நாயகன் சஷிவர்ணாவுக்கும் நாயகி சகானாவுக்கும் இடையில் நடக்கும் எதிர்பாராத திருமணமும், சகானாவின் காதலை ஏற்க மறுக்கும் வர்ணாவின் பிடிவாதமும் என ஆரம்பமாகும் இந்த கதை இருவருக்கும் இடையே நடக்கும் உணர்வு பூர்வமான காதல் போராட்டத்தையும் அவர்கள் வாழ்வில் ஏற்படும் தடைகளையும் மையமாக கொண்டு பல வித திருப்பங்களுடன் நகர்கின்றது. மேலும் உணவு உற்பத்தியின் போது தொழிற்சாலைகளில் நடக்கும் அளவுக்கு அதிகமான ரசாயன சேர்க்கை பற்றியும் சில கருத்துக்கள் உள்ளடங்கி உள்ள இந்த நாவலை படித்து உங்கள் கருத்துக்களை தெரிவித்துக் கொள்ளுங்கள்.
நல்லவன். ஆம், நல்ல அண்ணன், நல்ல மருமகன், நல்ல காதலன். ஆனால், ஆரம்பத்தில் நல்ல கணவனாக இல்லாமல் இருந்தவன், பின் தன் காதலால் அதை சரிசெய்கிறான்.
நாயகி : சஹானா
குழந்தை தனமான குட்டி தேவதை. எதிரிக்காகவும் வருந்தும் இரக்ககுணம் நிரம்பப் பெற்றவள். வர்ணா மேல் அதிகமான காதலைக் கொண்டுள்ள, காதல் தீவிரவாதி. காதலால் பல இன்னல்களையும் சந்திக்கிறாள்.
ஆம், உண்மையிலேயே கெட்ட வில்லன் தான். வர்ணா மற்றும் சஹானாவின் பிரிவிற்கு மட்டும் அல்ல, ஏராளமான குழந்தைகளின் உயிருக்கும் எமனாகும், வில்லன்.
சூழ்நிலை கைதியாக காதலியைப் பிரிந்து (காரணம், சஹானா), சஹானாவை திருமணம் செய்கிறான், வர்ணா. ஆம், திருமணம் மட்டுமே செய்கிறானே ஒழிய, தன் காதலை தர மறுத்துத் தவறு செய்கிறான். மனைவிக்கு தராமல் யாருக்கோ???. "வேறு ஒருத்தியை காதலிக்கிறேன். நீ போய் தொலை" என்று வாய்வார்த்தையாக கூட, சொல்லக்கூடாத வார்த்தையை சஹானாவிடம் கூறி தவறு செய்கிறான் (அதற்குத் தூண்டுகோள் சஹானா தான்). அதனால், தன் காதல் தோற்ற உணர்வில் மனதளவில் நொறுங்கிப்போகிறாள், சஹானா. தூக்குதண்டனை கைதிக்குக் கூட, தன் பக்க நியாயத்தைக் கூற வாய்ப்பு கிடைக்கும். உயிர்க்காதலனுக்கு எந்த வாய்ப்பும் தரமறுத்து, தானும் தவறு செய்கிறாள், சஹானா. விளைவு, (ரஞ்சனின் தயவால்) சஹானாவின் மூன்று வருட சிறைவாசம். மூன்று வருட சிறை காலத்தில், சஹானாவின் நிலையில் இருந்து யோசித்து, சஹானா மேல் காதல் கொண்டு, காதல் பைத்தியம் ஆகிறான், வர்ணா. அதே நேரம், மனதால் நொறுங்கிய காரணத்தால், வர்ணாவைத் தவறாகப் புரிந்து கொண்டு, வர்ணா மேல் கோபம் கொண்டு, அவனை வெறுக்கிறாள், சஹானா.
சஹானாவின் மூன்று வருட சிறைவாசத்திற்கு பின்,
வர்ணாவும் சஹானாவும் இணைந்தார்களா? ஆம் எனில், எப்படி இணைந்தார்கள் என்பதை ஒரு சமூகப் பிரச்சனையுடன், உணர்வுபூர்வமாக, அருமையாக, அழகாக கதையை நகர்த்தி செல்கிறார், ஆசிரியர்.
From starting to ending the story move smoothly. Acceptable story don't have over dreaming line. With in the love one important story line hiding. Recent days problem only. Author handle both the love and crime. But love is highlighted.....