5. கழுத்தை அறுத்துப் போட்ட சேவலுக்குத் தெரியாது தான் அங்குமிங்கும் துள்ளித் துடிப்பது O நீர்நிலை விரிந்த நீர்நிலை நிலவு வழியும் இருளில் சிறுசிறு முனகல்களைக் கிளர்த்தியபடி நிர்வாணமாகப் படுத்துக்கிடக்கிறது ஆழமே உள்ளடக்கமாகக்கொண்ட எலுமிச்சை வாசனையுடைய ஒரே அங்கத்தாலான உடலைக் கைக் குவித்து அள்ளிப் பருகிடக் கண்முன் விரிகிறது பனிக்குடத்துக்குள் இருந்த காட்சி O வன்முறைக்கு எதிரான ஆலோசனைகள் திட்டமிடப்பட்ட கொலையைப் போன்ற நேர்த்திமிக்க செயல்கள் நிறைந்த வாழ்க்கையில் கடவுளுக்கான இடத்தைக் கேலிசெய்பவர்களைப் பயங்கரவாதிகளாக அறிவிக்கலாம் ஒவ்வொரு மழைக்கால இரவிலும் குழு வன்புணர்ச்சிக்கு ஆளாகிக்