சாக்கடல் (Dead Sea) என்ற பெயரில் ஒரு கடல் இருக்கிறது. ஆனால் அது சாவை ஏற்படுத்தாத கடல். சாக்கடலில் ஒருவர் இறங்கினால் அவர் மூழ்கி இறந்து போக மாட்டார். சாக்கடலில் ஒருவர் கால்களை நீட்டிக்கொண்டு, ஜாலியாக நீரில் மிதந்தபடி, கையில் நியூஸ் பேப்பரை வைத்துக்கொண்டு படித்துக் கொண்டிருக்கலாம். மனிதன் மிதக்கக் கூடிய கடல் என்றால் அது சாக்கடல் மட்டும் தான் என்று சொல்லலாம். சாக்கடல் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இப்புத்தகத்தில் உள்ளன.