கதையாக இருப்பதை கதையற்றதாக மாற்றுவது, கதைத்தன்மையே இல்லாத ஒன்றைக் கதையாக உயர்த்துவது. கதைகளுக்குள் கதை என்று வட்டச் சுழற்சியை ஏற்படுத்துவது. எதார்த்தத் தளத்திலிருந்து கற்பனைப் பரப்புக்கோ அல்லது அமானுஷ்யமான வெளிக்கோ புன்னவைக் கொண்டு செல்வது. வாழ்வின் வியப்புகளை மிகையில்லாமலும், அற்புதங்களை இயல்பாகவும் சித்தரிப்பது. வழக்கமான சிறுகதைகளின் இலக்கணத்தை எப்போதும் கடந்து செல்வது. இந்தச் செயல்கள் அனைத்தையும் வாசகன் ஏற்றுக் கொள்ளும் சுவாரஸ்யத்துடன் முன்வைப்பது, யுவன் சந்திரசேகரின் இந்த ஆறாவது தொகுப்பிலுள்ள 14 சிறுகதைகளிலும் இந்தப் பொதுத் தன்மையைக் காணலாம்.
கூடவே ஆழ்மன விசாரத்தையும் விளையாட்டின் விைனையப் பற்றிக் கவனம் கொள்ளும் பக்குவத்தையும் காண முடியும். முந்தைய கதைகளில் தென்பட்ட வெகுளித்தனமான கதையாடலுடன் புதிய கதைகள் புலனாகும் இம் மாற்றம் 'ஒற்றறிதல்' தொகுப்பை அவரது பிற தொகுப்புகளிலிருந்து வேறுபட்டதாக்குகிறது.
Yuvan Chandrasekar (b. 14 December 1961) is a Tamil writer, poet, translator, whose works bring out a postmodern aesthetic. He wrote poetry under the name of M. Yuvan. Yuvan Chandrasekar's works express a kind of magical realism which he classifies as 'alternate reality'.
புரியும் படியாக எழுதுவதில் என்ன சிக்கலோ யுவனுக்கு. படிப்பவர்களை கொஞ்சம் கணக்கில் கொள்ளுங்களேன். மறு முறை வாசித்தால் புரியலாம் புரியாமலும் போகலாம். படித்ததையே திரும்பத் திரும்ப படிக்க வாசிப்பவன் தேர்வுக்கா தயாராகிறான்?.
வாசகன் எத்தனையோ இடியாப்பச் சிக்கல்களில்தான் தங்கள் எழுத்துக்களைத் தேர்ந்தெடுக்கும் நேரம் நீங்கள் தரும் பெரும் சிடுக்குகள் பெரும்பாலும் தலைவலியையும் தூக்கத்தையும், துக்கத்தையும் கொடுத்து விடுகிறது. மனம் ஏற்க முடிவதில்லை சில ஏமாற்றங்களை பார்க்கும் போது.