பேன்டசி வகையறா தான் இந்தக் கதை. ஆண்மை ததும்பும் கம்பீர எதையும் தன் கண் அசைவிலே நடத்தி முடிக்கும் பணக்கார ஆண்மகன் அவனின் செய்கைக்குக் கட்டுப்பட்டு வீம்பு பேசினாலும் அடங்கி ஒடுங்கி போகும் பெண்.
கந்தர்வ மணம் புரிந்த பிறகு அவன் வேறு ஒரு பெண்ணிற்கு நிச்சயக்கப்பட்டவன் என்று தெரிந்து விலகி ஓடிய மேக மித்ராவை பாசத்தைக் காட்டி பயப்படுத்தித் தன்னை உலகறிய திருமணம் செய்யும் அரச குடும்பத்தைச் சேர்ந்த நவாப் ரஃபிக். எப்படி அந்தத் திருமணத்தை நடத்துகிறான் என்று பக்கத்தை நீட்டி முழக்கி சொல்வதைத் தவிர்த்து இருந்தாலே இது அழகான காதல் கதையாக வந்து இருக்கும்.