என் நாடு இந்தியா. நான் இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இந்த நூலை வாசிக்கத் தயாராகும் உங்களிடம் சில கேள்விகள்?. இந்தியாவைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்? காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரைக்கும் உள்ள மொத்த இந்திய நிலப்பரப்பு குறித்து உங்களுக்கு ஏதும் தெரியுமா? இங்குள்ள மொழிகள், பலதரப்பட்ட கலாச்சாரம் குறித்து உங்களுக்கு முழுமையான புரிதல் உண்டா? இந்தியாவின் கிழக்கு மேற்காக, தெற்கு வடக்காகப் பயணப்பட்டதுண்டா? குறைந்தபட்சம் பள்ளிக்கூடங்களில் மனப்பாடம் செய்வதற்காகப் படித்த இந்தியச் சரித்திரத்திற்கு அப்பாற்பட்டு புத்தகங்கள் வாயிலாக இந்த நாட்டைப் பற்றிப் புரிந்து கொள்ள முயன்றதுண்டா? 90 சதவிகித இந்திய மக்கள் நிச்சயம் இல்லை என்றே சொல்லக்கூ