முன்னுரையிலிருந்து “சுவரில்லாமலும் சித்திரம் வரையலாம்” தொடரை தினத்தந்தி இளைஞர் மலரில் எழுதிய அறுபது வாரங்களும் அலாதியானவை ! மேலே சொன்ன நிகழ்வைப் போல இந்தக் காலகட்டத்தில் நடந்த அனுபவங்கள் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு பெரியது. எஸ்.எம்.எஸ் அனுப்பும் நண்பர்கள், தொலைபேசியில் ஐடியா கேட்கும் ஆசிரியர்கள், நேரில் வந்து தழு தழுக்கும் முகம் தெரியாத நண்பர்கள் என இந்த அனுபவம் ரொம்பவே வித்தியாசமானது. “ஐ வாஸ் வெரி டிஸ்டர்ப்ட்… அப்போ ரொம்ப தப்பான ஒரு முடிவு எடுக்கிறதா இருந்தேன். உங்க கட்டுரை ஒண்ணைப் படிச்சப்புறம் அந்த முடிவைத் தள்ளி வெச்சுட்டு வாழ்க்கையைத் தொடர்கிறேன்” என உயரதிகாரி ஒருவர் என்னிடம் தனியறையில் உரையாடியபோது அச்சமும், மகிழ்வும் ஒரு &#