகேட்கும் பழக்கத்தையும், மரபை நோக்கிய மீள்பார்வவயினையும் இழந்த நின்றிருந்தோம்.

கிபி 1012 இன் இராச ராச சோழன் ஏன் இன்றளவும் கொண்டாடப்படுகிறான். தஞ்சை பெருவுடையார் ஆலயம் என அக்கோயிலுக்கு பெயரிட்டதன் மூலம் உடையார் ( அரசன் ) என தனது பெயரையே அக்கோயிலுக்கு விட்டுக் கொண்டான். நம்மில் எத்தனை பேருக்கு "கற்றளி"என்பது கற்கோயிலை குறிக்கும் என்பது தெரியும்.

ஒவ்வொரு தனி மனிதனுக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவு என்பது எந்தெந்த காலங்களில் எவ்வாறு இருந்திருக்கின்றது. அவன் தனது நிறைகுறைகளை எவ்வாறு உரிமையுடன் தனது கடவுளுடன் வாதிட்டு பெற்றுக் கொள்கிறான். இன்றளவு நிலவும் ஆன்மீகம் எனும் போர்வையில் உள்ள பார்ப்பன ஆதிக்கம் பற்றியும் மக்களின் வழிபாட்டு உரிமை பற்றியும் தொப விரிவாக பேசுகிறார்.

இவ்வாறாக காலம் போகப் போக நாம் இழந்த மரபுகளைப் பற்றியும் எப்போதுமே நம் மேல் திணித்த கருத்து திணிப்பு களைப் பற்றியும் மரபும் புதுமையும் விரிவாக விவாதிக்கிறது. எல்லாவற்றிலும் புதுமையை "அமல்படுத்துகிறோம்,அமல்படுத்துகிறோம்" என்று இழக்க வைக்கப்பட்ட பண்பட்ட ஒரு வாழ்வியலை மீள்பார்வை பார்க்க மரபும் புதுமையும் ஆவன செய்கின்றது.
Profile Image for Anitha Ponraj.
277 reviews44 followers
May 13, 2025


மரபும் புதுமையும் என்று இந்த மானுடவியல் புத்தகம் தொ.ப அவர்களின் பிற தொகுப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட பன்னிரண்டு கட்டுரைகளின் மேம்படுத்தப்பட்ட தொகுப்பு.

மரபு என்பதை பெருளாதாரம், சமூகம் சார்ந்த விஷயமாக காணாமல் பண்பாடு சார்ந்த விஷயமாக விவரிக்கிறார் ஆசிரியர்.

தொ.ப வின் புத்தகங்களை தொடர்ந்து வாசிப்பதால் அவர் புத்தகங்களில் மீண்டும் மீண்டும் வரும் சில தகவல்கள் வழக்கம் போல் இடம்பெறுகின்றன என்று கண்டுகொள்ள முடிகிறது.

உதாரணமாக தமிழ்ப்புத்தாண்டு குறித்த தகவல்கள்,பெண் தெய்வ வழிபாடு குறித்த தகவல்கள் இதுவரை நான் வாசித்த எல்லா புத்தகங்களிலும் இடம்பெற்றுள்ளது.

வைதிகம் குறித்த கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் சமயம் குறித்து எழுதப்பட்ட புத்தகங்களில் ஏற்கனவே வாசித்ததாகவே இருந்தது.

அதே நேரத்தில் எப்போதும் புதிதாக சில விஷயங்களை கற்றுக் கொண்ட உணர்வு எழாமல் அவர் புத்தகம் முடியாது.

அப்படி இந்த புத்தகத்தில் உ.வே.சா குறித்தும்,ராஜராஜ சோழன், உலகமயமாக்கல் குறித்து பல புதிய தகவல்கள் அறிந்து கொண்டேன்.

உவேசா தமிழுக்கு ஆற்றிய தொண்டும், தமிழ் இலக்கியத்தை மீட்டெடுத்ததில் அவர் பங்கும் அறிந்து கொள்ள முடிகிறது.

தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் குறித்து நிறைய தகவல்களும், ராஜராஜனின் ஏகாதிபத்திய அரசு குறித்தும் விவரிக்கிறார்.

உணவுக் கோட்பாடு குறித்த கட்டுரையில் வரும் தகவல்கள் புதிதாக இருந்தது.

கோவில்களில் உய.ர்ப.லி குறித்த சட்டம் குறித்து வாசித்தபோது அசைவக் கொடை நடக்கும் ஊர்ப்புறங்களில் உள்ள கோவில் கொடை விழாக்கள் கண்முன் வந்து சென்றது.

சாதிய ஆய்வுகள் குறித்த தகவல்களும், உலகமயமாக்கல் குறித்த கட்டுரைகளும் சிந்திக்க வைக்கின்றன.

நம் அன்றாட வாழ்க்கையில் நம்மையறியாமல் எத்தனை எளிதில் புறத்தாக்கங்களால் மாறிக் கொண்டு வருகிறோம் என்று சுயபரிசீலனை செய்ய முடிகிறது.

டங்கல் திட்டம் போல் நாம் அறிந்திராத எத்தனை தகவல்கள் இருக்கிறது என்று மலைப்பாக இருக்கிறது.

பல தகவல்கள் அவர் புத்தகங்களில் திரும்பத்திரும்ப வந்தாலும்,சிறு தெய்வ வழிபாடுகள்,நாம் பின்பற்றும் பழக்க வழக்கங்கள் குறித்து என் கண்ணோட்டம் நிறைய மாறியுள்ளது.

அவற்றைக் குறித்து வீட்டில் உள்ளவர்களுக்கு விளக்கும் போது, அவர்களுக்கு ஏற்படும் புரிதல், வாசிப்பு முன்னோக்கி மட்டுமல்ல பின்னோக்கிச் சென்று நம் வேர்களைக் குறித்த புரிதல்களையும் ஆழமாக மனதில் விதைக்கிறது என்ற உண்மையை உணர முடிகிறது.





Profile Image for Karthick.
371 reviews121 followers
May 28, 2025
தொ.பரமசிவன், தமிழகத்தின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவர். குறிப்பாக மானுடவியல் துறையில் மாபெரும் பங்களிப்பளித்துள்ளார். அழகர் கோவில் பற்றிய ஆய்வு மதிப்பிற்குரியது. இவர் பல கட்டுரை தொகுப்பு எழுதியுள்ளார். அதில் "மரபும் புதுமையும்" ஆகச்சிறந்த கட்டுரை தொகுப்பு என்றால் மிகையாகா.

மரபு என்றால் என்ன, புதுமை என்றால் என்ன, அதை ஏகாதிபத்தியம் எப்படி சிதைக்கிறது என்ற விளக்கியுள்ளார்.

தைப்பொங்கல் பின் வரும் சிறுவீட்டு பொங்கல் பற்றிய செய்தி எனக்கு புதுமையே.

தமிழ் தாத்தா உ.வே சாமிநாதையர், சிதலடமைத்த சங்க இலக்கிய ஏடுகளை மீட்டெடுத்து, வாசித்து, பதிப்பித்த பேருழைப்பை படிக்கும்போது ஒவ்வொரு தமிழனும் அவருக்கு நன்றி கடன்பட்டுள்ளோம் என்பது தெளிவாகிறது.

சமணத்திற்கும், பௌத்தத்திற்கும் சொந்தமான துறவறத்தை, வைதீகம் எப்படி தனக்கு சொந்தமாகியது என்ற கட்டுரை மிக முக்கியமான ஒன்று.

ராஜராஜ சோழன் ப்ராமணீயத்திற்கு எதிரானவனாக இருந்தாலும், ஒரு ஏகாதிபத்தியனாகவே வாழ்ந்துள்ளான் என்பதை கல்வெட்டும், அவன் காலத்தில் இருந்த சில நடைமுறைகளும் சாட்சி.
Profile Image for Unmaththan உன்மத்தன்.
Author 3 books18 followers
April 3, 2021
தொ.ப-வின் புத்தகத்தை பல மாதங்களுக்கு முன்பே படிக்க நினைத்து முடியாமல் போனது‌; அந்த ஏக்கத்தை இந்த புத்தகம் வழி துடைத்தெறிகிறேன். எனக்கு, தொ.பவின் இலகுவான மொழிநடையும் அடர்த்தியான தரவுகளும், தமிழின் 'யுவா நோவா ஹாராரி' இவர் என சொல்ல வைத்தது; அல்லது 'ஹராரி'க்கு சற்றும் குறையாத ஆள் நம் நிலப்பரப்பில் இருந்தார் என்றும் தயங்காமல் சொல்லலாம். உலகமயமாக்கலுக்கு இலையில் செய்த‌ பீப்பியை வைத்து எளிய விளக்கம் சொல்லுவற்கெல்லாம் ஆழமான அறிவில்லாமல் சாத்தியமில்லை. புத்தகத்தை படித்து முடித்ததும் உணவு, தெய்வம், சாதி, உலகமயமாக்கல், பொருளாதாரம் என இத்தனை விஷயங்களை 90 பக்கங்களில் படித்திருக்கிறேனா என்ற பிரம்மிப்பு படிந்த கையோடே இந்த பதிவிடுகிறேன்.
Profile Image for Karthik  Patturajan .
15 reviews
November 20, 2022
எண்ணத்தை கவர்ந்த விழிப்புணர்வு!

நன்மரபை பின்பற்ற மறந்த நிலையில் இருந்து, சாதிய தீண்டாமைகளையும், வகுப்புவாதம் எப்படி கட்டமைக்கபடுகின்றது என்றும், நவீன வாழ்க்கை முறையை வழிவகுக்க வைத்த உலக, உள்நாட்டு அரசியல் பின்புலத்தை விரிவாக பேசியிருக்கிறார் ஆசிரியர். விழிப்புடன் வாழ அவசியமான அறிவுரைகளை ஆழமாக எடுத்துரைத்துள்ளார்!

மற்றும் அறியப்படாத பல ஆச்சரியமும் திகைப்புட்டும் செய்திகளையும் துணிச்சலாக பேசியிருக்கிறார்!


வாசிக்க தவிர விட கூடாத சிறந்த புத்தகங்களில் இதுவும் ஒன்று!
Profile Image for Sanjeev Duglas.
89 reviews3 followers
May 2, 2021
தொ.பரவமசிவன் எண்ணங்களின் சில கட்டுரைகள்.இராசராச சோழனின் ஏக ஆதிபத்தியம் புது பார்வை.தெய்வங்களின் உணவுரிமை சற்று வேறுபட்ட சிந்தனை.
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.