நான் வாழப் பிறந்தவன். எனக்கு வழங்கப்பட்ட அதிகபட்ச நாட்கள் 36500. ஒரு முழு ‘ஒருநாள்’கூட மூச்சு விடாமல் வாழ எனக்கு அனுமதியில்லை. மண்ணில் ஓடி ஆடியும் விண்ணில் சிறகடித்துப் பறந்தும் ஆழ்கடலில் செதில் அசைத்து நீந்தியும் வாழ்வது என் பிறவி ஆசை இருப்பினும்..... இரண்டு கால்களுடன் மட்டுமே படைக்கப்பட்டிருக்கிறேன் ‘பண்டங்கள் கிடைக்கும்போது உண்பது கிடக்காதபோது உள்ளுறுப்பில் ‘இருப்பு’ வைத்ததை அசைபோட்டு ஜீரணிப்பது’ என்பது என் எதிர்பார்ப்பு. என்னைப் படைத்தவனிடம் அப்படியொரு திட்டமே இல்லை. என் உடம்பைப் பற்றி எனக்குத் தெரியும். எலும்பும் சதையும் நரம்பும் ரணமும் கலந்து செய்த தோல் போர்த்த பிண்டம் இது. என்னவள் சுமந்துகொண்டிருப்பதும்