Jump to ratings and reviews
Rate this book

பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்

Rate this book
மனுஷ்ய புத்திரனின் ‘பிக் பாஸ் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’ கவிதை சமூக வலைத்தளங்களில் ஒரு நவீன கவிதை டிரெண்டிங்காக மாறி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கான முன்னுதாரணமாக அமைந்தது. ஆயிரக்கணக்கானோரால் பகிரப்பப்பட்டு, விவாதிக்கப்பட்டு, ஆங்கில மலையாள மொழிகளில் உடனடியாக மொழி பெயர்க்கப்பட்டு, சமகாலத்தின் சாட்சியமாக அக்கவிதை மாறியது. இத்தொகுப்பில் உள்ள மெரினா: கலைக்க முடியாத கனவு கவிதை, ஜல்லிக்கட்டிற்காக மெரினாவில் கூடிய மக்கள் பெருந்திரள் குறித்த ஒரு அற்புதமான சித்திரத்தை வழங்குகிறது. நவீன ஊடகவெளியினால் நம் உறவுகளில் வினோத திரிபுகளை ஃபேக் ஐடி குறித்த கவிதைளில் எழுதிச் செல்கிறார்.

191 pages, Kindle Edition

First published January 1, 2017

9 people are currently reading
2 people want to read

About the author

Abdul Hameed Sheik Mohamed

45 books49 followers
Manushya Puthiran is a pen name of the poet, Abdul Hameed Sheik Mohamed who was born in the small town of Thuvarankurichi in Tiruchirappalli. He began his literary career in the early 80s at the very young age of 15, his first poem got published. In 2002, he was awarded the Sanskriti National Award for his outstanding contribution to Tamil literature as a young writer.

Over the past two decades, several of his poems got published in popular Tamil Magazines like Ananda Vikatan, Kumudam, Kalki and Kalachuvadu. His political and topical columns are regular in Tamil periodicals such as Kungumam, Nakeeran and Tamil popular daily Dinamalar.

He is known for his progressive views on various socio-political issues like capital punishment abolition, caste system annihilation, women liberation etc.

Now he lives in Chennai He is running Uyirmmai publication and Uyirmmai magazine.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
4 (66%)
4 stars
1 (16%)
3 stars
1 (16%)
2 stars
0 (0%)
1 star
0 (0%)
Displaying 1 of 1 review
Profile Image for Elayaraja Subramanian.
130 reviews8 followers
February 13, 2021
மனுஷ்யபுத்திரன் கவிதைகளில் ஒன்றிரண்டு கவிதைகளை முகநூலில் உலாவும் போது கண்ணில் பட்டு வாசித்திருக்கிறேன். ஆனால் அவரது கவிதை தொகுப்பு ஒன்றினை வாசிப்பது இதுவே முதன்முறை. இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் நான் முழுதாக படித்து முடித்த முதல் கவிதை தொகுப்பே இது தான். தபூ சங்கர் கவிதைகளையும், நூலகத்திலிருந்து எடுத்து வந்து கலாப்பிரியாவின் கவிதைத் தொகுப்பில் ஒரு சில பக்கங்களையும், அப்துல் ரகுமான் அவர்களின் கவிதை தொகுப்பில் சில கவிதைகளையும் வாசிக்க முயற்சித்திருக்கிறேன். அதெல்லாம் என்னுடைய கல்லூரி காலத்தில் செய்தவை. கவிதைகள் வாசிப்பு முயற்சியினை நான் அப்போது மேற்கொள்ள காரணம் கவிதைகள் மீது கொண்ட காதலோ ஈர்ப்போ அல்ல. எதுகை மோனை வார்த்தைகளை ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதி அதிகம் கவிதைகள் பரிச்சியமில்லாத நண்பர்களிடம் காண்பித்து என்னை ஒரு கவிஞனாக அவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த காலமது. அவ்வாறு கவிதை எழுத முயற்சிக்கும் சில சமயங்களில் வார்த்தை வறட்சி ஏற்பட்டு கவிதை முட்டுச் சந்துக்குள் மாட்டிக்கொண்டுவிடும். அந்த வார்த்தை வறட்சியினைப் போக்கிடவே கவிதைகள் வாசிக்க அப்போது முயற்சித்தேன். என் எதுகை மோனை கவிதைக்கு ஒரு சாம்பிள்.

தட்டு நிறைய
எட்டு இட்லிகள்..
அத்தனையும் சாப்பிட்டும்
அடங்க மறுக்கிறது
ஆண்டாண்டு காலமாய் இருக்கும் ஒரு
அகோரப் பசி..!

இந்த அடடே ஆச்சர்யக்குறியை நான் எப்போதும் தவறவிட்டதேயில்லை. ஒரு வகையில் எனக்கு இந்த கவிதை வடிவத்தை ஒரு பணியாரக் கவிதையின் மூலம் அறிமுகம் செய்து வைத்தது ஆசான் பார்த்திபன் அவர்கள் தான். அன்று முதல் இன்று வரை (ஆமாம் இன்று வரையில் கவிதை இயற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்) எதுகை மோனை வார்த்தைகளை எடுத்துப் போட்டு தீட்டிவிடுவேன் கவிதைகளை. கவிதைகள் பரிச்சியமில்லாத நண்பர்கள் "ஆஹா" , "ஓஹோ"வெனப் பாராட்டும் போது கொஞ்சம் குற்ற உணர்வாகத்தான் இருக்கும். ஆனால் இந்த எதுகை மோனை பணியார பாணியை வைத்தே 20 பேருக்கும் மேல் கலந்து கொண்ட கல்லூரி தமிழ் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட கவிதைப் போட்டியில் முதல் பரிசு வென்றேன் என்பதை கொஞ்சம் பெருமையோடும் அதிக தன்னடக்கத்தோடும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புத்தகம் குறித்து பேச வந்த பதிவில் என் வரலாறு பற்றி பேசிக் கொண்டிருப்பதற்கு காரணமிருக்கிறது. கவிதைகள் என்றாலே அதன் பொருள் வாசிப்பவர்க்கு முதல் வாசிப்பிலேயே புரிந்துவிடக் கூடாது. அப்படி எழுதப்பட்டிருந்தால் தான் கவிதை என்பதே எனது எண்ணமாக இருந்ததால் தான், நான் ஒன்றின் கீழ் ஒன்றாக எதுகை மோனையோடு எழுதுவதெல்லாம் கவிதைகள் என்று சொல்லிக் கொள்வதற்கு தயக்கம் கொள்வேன். ஆனால் என்னுடைய புரிதல் தவறு என்பதை, எளிமையான வார்த்தைகள் கொண்டு சட்டென புரிந்துவிடும் படியான மனுஷின் இந்த கவிதை தொகுப்பினை வாசித்திடும் போது உணர்ந்துக் கொண்டேன். இதிலும் "ஆஹ் என்னாது" என்று கவனத்தை நடு நெற்றிக்கு கொண்டு வந்து மீண்டும் வாசிக்கச் செய்யும் கவிதைகள் இருக்கின்றன. ஆனால் அவை என்னுடைய கவிதை அறிவு குறைப்பாட்டின் காரணமாக கூட இருக்கலாம்.

"பிக் பாஸ் எல்லாற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்" கவிதையினை அவர் எழுதியிருந்த அந்த காலகட்டத்திலேயே முகநூலில் வாசித்திருக்கிறேன். படித்ததுமே "அட செம்மையா இருக்கே" என்று வாய் விட்டு சொல்லுமளவிற்கு ரசித்தேன். புத்தகத்தின் தலைப்பிற்க்காகவே இந்த கவிதை தொகுப்பினை வாசித்தேன். "அடடே" ரகக் கவிதைகள் நிறையவே இருக்கின்றன. பேக் ஐடி கவிதையும், ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின் நிகழ்ந்த அரசியல் விளையாட்டு பற்றிய கவிதையும், ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்த கவிதையும், சமாதானம் என்ற கவிதையும் ரசித்தவை. பனி, நிலவு குறித்து அதிகம் கவிதைகள் எழுதப்பட்டு வாசித்திருக்கிறேன். ஆனால் வெயில் குறித்து இத்தனை கவிதைகளை அதுவும் ஒரே தொகுப்பில் இப்போது தான் வாசிக்கிறேன். கவிதைகள் எழுதப்பட்ட காலம் கோடை காலம் என்பதால் போல. அதே போல இறந்து போன எழுத்தாளர்கள் பற்றிய கவிதைகள் நிறையவே இருக்கின்றன. "இறந்தவர்களின் புத்தகங்கள்" என்ற ஒரு கவிதை அட்டகாசமாக இருந்தது.
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.