ஆண்களுக்கான எச்சரிக்கை குறிப்புகள் என்பதைப் பார்த்தவுடனே கண்டிப்பாக “அனுபவ” குறிப்புகளை அள்ளி தெளித்து “பார்.... எவ்வளவு அவதி படுகிறேன்... நீயும் அப்படிதான் ஆவாய்” என்று சொல்லப்பட்டிருக்கும் என்ற முன்முடிவுடன் தான் படிக்கத் தொடங்கினேன்.
படிக்கத் தொடங்கிய முதல் பக்கத்திலே முகத்தில் வந்து ஒட்டிக்கொண்ட சிரிப்பு கடைசிப் பக்கம் வரை அங்கேயே தான் தங்கி இருந்தது.
ஆண்களுக்கான அவதிகளைப் பட்டியல் போட்டு எப்படியெல்லாம் மாற வேண்டியிருக்கும் என்பது நமக்கு ‘ரசனை புலம்பலாக’ தான் தெரிகிறது.
வாரமலரில் வரும் “மனைவி ஜோக்ஸ்” ரசித்துப் படிப்பவர்களுக்கு இந்தப் புத்தகமும் பிடிக்கும்
Wow... What a narration... Loved it. All the issues are true. I was smiling from the page one to last. But from their point of view they will also provide a biggggg list. (Yaru adi vangurathu)