Jump to ratings and reviews
Rate this book

வைக்கம் போராட்டம்

Rate this book
வைக்கம் போராட்டம் குறித்த விரிவான ஓர் ஆய்வு நூல். இதுவரை ஆய்வுலகம் கண்டிராத பல புதிய சான்றுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்திருக்கிறார் பழ.அதியமான். போராட்டத்துக்கு முந்தைய வரலாறு, போராட்டத்தின் தலைவர்கள், போராட்டவரலாறு, பெரியார், காந்தியின் பங்களிப்புகள் என விரிவான ஆய்வு நூல்.

648 pages, Paperback

Published January 1, 2020

2 people are currently reading
9 people want to read

About the author

பழ. அதியமான் (பிறப்பு: 1961) தமிழ் எழுத்தாளர், ஆய்வாளர். தமிழ்ச் சிந்தனை வரலாறு தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்டவர். நவீன தமிழகத்தின் வரலாறு தொடர்பாக மூன்று முக்கிய நூல்களை வெளியிட்டுள்ளார்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
2 (50%)
4 stars
0 (0%)
3 stars
1 (25%)
2 stars
0 (0%)
1 star
1 (25%)
Displaying 1 of 1 review
Profile Image for Thamiziniyan Supa.
Author 1 book27 followers
April 24, 2020
‘வைக்கம்’ ஓர் ஊர் பெயராக மட்டுமே இங்கு இல்லை. ஒன்று, ஒரு போராட்டத்துடன் இணைத்து பேசப்படும் அல்லது இலக்கியவாதிகளால் பேப்பூர் சுல்தான் பஷீரோடு இணைத்து எழுதப்படும். வைக்கம் போராட்டமாக பேசப்படும் போது ‘வைக்கம் வீரர்’ என்ற அடைமொழியுடன் பெரியாருடன் தொடர்புபடுத்தியே அப்போராட்டம் பார்க்கப்படுகிறது. சற்று கூடுதலாக காந்தியின் பங்களிப்பும் இங்கு பேசப்பட்டிருக்கிறது. இன்னும் ஒரு பக்கம் வைக்கம் போராட்டத்தில் இருந்து பெரியாரை விலக்கிவைக்கும் பேச்சுகளும் இங்கு அதிகம்.

வைக்கத்தில் உள்ள சத்தியாகிரக அருங்காட்சியகத்தில் போராட்டத்தலைவர்களின் படங்களின் வரிசையில் உள்ளீடற்று வெற்றுப் படச்சட்டகம் ஒன்று மாட்டிவைக்கப்பட்டிருக்கும். முகந்தெரியாத பல போராட்டக்காரர்களை கௌரவிக்கும் குறியீடு அது. ‘வைக்கம் போராட்டம்’ பற்றிய பழ.அதியமானின் ஆய்வுப் புத்தகம் வைக்கம் போரட்டத்தின் பல முகங்களையும் இதுவரை முகம் காட்டாமல் இருந்த பல சான்றுகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

Read More @ https://bit.ly/2Y06LaE
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.