எல்லோரும் அவளை அப்படிதான் அழைப்பார்கள். அவளின் முழு பெயர் வீரமாக்காளி! சென்னையில் இருந்து சிலதூரங்களைக் கடந்து வந்தால், செங்குன்றத்தில் கோவில் கொண்டுள்ள வீரமாக்காளி அம்மன்தான் அவளின் குலதெய்வம். வீட்டின் மூத்த மகளுக்கு குல தெய்வத்தின் பெயரை வைக்க வேண்டுமாமே! அப்படி ஒரு சம்பிராதயத்தை எவன் கண்டுபிடித்தானோ அவன் மட்டும் அவள் கையில் கிடைத்தால் அவ்வளவுதான்! துவம்சம் செய்துவிடுவாள். அவளுக்கு அந்த பெயரை அந்தளவுக்குப் பிடிக்காது. அப்படி யாராவது அவளை விளித்தால் அவள் உண்மையிலேயே பத்ரகாளியாய் மாறிவிடுவாள். ஆதலாலயே அந்த பெயரை சொல்லி யாரும் அவளை அழைக்க மாட்டார்கள். சுருக்கமாய் வீரா என்றே அழைப்பர். விசில் சத்தம் பத்தல என்று சொன்னது தான் தாமதம்.
Nice story. I am great fan of you Monisha, very interesting and eager to read your novels. As expected , this story is great, depicting poor women's struggle in their life