முதல் நாவலிலேயே சவாலான தளங்களில் பயணித்து அதனை சிறப்புற விளக்கியுள்ளார் எழுத்தாளர்.நேர்ப்பாங்கற்ற முறையில் விரியும் எழுத்து வடிவம் கதையை சிறிதளவும் பாதிக்காமல் வாசிப்பு அனுபவத்தின் சுவாரசியத்தை மேலும் மெருகேற்றுகிறது.எழுத்தாளர் கூறும் துணைக்கதைகளும் முதன்மை தளங்களுக்கு நிகரான தாக்கத்தை ஏற்படுத்தும்.தமிழ்தேசிய அரசியலின் உன்னதத்தை பேசும் பகுதிகள் வாசிப்பாளனை மயிர்க்கூச்செறிய தவறாது.காதல்,போர்,அரசியல் என வெவ்வேறு தளங்களில் எழுதப்பட்டிருக்கும் நாவலால் உங்களுக்கு புதியதொரு வாசிப்பு அனுபவம் நிச்சயம் கிடைக்கும்.சின்னஞ்சிறு நுணுக்கங்களுடன் சுவாரசியமான நிகழ்வுகளை காட்சிப்படுத்திய வேல்முருகன் இளங்கோ ஒரு சிறந்த கதைச்சொல்லி.
ஈழப்போரில் நம் தமிழ்ச் சொந்தங்கள் கொத்துக் கொத்தாகக் கொன்றழிக்கப் பட்டதையும்; தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த கலவரத்தையும்; ஒரு சாதாரண கல்லூரி இளைஞனின் பார்வைவழி, எளிய, ஸ்வாரஸ்யமான நடையில் சொல்லும் நல்ல நாவல்.
ஒரு craftsmanship Writing,மூன்று கதைகளும் ஒரே நேர்கோட்டில் இணையும் இடம் படிக்கும்போது நல்ல highness இருந்தது, தமிழ் தேசியம் பற்றி எழுத்தாளர் பேசியதும் கம்யூனிசம் தமிழகத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை விமர்சித்து இருந்தார். கம்யூனிசம் என்பது பிரித்தாளும் அரசியல் கிடையாது வர்க்க வேறுபாடுகளை சொல்லி அது சமநிலை எட்ட வேண்டும் என்பதே கம்யூனிசத்தின் நோக்கம். தன் தாயகத்தை தன்னுடைய நிலத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்ட ஒரு இன மக்கள் அழுகுரல் இன்றும்கூட தமிழகத்தில் நிறைய காது கேட்கவில்லை என்பதே உண்மை. நம்முடைய கலை வடிவில் ஈழத்தைப் பற்றிய பதிவுகள் தொடர்ந்து வரவேண்டும் அதை மிகவும் ஆதரிக்கிறேன் ஒரு தேர்ந்தெடுத்த அழகிய எழுத்துக்கள் அருண் அணு இவர்கள் இருவருடைய காதல் அவர்களுடைய உரையாடல் என்றும் காதில் கேட்டுக்கொண்டே இருக்கும்
எழுத்தாளரின் முதல் நாவல் என்பதை நம்ப முடியாத அளவுக்கு கதை சொல்லும் உத்தியும், மொழியாளுமையும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கிறது. தமிழ்த்தேசிய அரசியல் நிலைப்பாடுள்ள எழுத்தாளரான இவர், அதை மையச்சரடாகக் கொண்டு இந்த நாவலைப் புனைந்திருக்கிறார்.
அரசியல் நிலைப்பாட்டிலும் (சாத்தனூரில் பெரியார் சிலை வந்ததை நக்கலடிப்பது), நடைமுறை சாத்தியமற்ற கனவுலகிலும் (வணிகமற்ற உலகம்), பிற்போக்குத்தனமான பழைய நடைமுறைகளை (கொற்றவைக்கு நவகண்டம் எனும் மனிதப்பலி) வியந்தோதுவதிலும் எனக்கு சிறிதும் உவப்பில்லையாயினும் கதை சொல்லும் உத்தியும், நடையும் எனைக் கவர்ந்தன!
மூன்று முற்றிலும் வெவ்வேறான மூன்று கதைகளும், கடைசியில் ஒரு புள்ளியில் இணைகிறது (மீபுனைவு?! உத்தியில்). நிகழ்காலத்தின் சாத்தனூரின் வேதித் தொழிற்சாலையும் (தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை உருவகம்), சென்னையில் ஒட்டாமல் வாழும் தஞ்சை பொறியியல் பட்டதாரியும் அவன் காதல்-போதை வாழ்க்கையும் முதலிரு இழைகள். எதிர்காலத்தில் ஊழிக்குப் பின் நிகழும் குறிஞ்சிவன கதை (இலங்கை ஈழப்போரின் உருவகம்) மூன்றாம் இழை.
தனிப்பட்ட முறையில் பொறியியல் பட்டதாரியான இளைஞனின் உணர்ச்சிக் கொந்தளிப்பான வாழ்வு மிகச்சிறப்பாக புனையப்பட்டுள்ளது, எனக்குப் பிடித்திருந்தது.
கவனிக்கப்பட வேண்டிய, திறமையுள்ள எழுத்தாளராக வரக்கூடிய சாத்தியமுள்ள எழுத்தாளர். படிக்க வேண்டிய நாவல்!
ஊடறுப்பு என்னும் தலைப்பு சற்று வித்தியாசமாக இருக்க வாசிக்க வேண்டும் என்று எடுத்த நாவல். •மூன்று வெவ்வேறு தளங்களில் ஆசிரியரின் கதை புனைவு அமைந்துள்ளது,•ஒன்று-மிகவும் உருக்கமான காதல் கதை, உருக்கமானதென்றாலே தோல்வி அடைவது தான்.•இரண்டு-நமது சமூகத்தில் நிகழும் இயற்கைக்கு புறம்பான காரியங்களை கூறிப்பிட்டுள்ளார் குறிப்பாக தூத்துக்குடி சம்பவம், தமிழ் ஈழ போராட்டங்கள் குறித்து.•மூன்றாவதாக நூற்றைம்பது ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்வதை குறித்து கூறியுள்ளார்.•••இம்மூன்று தளங்களும் இறுதியில் ஒன்றாக இனைவது மிகவும் அருமையாக இருந்தது
பெரு நிறுவனத்திற்காக இனவெறி கொண்ட பாசக அரசும் அதன் அடிமை அதிமுகவும் தூத்துக்குடியில் நடத்திய கலவரம், கொலைகள் சாயலில் ஒரு போராட்டம், கொலைகார காங்கிரசும் தமிழினத் துரோகி திமுகவும் ஈழத்தில் நடத்திய இனப்படுகொலை சாயலில் ஒரு போரை சுற்றி ஒரு காதல் கதை.
அருணின் கதையாக இரு குறுங்கதைகள் இக்கதைக்குள். இன்னும் கொஞ்சம் தெளிவாக எழுதியிருக்கலாம் என்ற எண்ணம்.
- தமிழர்களைக் கொல்ல இந்திய துணை நின்றது. - இவர்கள் அழித்ததை எல்லாம் வளர்ச்சி என்றார்கள். இவர்கள் அழித்ததை சீர் செய்ய வேண்டும் என இயற்கை எண்ணுவதை அழிவு என்கிறார்கள். - மேதகு வே பிரபாகரன்
சமகாலத்தில் தமிழர்களின் அரசியலையும் பொதுவுலகிற்க்கு மறைக்கப்பட்ட பல உண்மைகளையும் சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார். தற்கால அரசியலின் பின் ஒளிந்திருக்கும் பல உண்மைகள் இந்த புத்தகத்தில் இருக்கும் என்ற காரணத்தினாலே நான் இந்நாவலை படிக்க ஆரம்பித்தேன். ந���ன் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது. உதா: பெட்டி கோபால், தற்கால தமிழக கம்யூனிஸ்ட்கள் போன்றவை.