கருத்தமுத்துவின் முதற் காமம் ஜெஸ்ஸியில் நிகழ்கிறது. ஆனால் அது கிறித்தவ மதத்தை அறிதலும்கூட. உடலை, காமத்தை ஒறுக்கும் ஒரு மதத்தைக் காமத்தினூடாக அறிதல். அந்த அனுபவத்தின் பின்னணியாக அமைகிறது பழைய ஏற்பாட்டுப் பைபிளின் வரி: ‘சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு. இஸ்ரவேலரே ஆர்ப்பரியுங்கள். எருசலேம் குமாரத்தியே நீ முழு இருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு. உன் ஆக்கினைகளை அகற்று. திறந்த உடலைக் களிப்பாக்கு.’ *** இத்தகைய கதைக்கருக்களை எழுதத் தொடங்கியதுமே தமிழ் எழுத்தாளனுக்குக் கைநடுக்கம் தொடங்கிவிடும். பலநூறு முற்போக்கு இடக்கரடக்கல்களால் ஆனது நம் புனைவிலக்கியச் சூழல். பல்வேறு சாதிய அடியோட்டங்களால் அலைக்கழிக்கப்படுவது. இவை இரண்டுக்கும் நடுவே ஒருவகையான ‘சமநிலையை’ பேணிக் கொள்ளவே நம் படைப்பாளிகள் எப்போதும் முயல்கிறார்கள். சோ. தர்மன் ஒரு கிராமத்துக்காரருக்கே உரிய ‘வெள்ளந்தித்தனத்துடன்’ நேரடியாகப் பிரச்சினைகளின் மையம் நோக்கிச் செல்கிறார். ஆய்வாளனுக்குரிய தகவல் நேர்த்தியுடன் கலைஞனுக்குரிய நுண்ணிய நோக்குடன் ஒட்டுமொத்தமான சித்திரத்தை உருவாக்குகிறார். கருத்தமுத்து ஒரு ஆணாக, குடிமகனாக ஆவதன் நிதானமான மலர்தலை இதன் கதையோட்டம் காட்டுகிறது. நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புறச் சூழல்களை அவன் எதிர் கொள்கிறான். ஒன்று கல்வி, இன்னொன்று மதம், இணையாகவே காமம். ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்துகொள்கிறான். இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பைச் சென்றடைகிறான். ஒரு தேர்ந்த புனைவாளன் மட்டுமே உருவாக்கும் நுண்ணிய விளையாட்டுக்களால் ஆன புனைவுப் பரப்பு இது. - ஜெயமோகன்
Cho Dharman (born 8 August 1953) is an Indian Tamil writer. He was born in Kovilpatti Taluk in Tuticorin district of Tamil Nadu. The real name is S. Dharmaraj. Cho Dharman's novel Koogai, a stunning account of Tamil lives in post-independence India, was translated into English as The Owl. Cho, has authored nine books, won several awards and much critical acclaim for his novels, non-fiction and short stories. He won the Sahitya Akademi award in 2019 under Tamil language category for his novel Sool.
கிறிஸ்தவ மடங்களில் பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் காமத்தை ஒடுக்கி கட்டுப்படுத்தி கிறிஸ்தவம் கடைபிக்கப்படும் போது எவ்வாறான மீறல்களும் குற்றங்களும் நிகழ்கிறது என்று சொல்லும் படைப்பு, தனது தாய் மாமா பூமணி இடம் இருந்து படைப்பூக்கத்தை பெற்றதாக சொல்லும் சோ.தர்மன். பூமணியின் எதார்த்தவாதத்தை கையாண்டு வெற்றி அடைந்தாரா ? என கேள்வி எனக்கு எழுகிறது. பூமணியின் அத்தனை படைப்பும் அற்புதமானவை அனைத்தும் வாசித்த பிறகு தான் சொல்கிறேன். இவரின் கூகை , சூல், பதிமுனாம் மய்ய வாடி மூன்றையும் படித்து விட்டு தான் இந்த கேள்வியை கேட்கிறேன். ??
கருத்தமுத்து எளிய விவசாயின் மகன் வேலி ஓணாண் பிடித்து மூக்கு பொடி போட்டு விளையாடும் சிறுவன் வாழ்வின் அடுத்த கட்டத்தை எதிர்கொள்ள அவன் முன் இருக்கும் சவால் முதலில் கல்வி, மதம், காமம். பொதுவாக வறுமை இந்த வரிசையில் சேர்ந்து கொள்ளும் ஆனால் கருத்தமுத்து பெற்றோர் அதை அவனுக்கு அளிக்கவில்லை.. ஒரு பள்ளி மாணவன் வாழ்வின் வழியே ஒரு மனிதனாக மலரும் நிகழ்வு தான் மொத்த நாவல்.
நண்பன் விட்டுக்கு செல்லும் கருத்தமுத்து ஜெஸ்ஸியை சந்திக்கிறான். முதல் சந்திப்பிலே கருத்தமுத்துவை இழுத்து அனைக்கிறாள் ஜெஸ்ஸி? 🤔 அவனின் முதல் காமம் ஜெஸ்ஸி மீது நிகழ்கிறது. பாதிரியார் மகனுடன் காதல் வைத்து ஓடி போய் ஒரு மாதத்தில் திரும்பி வந்துவிடுகிறாள். திரும்பி வந்தவள் கன்னியாக வந்தால் என்கிறார்? எதார்த்தத்தில் இது சாத்தியம் இல்லை. ஏன் கன்னியாகவே திரும்பி வந்தவள் என்ற விளக்கமும் இல்லை. கடைசி வரை அக்கா என்றே ஜெஸ்ஸியை அழைக்கிறான் . இன்றைய 2k கிட்ஸ் சுதந்திரத்திற்கு முன்பே...
பள்ளி படிப்பை முடித்து கிருத்துவ கல்லூரி படிப்பில் சேர்கிறான் கருத்தமுத்து ஒரு பக்கம் கல்லூரி ஒருபக்கம் சுடு காடு சுடுகாட்டில் பிணம் எறிக்கும் அரியன் கருத்தமுத்து நண்பன். இங்கு தான் கருத்தமுத்து வாழ்வின் கொடூர மனிதர்களை சந்திக்கிறான், சமுகத்தின் அத்தனை குற்றங்களையும் நிகழ்தும் இடமாக கல்லறை இருக்கிறது. மறுபுறம் கல்லூரி மற்றும் விடுதியில் பாதிரியார்கள் ஏதோ ஒரு வகையில் யாரோ ஒருவர் உடன் உடல் தேவைக்கு உறவில் இருக்கிறார்கள், தங்களுக்கு எதிரானவர்களை பழி சுமத்தி பைத்தியம் ஆக்கி மரணிக்க செய்கிறார்கள். கன்னியாஸ்திரிகளும் பாதிரிமார்களும் எந்த இடத்திலும் தங்கள் மதத்தில் குறிப்பிட்டு இருப்பது போல வாழ்வது இல்லை என்பதை நிறுவ முயன்றிருக்கிறார் சோ.தர்மன் ஆனால் அவரை மீறி மத வெறுப்பு சில வெளிதெறிகிறது.
ஒன்று
கன்னியாஸ்திரிகளின் விடுதியில் சமையல் செய்யும் சமையல்காரன் ஆணும் மற்ற பெண்ணும் மற்ற ஒரு நபர். செந்தூர் கூர் மழுங்கிய அம்பு.அதிலும் எய்ய முடியாத அம்பு. எய்தாலும் உடலை துளைத்து உள் செல்ல முடியாத அம்பு.. ( அதாவது சிஸ்டர்கள் இவரை தங்கள் காம தேவைக்கு பயன்படுத்த முடியாதாம்)
இரண்டு
செந்தூர் காய்கறிகள் வங்க செல்கின்றன் அப்போது கருத்த முத்து கேட்கிறார் எண்ணே எதுக்கு இவ்வளவு வெள்றிக்கா? அது என்னவோ டா முத்து வெள்ளரிக்காய் எவ்வளவு கொடுத்தாலும் எனக்கு உனக்கென வாங்கிக்கிறாளுவ மூட்டை மூட்டையா வெள்ளரிக்காய் கொண்டு போய் கொடுக்கிறான் அவ அவ ரூமுக்கு எடுத்துகிட்டு போயிடுறா . கத்தரிக்காய் வாங்கலாம் இல்ல ? எவடா கத்தரிக்காய் கேட்கிறா அப்படியே வாங்கினாலும் நீளமா காம்பு இல்லாத கத்திரிக்காய் கேட்குறாளுங்க . (அதாவது சுய இன்பத்திற்கு கத்தரிக்காய் வெள்ளறியாம்)
தங்களுக்கு எதிராக இருக்கும் கன்னியாஸ்திரி அல்லது பாதிரியாரை பைத்தியம் என்று முத்திரை குத்தி ஒரு ஊருக்கு அனுப்பி சங்கிலியால் கட்டிப்போட்டு விடுகிறார்கள். அப்படி வருபவர்களுக்கு கைவிளங்கு கால் விளங்கு செய்வதற்கு ஒரு இடத்திற்கு செல்கிறார்கள். கை விளங்கு கால் விளங்கு செய்யும் இரும்பை இலவசமாக கொடுக்கிறார்கள் அதை செய்யும் ஆசாரியும் இலவரசமாக செய்து கொடுக்கிறான் கேட்டால் தொழில் தர்மம் என்கிறார்கள். ஏதோ பெரிய அற செயல் செய்வது போல் பில்டப்.செய்வது பாவ செயல் இதில் என்னடா உங்களுக்கு நாய மயிறு வேண்டி கிடக்குது ? .... ( இதான் எதார்தவாதமா )
மரக்கால் பாண்டியர் என்று ஒருவன் வருகிறான் அவன் மூலம் தன்னுடைய கம்யூனிச அரசியல் பார்வையை எழுத்தாளர் சொல்கிறார். அதாவது ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டு என்கிற மதம் ஒரு அங்கியை இழந்தால் பத்து அங்கியை கொடு என்கிற மதம் இவர்களை மழுந்தடித்து மரக்கட்டைகளாக ஆக்கிவிட்டது .இவர்கள் எப்படி அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பார்கள் ? சிறுபான்மையாக இருக்கும் கிறிஸ்தவர்களிடம் 45 சதவீத கல்வி நிலையங்கள் சென்று விட்டதால் இந்த நாட்டில் சுதந்திரம் அடைய வழி இல்லை அதாவது அவர்கள் மரக்கட்டையாக போய்விட்டார்களாம் போரட மாட்டார்களாம். கம்யூனிசம் இரண்டாக உடையாமல் இருந்தால் இந்த நாட்டின் பெரிய புரட்சி வெடித்திருக்கும் என்கிறார்.
என்னதான் கிறிஸ்தவர்கள் மதத்தை பரப்புவதற்காக கல்வி நிலையங்களை ஆரம்பித்திருந்தாலும் இந்த நாட்டில் பெரும்பான்மையர்களுக்கு கல்வி அளித்தது கிறிஸ்தவ நிறுவனங்கள் தான். என்பதை யாரும் மறுக்க முடியாது. ( ஏன் இந்துக்கள் இந்து பள்ளியை தொடங்கி கல்வியை அளிக்க கூடாது என்று ஏதேனும் சட்டம் இருந்ததா என்ன நீங்களும் செய்ய வேண்டியது தானே)
தனக்குத் தெரிந்த டெய்லரிடம் கூட்டிக்கொண்டு போனால் சுடலை மேஸ்திரியின் பெண்டாட்டி. ஏஞ்சல் முதல் முறையாக தன் உடலை அளவெடுத்தாள். தனக்கு இப்படி ஒரு உடல் இருப்பதையே நினைத்துப் பார்த்தால். பூக்களை பல வண்ணங்களில், படைத்து பூக்க வைத்த இறைவன் அதன் நிறத்தையும், அழகையும், வாசனையையும் நுகர விடாமல் பார்க்க விடாமல் ஆடை கொண்டு மூடி வைப்பானா அப்படியானால் அந்தப் பூவை ஏன் படைக்க வேண்டும்.? பூ என்றால் பூப்பது மட்டும்தானா ? பிஞ்சாக வேண்டாமா? காயாகி கனிய வேண்டாமா வம்ச விருத்திக்கான விதைகளை பூமியில் விதைப்பது யாரோ.
-நூலில் இருந்து....
பெண்களை வெறும் காமத்திற்கு பயன்படும் சதை பிண்டமாகவும், குழந்தைகளை பெற்று தள்ளும் மிஷின் ஆகவும் நினைக்கும் சுத்த மூடத்தனத்தின் உச்சம்.
கருத்தமுத்து ஏஞ்சல்ஸ் சிஸ்டர் உறவில் கருத்த முத்து நினைப்பது எல்லாம் நடக்கிறது எப்படி இதான் எதார்த்தவாதமா ? . கருத்தமுத்து எதார்த்தங்களோடு முட்டி மோதி ஒரு வழியில் கனிந்த நல்ல மனிதனாக ஆகிறான் அதுவே இந்த நாவலை சிறப்பான ஒன்று என்ற நம்பிக்கையும் ஆறுதலையும் அளிக்கிறது.
சிறந்த நாவல்களை எடுத்து படிக்கும் போது அந்த நாவல் முடிந்தவுடன் ஏதாவது ஒரு குறை இருந்துகொண்டே இருக்கும் . கதாபாத்திரங்களுக் கிடையேயான உறவுகள் இன்னும் ஆழமாக இருந்திருக்கலாம் என்று தோன்றும் , கதாபாத்திரங்கள் வாழும் , வலம் வரும் இடங்களின் வர்ணனைகள் இன்னும் விரிவாக இருந்திருக்கலாம் என்று தோன்றும�� . உரையாடல்கள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று தோன்றும் , சிந்தனை ஓட்டங்களின் வர்ணனைகள் அதிகமாக இருந்திருக்கலாம் என்று தோன்றும் , உணர்வுகளின் வர்ணனைகள் அதிகமாக பேசப்பட்டிருக்கலாம் என்று தோன்றும் . பலதரப்பட்ட புத்தகங்களை படிப்போருக்கு ஒவ்வொரு புத்தகத்தின் மீதான மதிப்பீடு இவ்வாறான குறை நிறைகளுடனே இருக்கும் . ஆனால் அப்படி எதுவுமே இல்லாமல் முழுமையான நாவலை வாசகர்களுக்கு வழங்கும் சமகால படைப்பாளிகளில் தர்மன் முக்கியமான இடத்தில் இருக்கிறார் . இந்த நாவலை படித்து முடித்தவுடன் தோன்றும் முதல் எண்ணம் இது தான் ஒரு முழுமையான நாவல் என்கிற எண்ணமே . எல்லாமே சிறப்பாக அமைந்து முடிவும் எல்லா கதாபாத்திரங்களுக்கும் நல் முடிவாகவே அமைந்ததாலே அப்படி தோன்றுகிறதா என்பது என் அறிவுக்கு புதிரே . காதல் , காத்திருப்பு , காமம் என்றில்லாமல் முறை மாற்றி வந்திருந்தாலும் அதை எடுத்து கொண்டு போய் முடித்தவிதத்தில் ஆசிரியர் கைதட்டல் வாங்கிவிடுகிறார் . அமைப்புகளின் தவறுகளை நேரடியாக தோலுரித்து காட்டி கொண்டே வரும் போது முடிவு ஏடாகூடமாக தான் இருக்க போகிறது என்கிற பதைபதைப்பு இருந்தது (அப்படி நடக்கவில்லை ) . மையவாடி , மடம் , கரி அள்ளும் இடம் என்று கதாபாத்திரங்கள் சுற்றும் இடங்கள் எல்லாம் சோகம் சூழ்ந்த இடமாகவே இருந்தாலும் வாசகருக்கு அந்த துக்கம் அப்பவில்லை . முக்கிய கதாபாத்திரத்தின் இளமைக்காலத்தில் நடப்பாதால் துக்கம் அப்பாமல் இருந்தது நல்லதே . ஆசிரியர் தர்மனின் சிறந்த படைப்புகளில் இதுவும் ஒன்று , வாசகர்கள் வாசிப்பனுபவத்திற்காகவே படிக்கவேண்டிய படைப்பிது .
கருத்தமுத்து எனும் இளைஞன் தன் வாழ்க்கை அனுபவங்களினூடே கிறிஸ்தவம், கல்வி மற்றும் காமத்தைப் பற்றி அறிதலை கூறுகிறது இந்நாவல். நிறுவனமயமாக்கப்பட்ட மதத்தையும், பாதிரியார்களின் ஊழல்கள், முறைகேடுகள் பற்றியும், துறவு எனும் போர்வைக்குள் காமம் எப்படி ஒழிந்துள்ளது என்பது பற்றியும் வெளிப்படையாக எளிய நடையில் கூறுகிறார் சோ.தர்மன். சில இடங்களில் அரசியல் கருத்துகள் திணிக்கப்பட்ட உணர்வை தருகின்றது. இந்துக்கள் அனைவரும் நல்லவர்கள் போல சித்தரித்து ஒன்றிரண்டு கிறிஸ்தவர்கள் தவிர மற்றவர்கள் அனைவரும் போலியானவர்கள் என்ற பிம்பத்தையும் சில இடங்களில் உருவாக்குகிறது.
தமிழில் கிறித்துவத்தை இப்படி வெளிப்படையாக விமர்சிக்கும் நாவல்கள் குறைவு, இது அவற்றில் உச்சமாக இருக்கும் என நினைக்கிறேன். பங்குத் தந்தைகளும் கன்னியாஸ்திரிகளும் புரட்டு செய்வதாகவோ அல்லது அவர்கள் நிஜமாகவே செய்யும் அனைத்து விதமான புரட்டுகளுமோ இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. படிக்கவே அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது.
ஒரு சிறுவன் வயதுக்கு வரும் நாவல் என்று இதைக் கொண்டாலும், அதைப் பின்னணியாக மட்டுமே பார்க்கவேண்டி இருக்கிறது. மணிரத்னம் தன் படங்களில் பெரிய பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதில் காதலை மட்டும் சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் தர்மன் வயதுக்கு வரும் ஒரு விடலையின் பரப்பைப் பின்னணியாக வைத்துக்கொண்டு அதைவிட பெரிய களத்தை நாவலில் சொல்லி இருக்கிறார். கன்னியாஸ்திரிகளுடன் உறவு, பெண்களுடன் உறவு, ஏமாற்று என பாதர்களை தேவைக்கும் அதிகமாகவே சோதித்துவிட்டார் தருமன். சில இடங்களில் இவை அத்துமீறுகின்றன என்பதையும் குறிப்பிடவேண்டும். குறிப்பாக, எந்த எந்தக் காயை வாங்குவார்கள் என்பதும், ஆணி அடிக்கவேண்டும் என்று கொச்சையாகப் பேசுவதும். இவை ரசக்குறைவு. தவித்திருக்கலாம்.
நாவலின் குறைகள் என்று பார்த்தால் பலவற்றைச் சொல்லலாம். முதல் குறை, அனைத்துப் பெண்களும் கருத்தமுத்துவைப் பார்த்த உடனே படுக்கைக்கு அழைப்பது. இத்தனைக்கு அவன் சிறிய பையன். கொடுமை. இதிலும் மிக மோசமான பாத்திரப் படைப்பு ஜெஸ்ஸி. தன் தாயை அவள் எதற்காக வெறுக்கிறாளோ அதையே அவளும் செய்கிறாள். பின்னராவது அதைப் புரிந்துகொண்டு அவள் தாயை ஏற்றுக்கொண்டிருப்பது போல் சித்தரித்திருக்க இருக்கவேண்டும். அப்படிச் செய்யாததால், ஜெஸ்ஸி கதாபாத்திரம் மிக மோசமான பாத்திரமாகத் தேங்கிவிட்டது. அதிலும் திருமணத்துக்குப் பிறகும் கருத்தமுத்துவுடன் உறவு, குழந்தை பிறந்தபிறகும் முத்தம் என்பதெல்லாம் கொஞ்சம் அதீதம். பிற குறைகள் — பல கதாபத்திரங்கள் அப்படி அப்படியே தேங்கி நிற்பது, நாவல் திடீர் திடீரென அறுந்து எங்கெல்லாமோ போவது, கடைசிச் சில பக்கங்கள் வேகமாகச் செல்வது, மீண்டும் மீண்டும் ஒரே போன்ற பாலியல் பிறழ்வுகளே கதைகளாக வருவது.
நிறுவனமயப்படுத்தப்பட்ட கிறித்துவத்துக்குள் இருக்கும் ஊழலை முன்வைப்பதே நாவலின் நோக்கம் என்றாலும், கன்னியாஸ்திரிகளின் தன்னலமற்ற தொண்டையும் இந்த நாவல் சொல்கிறது. குறிப்பாக, தொழுநோயாளிகளுக்கான மருத்துவம் குறித்த பக்கங்கள்.
மையவாடியைச் சுற்றி வரும் அத்தியாயங்கள் எல்லாமே அருமை. இந்த ஒன்றில் மட்டுமே தொடக்கம், மையம், முடிவு எல்லாமே ஒரே சீராக வெளிப்பட்டிருக்கிறது.
இறுதியில் வரும் கம்யூனிஸ்ட் ஒருவனின் சிந்தனை, இன்றைய ஹிந்துத்துவச் சிந்தனை போலத் தோன்றியது எனக்கு.
இத்தனையிலும் ஒன்றைக் குறிப்பிடவேண்டும். மிக எளிதாக கருத்தமுத்துவை ஹிந்துச் சிந்தனை கொண்டவனாகக் காட்டி இருக்கும் வாய்ப்பு இருந்தும், முற்போக்காகக் காட்டி இருக்கிறார் தர்மன். எனவே அவரது நோக்கம் ஹிந்து எதிர் கிறித்துவம் என்று நிற்பதல்ல, மாறாக, அவரை உறுத்திய கிறித்துவ மடங்களுக்குள் நிலவும் பாரபட்சங்களை முன்வைப்பதே என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
தைரியமான நாவல்தான். இது உருவாக்கும் வித்தியாசமான உலகுக்காக நாவலை நிச்சயம் வாசிக்கலாம்.
This entire review has been hidden because of spoilers.
தன் படைப்புகளில் தொடர்ந்து தாழ்த்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் வாழ்வியலை மையமாக வைத்து எடுத்துரைக்கும் சோ.தர்மன், அதேபோல் இந்நூலிலும் ஒரு குறிப்பிட்ட மதத்தை (கிறிஸ்தவம்)தழுவி வாழும் மனிதர்களின் வாழ்வியலை பெரிதாக எடுத்துரைக்கிறார். இந்நூல் மதத்தை பெரியளவில் சாடாமல் தாங்கள் கடவுளின் இறைத்தூதர்கள் எனக் கூறிக்கொள்ளும் மத போதகர்களை பெரிதும் சாடியிருக்கிறார்.
கருத்தமுத்து சிறுவயது முதலே காமத்தின் அறிவு அறியாது ஒரு வெள்ளந்தியாகவே வலம் வருகிறான்.பின்பு மெதுவாக காமத்தின் பால் மிகுந்த ஈடுபாடும் இல்லாமல் அதை ஏற்க பிடிக்காதவனாகவும் அல்லாமல் இரண்டிற்கும் இடைப்பட்டவனாய் திகழ்கிறான். நாவல் தொடங்கும் போது மூன்று வகையான அகப்புற சூழல்களை அவன் எதிர்கொள்கிறான் ஒன்று கல்வி ,இன்னொன்று மதம், இணையான காமம். ஒவ்வொன்றையும் அவன் தன்னளவில் புரிந்து கொள்கிறான் இந்த மூன்றும் ஒன்றுடன் ஒன்று பின்னி உருவாகியிருக்கும் ஒரு பெரும் பரப்பை சென்றடைகிறான்.
இக்கதையில் எனக்குப் பிடித்த தனிப்பட்ட கதாபாத்திரத்தின் கருத்து "ஆசைகளை அடக்கிட்டு என்னம்மா வாழ்க்கை .இந்த ஆசைகளை குடுத்தது ஒங்கள படைச்ச ஆண்டவன் தானே, பெறகு அவர் எப்படி சொல்லுவார் ,எல்லா ஆசைகளையும் அடக்குனாத்தான் மோட்சம்னு"
நாவல் ஒரு பிரச்சனைக்கான தீவிரமான விவாதத்தை முன் வைக்க விரும்பவில்லை ,மாறாக சமூக வலைதளங்களில், டீக்கடைகளில் நடக்கும் திண்ணைப் பேச்சுக்களைப்போல் பொதுபுத்தி அபிப்பிராயங்களையே கதாபாத்திரங்களும் கதைகளும் வெளிப்படுத்துகின்றன. பெரிதாக சமூக கருத்துக்களை எடுத்து வைக்காமல் அதன்பால் தனக்கு உள்ள வன்மத்தை மிகுதியாக வெளிப்படுத்துகிற மாதிரி அமைந்துள்ளது சறுக்கல். எனினும் இவரின் படைப்புகளை போல் சமூகம் சார்ந்து இல்லாமல் இருந்தாலும் கதை சுவாரஸ்யமாக நகர்வதால் படிக்கும் ஆர்வம் மேலெழுகிறது.