ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மயூரியின் அக்கா மாதவி காதல் என்று வீட்டை விட்டு வெளியேறி விட்டாள்.இன்று வரை ஒரு தகவலுமே கிடையாது... திடீரென்று ஒரு விபத்தில் மாதவி இறந்து விட்டாள். கடைசி மூச்சோடு மயூரியை அழைத்து தன் இரு சிறு குழந்தைகளை அவளிடம் ஒப்படைத்தாள்.. அது மட்டும் அல்லாமல் தன் கணவன் தயாசாகரின் குடும்பத்தினரிடமிருந்து மறைந்தே வாழ வேண்டும், அவர்களால் ஆபத்தே வரும் என்று வலியுறுத்தி விட்டு மறைந்தாள். மயூரி பாவம்.. பெற்றோரை இழந்த அக்கா குழந்தைகளைத் தேற்றுவாளா? அக்காவை நினைத்து அழுவாளா? தன் வயிற்றுப் பிழைப்புக்கான வேலையைப் பார்ப்பாளா? அல்லது குழந்தைகளைத் தன்னிடம் கொடுத்து விடுமாறு வற்புறுத்தும் தயசாகரின் தம்பி வித்யாசாகரிடம் போராடுவாளா?
Ramanichandran (Tamil: ரமணிசந்திரன்) is a prolific Tamil romance novelist, and presently the best-selling author in the Tamil language.
She was born to Ganesan and Kamalam in Kayamozhi Village near Thiruchendur in South Tamil Nadu. She began her writing career in the 1970s. Her first well-known novel was 'Jodi Purakkal'.
She has written 178 novels, most of which first appeared serialized in magazines like Kumudam and Aval Vikatan and were later brought out in book format by Arunodhayam. Some of her famous novels are Valai Osai, Mayangugiral Oru Maadhu, Venmayil Ethanai Nirangal, Adivazhai.
The plot was really weak. Through out the book she questions herself why she is doing exactly what her late sister requested not to. She seemed to do just the things that would keep her on edge and add drama to her life instead of being practical.
தன்னைச் சுற்றி இருப்பவர் அனைவரும் நல்லவர்களே என்று நினைப்பது அறியாமையே அதற்கான விலையைக் கொடுத்த பிறகே அதை உணர முடியும்.
காதலித்தவனுடன் சென்ற அக்கா ஐந்து வருடங்களுக்குப் பிறகு விபத்தில் மாட்டி அதில் கணவனை இழந்து உயிருக்கு போராடி கொண்டிருந்தவள் தங்கை மயூரியை அழைத்துத் தன் இரு பிள்ளைகளை ஒப்படைத்து இறந்து போனது அதிர்ச்சியே.
பிள்ளைகளைத் தேற்றி சராசரி வாழ்க்கைக்குத் திரும்பும் போது என் அண்ணன் குழந்தைகள் எங்கள் வீட்டில் தான் வளர வேண்டும் என்று வித்யாசாகரன் வந்து நிற்கிறான்.
கணவன் குடும்பத்து ஆட்கள் மோசம் என்று அக்கா சொல்லியதால் குழந்தையை அவனுடன் அனுப்ப முடியாது என்று முரண்படுபவளையும் தன்னுடனே அழைத்துச் சென்று தங்களின் குடும்பத்தைப் புரிந்து கொள்ளச் செய்கிறான் வித்யாசாகரன்.
அவ்வீட்டு தலைவனின் தம்பி மகனான சுந்தரேசன் சொத்துக்காக வித்யாசாகரனின் அண்ணன் மனதில் குடும்பத்தைப் பற்றித் தவறாகப் பதிய வைத்ததைப் புரிந்து கொள்கிறான், வீட்டிற்கு வந்த அண்ணன் பிள்ளைகளைக் கொலை செய்யும் வரை சென்ற பிறகே இந்த உண்மைகள் தெரிய வருகிறது.
அக்கா குழந்தைகளுக்காக என்று அங்கே வந்த மயூரிக்கு வித்யாசாகரனால் புதுவாழ்க்கை உண்டாகுகிறது.