ஒரு நூற்றாண்டில் உருவாக வேண்டிய மாற்றங்கள் கடந்த 25 ஆண்டுகளில் நடந்து முடிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் மொத்தமும் திசை திரும்பியுள்ளது. அடுத்து வரும் 5 ஆண்டுகளில் என்ன மாற்றங்கள் உருவாகும்? என்பதனை எவராலும் யூகிக்க முடியாத அளவிற்குத் தினந்தோறும் மாற்றங்கள் என்ற வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். இனம், மொழி, பிரதேச வாதங்கள் இனி இங்கே இருக்குமா? என்று தோன்றுகின்றது. ஆனாலும் இணையத்தில் நீ உண்மைத்தமிழன் என்றால் ஷேர் செய் என்ற வார்த்தை இன்னமும் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. 2000 வருடத் தமிழர்களின் வாழ்க்கையைக் கழுகுப் பார்வையாகச் சுருக்கமாகச் சுவராசியமாகச் சொல்லியுள்ளேன். வாழ்ந்து வந்த வாழ்க்கையில் அவரவர் வாழ்விடங்கள் பொறுத்து கĬ