Jump to ratings and reviews
Rate this book

புகார் நகரத்துப் பெருவணிகன் [Pukar Nagarathu Peruvanigan]

Rate this book
ஆயிரமாண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தின் கதை. அன்றைய தமிழர்கள் எந்த அளவுக்கு உயர்ந்திருந்தனர், எந்த அளவுக்குச் சிந்தித்தனர் என்பதை ஆவணப்படுத்தும் நாவல். இதில் வரும் பல்வேறுபட்ட விவரங்களை நம்மால் கலைக் களஞ்சியத்தில் கூடப் பார்க்கமுடியாது. நாவலாசிரியர் பிரபாகரன் இந்த நோக்கில் யாரும் தொடமுடியாத உயரத்தைத் தொட்டிருக்கிறார்.


நம் பழமையையும் பாரம்பரியத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் கதை இது. இதில் மன்னர்கள் வருகிறார்கள் என்றாலும் கதை அவர்களைப் பற்றியது அல்ல. எளிய மனிதர்களே இதில் அசாதாரணமான கதாநாயகர்களாகவும் நாயகிகளாகவும் வெளிப்படுகிறார்கள். அவர்களுடைய சாமானிய வாழ்க்கை அனுபவங்களைத்தான் நாவல் சொல்கிறது.

570 pages, Kindle Edition

Published January 1, 2019

10 people are currently reading
21 people want to read

About the author

B. Prabhakaran

8 books8 followers

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
16 (41%)
4 stars
15 (38%)
3 stars
5 (12%)
2 stars
2 (5%)
1 star
1 (2%)
Displaying 1 - 12 of 12 reviews
Profile Image for Sudeeran Nair.
93 reviews20 followers
November 23, 2022
புனைவுக் கதையில் சொல்லப்பட்ட வரலாற்றின், பாரம்பரியத்தின், கடலோடிகளின் பெருந் தகவல் களஞ்சியம். வேகமான வாசிப்பு நடை. அபரிமித தகவலுக்காகவே எழுத்தாளனைப் பாராட்டாலாம். அதுவே கதையின் ஆணிவேரும் அதை வெட்டும் கோடாரியும்.



Profile Image for Madharasan.
22 reviews5 followers
May 4, 2020
தமிழர்களின் வணிக ஆளுமை பற்றிய புதினம் இது. தமிழரின் பெருமையினை வாய் சவடாலாக மட்டும் இல்லாமல் தரவுகளின் அடிப்படையில் நமக்கு வெளிக்கொணர்கின்றது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள பலவும் நம்மை வியக்க வைக்கின்றன.

மேலும் இதன் மொழி நடைக்கே தனி இடம் தர வேண்டும். ஆசிரியர் எளிய தமிழில் ஆனாலும், மிக அழகிய சொற்களை கையாண்டு இருக்கின்றார். தமிழில் தான் எவ்வளவு அழகான சொற்கள் உள்ளன😍...

இது போன்ற நூல்கள் பலவும் வெளிவரவேண்டும். தமிழரின் பெருமையினை அறிவியல் கொண்டு நிருவினாலும், இக்காலத் தலைமுறையினர்க்கு அதனை கொண்டு செல்ல இத்தகைய புதினங்கள் பேருதவியாய் இருக்கும்.

[இது புதினமாக மட்டும் இல்லாமல், தரவுகள் பலவற்றையும் தற முயன்றுள்ளதால் ஆங்காங்கே பெரும் பட்டியல்கள் காணப்படுவதும், செய்முறை விளக்கங்களும் சில இடங்களில் சலிப்பைத்தருகின்றது. எனினும் துறை வல்லுநர்களுக்கு அவ்வாறு இருக்காது என நினைக்கின்றேன்]
18 reviews
October 25, 2020
Novel with a wealth of information

This work has a wealth of information on ancient tamil culture. Often it becomes an information overload as one feels the author has tried to fit in everything that he knows without context. However, the minutae on navigation, sericulture, horse training etc are really interesting.
There is enough information with the author to write a non- fictional version about the life and times of sea faring tamils.
On the flipside, the prose is very ordinary and first 50 pages are a bit drab. overall definitely worth reading. I wish the author had given a index of works that he used to source the information for this book.
6 reviews
February 5, 2021
Detailed narration

This novel narrates the sea trade during chola period. The details about the life style, govt establishments, rules and regulations, trade conditions, shipping practices everything is presented in an interesting manner. Lively story..kudos to the author
Profile Image for S. Suresh.
Author 4 books12 followers
December 1, 2020
In Pukar Nagarathu Peruvanigan, Prabhakaran has portrayed the culture, business prowess, and seafaring excellence of Tamil people from an undated era where everything seems to be at the pinnacle of their glory. His story is set in the ancient trading town of Pukar in Chola kingdom. Prabhakaran’s story portrays a Tamil culture that has embraced the core principles of capitalism, a society that is progressive, with technology and knowledge that can decidedly be the envy of even today.

Unfortunately, it is unclear if the author wanted to write a historical fiction, or a non-fictional book on the history and culture of Tamil people. If it is the former, he surely has the liberty to portray life as his imagination sees fit, even if I found it difficult to accept concepts that were downright unbelievable, such as bare breasted women serving men alcohol in watering holes. Particularly jarring was the detailed description of bikini tops as something women would wear while bathing and swimming (page 277). If it is the latter, he should have provided authentic sources to substantiate his claims for a fact-based book in history and Tamil culture.

Sadly, Prabhakaran does a poor job of both in his book that left me underwhelmed in many ways – the story was weak and his portrayal of Tamil culture far-fetched. Pukar Nagarathu Peruvanigan fails to impress despite a valiant attempt to overwhelm its readers with information, using an ancient Tamil dialect that is hard to follow, even for someone who is fluent and well versed in the language.
Profile Image for Saravanan.
356 reviews20 followers
August 29, 2023
முன்னுரையிலேயே கதாசிரியரும் இக்கதை அதிக தகவல்களை கொண்டிருக்கிறது என்று சொன்னதை போலத்தான் முக்கிய கதாபாத்திரங்கள் கப்பலில் பயணம் செய்யும் போது மாலுமி நட்சத்திரங்கள், கடற்பயணம் பற்றி விரிவாக சொல்ல, கப்பலை செப்பனிடுபவர் மரங்களை பற்றி விரிவாக சொல்வார்.

விறுவிறுப்பு, எதிர்பாராத திருப்பம் என்று எதுவுமற்ற மிகவும் சாதாரண கதை தான். பல இடங்களில் ஒரு படத்தில் சூர்யா 100 (இல்லை 108?) பூக்களின் பெயர்களை சொல்வது தான் ஞாபகம் வந்தது.
Profile Image for Elayaraja Subramanian.
129 reviews9 followers
September 4, 2021
Don't judge a book by its cover என்பார்கள். ஆனால் நான் இந்த "புகார் நகரத்துப் பெருவணிகன்" நாவலை வாசிக்க நினைத்ததே இதன் அட்டைப்படத்திற்காகத் தான். 2019 புத்தகக் கண்காட்சி என நினைக்கிறேன். புத்தகத்தை எடுத்துப் பார்த்துவிட்டு வைத்துவிட்டேன். அடுத்த முறை வாங்கிக் கொள்ளலாம் என்று. Kindle Unlimited-ல் வாசிக்கக் கிடைத்ததும் பெரும் ஆர்வத்தோடு வாசிக்கத் தொடங்கினேன்.

திருவெண்காடு என்ற ஊரில் வசிக்கும் செம்பியன் கடல்கடந்து வாணிபம் செய்ய ஆசைப்படுகிறான். கணவனை இழந்த அவனது தாய் அனுமதி மறுக்கிறாள். அதே நேரம் செம்பியனின் நண்பன் உதியனும் கடலோடியாக செல்ல அவனது தந்தையிடம் அனுமதி கேட்க அவரும் மறுத்துவிடுகிறார். உதியனின் தங்கையை விரும்பும் செம்பியன் அவனது வீட்டுக்கு செல்லும் போது அவன் தந்தையோடு வாக்குவாதம் செய்து கொண்டிருக்கிறான். உதியனை மரக்கலத்தில் அழைத்து செல்வதாக கூறியிருந்த சந்திரசேகரனாரை சந்தித்து தான் வரவில்லை எனக் கூறுவதற்காக உதியன் அவனோடு செம்பியனையும் இன்னொரு நண்பனான சேந்தனையும் அழைத்துச் செல்கிறான். ஆனால் அங்கே சந்திரசேகரன் அவர்கள் கொஞ்சமும் எதிர்பார்க்காத பணத்தை மரக்கலத்தில் ஒரு வாரம் பயணம் செய்து வேலை செய்தால் தருவதாக கூறவும் மூவரும் கலத்தில் எறிக்கொள்கிறார்கள். அங்கே அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவர்கள் சாதாரண வணிகர்கள் அல்ல. கம்புகம் எனப்படும் அபிணியை வாங்கி சீனத்திற்கு கடத்துபவர்கள். கலத்தில் ஏறிய யாரும் சந்திரசேகரனின் அனுமதி இல்லாமல் கரை செல்ல முடியாது. அவர்களுக்கு தேவையான உணவு, நீர், கள் எல்லாம் சந்திரசேகரனின் அடியாட்கள் காரி, சோலை மூலமே தரையில் இருந்து கப்பலுக்கு வந்து சேரும். இம்மூவர்களைப் போலவே அந்த கலத்தில் வந்து மாட்டிக்கொண்டவர்கள் ஏராளம். உதியன், செம்பியன், சேந்தன் எல்லோரும் வாள்பயிற்சி பயின்றவர்கள். திட்டம் தீட்டி சந்திரசேகரனோடும் அவனது அடியாட்களோடும் சண்டையிட்டு அவனது கலத்தை எரித்துவிட்டு தப்பி விடுகிறார்கள். இதில் உதியன் கொல்லப்பட்டுவிடுகிறான். ஆனால் புயல் சீற்றத்தில் இறந்துவிட்டான் என உதியனின் வீட்டில் கூறி சந்திரசேகரனின் கலத்தில் கொள்ளையடித்த அவனது பங்கை வீட்டில் கொடுக்கிறான் செம்பியன். உதியனின் சாவுக்கு காரணமான சந்திரசேகரனையும் அவனது ஆட்களையும் கொல்லவேண்டுமென துடிக்கிறான் செம்பியன். வணிகம் செய்தபடியே தப்பி ஓடிய சந்திரசேகரனைத் தேடுகிறான் செம்பியன்.

இதுவரை நன்றாகவே சென்று கொண்டிருந்தது. ஆனால் இதன் பிறகு இது நாவலைப் போன்று அல்லாமல் தமிழரின் பழம்பெருமையையும், தமிழர்கள் கால ஓட்டத்தில் மறந்து போன பல சிறப்புகளையும் சொல்லிக் கொண்டே போக ஆரம்பித்துவிட்டது. எண்கள் எவ்வாறு கணக்கிடப்பட்டன, என்னென்ன வகைப் பூக்கள் இருந்தன, மதுவகைகளில் என்னென்ன இருந்தன, கலம் - நாவாய் போன்ற வணிக கப்பல்களை கட்டப் பயன்படும் மரவகைகள் என்னென்ன, கடலில் திசையை கண்டறிவது எவ்வாறு, திருமணத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள், வணிகத்தில் பயன்படுத்தப்படும் வண்டிகள், வண்டிகளின் எண்ணிக்கையைப் பொறுத்து அவை அழைக்கப்படும் பெயர்கள், ��ணிக சங்கங்களின் பெயர்கள், வணிகம் செய்யப்படும் பொருட்கள் என்று தகவல்களை எழுத்தாளர் கொட்டிக்கொண்டே இருக்கிறார். நிச்சயம் இவை அசுரத்தனமான உழைப்பை அவரிடம் கோரியிருக்கும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.

ஆனால் ஒரு புதினத்தில் இத்தனை தகவல்கள் என்பது பயங்கர அலுப்பூட்டக்கூடியதாக இருந்தது. தூங்கி வழியச் செய்கிறது. அபாரமான மொழிநடையை கைக்கொள்ளப்பெற்றிக்கிறார் எழுத்தாளர். ஆனால் இதை ஒரு நாவலாக அணுகாமல் சுவாரசியமாக கதை சொல்ல வேண்டுமென்பதை முதன்மையாக கொள்ளாமல் மறந்து போன தமிழர்களின் பெருமைகளை இன்றைய தலைமுறைக்கு மீண்டும் எடுத்துச் சொல்லும் ஒரு தகவல் களஞ்சியமாக இதனை கொண்டுவரவே நினைத்திருக்கிறார் போலும். திகட்ட திகட்ட தகவல்களை கொடுத்து புத்தகத்தை தொடர்ந்து வாசிக்க விடாமல் செய்துவிட்டார். 65% சதவிகிதம் முடித்த புத்தகத்தை அப்படியே நிறுத்திவிட்டேன். முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்களில்லை. அவர்கள் சொல்லி வைத்ததைப் போல Don't judge a book by its cover.
Author 2 books16 followers
March 30, 2021
வாடா இந்தியாவில் சில வருடங்களுக்கு முன் வந்து பல சர்ச்சைகளை உருவாக்கிய புத்தகம் "தி ரோசபேல் லைன் "(எழுதியவர் அஸ்வின் சங்கி ). இயேசு இந்தியாவில் தான் தன் கடைசி காலங்களை கழித்தார் , காஷ்மீரில் அவரின் வழித்தோன்றல்கள் இன்னும் வாழ்கின்றனர் என்கிற ஒரு சித்தாந்தத்தை பல ஆவணங்கள் மூலம் நிரூபிக்க முயற்சி செய்யப்பட்ட நூல் அது . அந்த புத்தகத்தின் அறிமுகத்தில் அது ஒரு புதினம் என்று இருந்த குறிப்பு பலரையும் குழப்பியது . தான் சொல்ல வேண்டிய கருத்தை ஆதாரங்களுடன் சொல்ல 10 சதவீத கதை 90 சதவீத ஆய்வாக அவர் கொடுத்திருந்ததால் வந்த குழப்பம் அது . அது போல் தான் இந்த புத்தகமும் . 20 சதவீத கதை 80 சதவீதம் வணிகர்களின் வாழ்வை பற்றிய ஆய்வு தான் இந்த புத்தகம் . புதினம் என்று எதிர்பார்த்து வரும் அனைவர்க்கும் கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தாலும் பழந்தமிழர் காலத்தில் வாழ்ந்த வணிகர்களின் வாழ்வும் , வழியையும் தெளிவாக மிக அழகாக ஆவணப்படுத்தியிருப்பதால் இந்த புத்தகத்தை ஒரு முறை படிக்கலாம் . தமிழர் வாழ்வை பற்றி படிக்க நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக பரிந்துரைக்கலாம் .



Profile Image for Hema Jay.
Author 30 books13 followers
December 27, 2022
இந்நாவலை புனைவு என்பதை விட பழந்தமிழரின் வாழ்வியல் பற்றி அறிந்து கொள்ள உதவும் செறிவான ஆய்வு நூலாகப் பார்க்கலாம். பூக்கள், தாவரங்கள், கலங்கள், அதில் உபயோகிக்கும் மரங்கள், வணிகம், அரசாட்சி, வீடுகளின் அமைப்புகள், உணவு, ஆடை அணி வகைகள் என வரிக்கு வரி தகவல்கள் கொட்டிக் கிடக்கின்றன. நிறைய இடங்களில் தகவல் மிகுசுமை தோன்றிடினும் நுட்பமான கலை சொற்களுக்கும், ஆழமான தகவல் செறிவுக்கும், ஆசிரியரின் அபாரமான உழைப்புக்கும் ஐந்து நட்சத்திரங்கள் போதாது.
1 review
August 19, 2020
One of the best book in tamil

Proud of tamilan . Begin this novel I live in 2020 but end of the novel I am traveling more than 1000 years before. Thank you very much sir for speechless hard work. Hatsoff sir ...
51 reviews2 followers
April 26, 2020
ஏராளமான தகவல்களுடன் எழுதப்பட்ட நாவல்.
3 reviews
September 29, 2020
Good

இப்புத்தகத்தில் நம் மன்னர்களின் வணிகம், நாவாய்கள், பழங்கால பொருட்கள், அணிகலன்கள், நாடுகள், பண்பாடு, வீரம், கலை, அறிவியல் அறிவு ஆகியவற்றை தெரிந்து கொள்ள முடியும். 👍😀 😀
Displaying 1 - 12 of 12 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.