தொழில் முனைவு, சூழியல், இதழியல், இலக்கியமென என்னுடைய ஆர்வங்கள் செல்லும் துறைகளைப் பற்றி எழுதிய கட்டுரைகளும், மேடை உரைகளுமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல். இவற்றுக்கான பொதுவான அம்சங்கள் இரண்டு. பெரும்பாலான கட்டுரைகள் தி இந்து தமிழ் திசை நாளிதழில் வெளிவந்தன. இவற்றின்மீது எழுதப்பட்ட நாட்களில் பெருவாரியான வாசிப்பும், விவாதங்களும் நிகழ்ந்தன.
இந்த பத்துக் கட்டுரைகளும் செல்வேந்திரனின் அனுபவங்கள், அவர் படித்த புத்தகங்கள் ஆகியவற்றிலிருந்து அவரின் அவதானிப்புகளை, ஒரு வாசகனுக்கு பயனுள்ளவற்றை மட்டும் தேர்ந்த மொழி நடையில் அளிக்கிறது. ஒரு நுட்பமான வாசகன் கண்டடைய மேலும் சிலவற்றையும் விட்டு வைக்கிறது, அதனால் இலக்கியமாகிறது. இவற்றை எழுத அவர் அளித்திருக்கும் ஆழ்ந்த உழைப்பு பயனளித்திருக்கிறது. நன்றி!
If you have followed Selventhiran's work before you would've definitely come across his "வாசிப்பது எப்படி" (How to read). So it is no wonder in this collection of essays and speeches, a thread that loosely connects all of them is actually about reading.
Be it the emotional and beautiful "ஒரு இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்", that concerns with how reading saved him from a very dark time in his personal life, to the hard hitting final speech, which one might even call as an "anti-motivational" speech, the author's emphasis on the importance of reading is ever present
But that is not just all about this collection. It has articles about start-ups, the most colorful passage about pongal and of course about people ( the one with the paperboy is just excellent).
There is something great about some writers that makes you want to keep reading them more. It makes you feel good. Feel better and appreciate some aspects of your life. Selventhiran is one such writer for me.
In Uraippuli, I liked Sir Paper, Uraippuli, Mysskin enum psycho, Mokkai. In few essays language and flow is very good. Awas Yojana is misprinted as Awas Bhojana. Nice book. Will share about the author and the book to my friends.
In Uraippuli, I liked Sir Paper, Uraippuli, Mysskin enum psycho, Mokkai. In few essays language and flow is very good. Awas Yojana is misprinted as Awas Bhojana. Nice book. Will share about the author and the book to my friends.
உங்கள் எழுத்துகளுக்கு ரசிகையாகி விட்டேன் என்றே சொல்லலாம்😍. மிக அருமை அனைத்துக்கட்டுரைகளும். எழுத்துகளின் மூலம் நின்று நிதானமாக உள்வாங்கி சிந்தனை செய்ய வைக்கிறீர்கள். வாசிப்பின் முக்கியத்துவமும், அதற்கு சில குறிப்புகளும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றிகள் என்னுடைய நேரத்தை பயனுள்ள புத்தகத்தில் செலவழித்துள்ளேன்👍💪😍🔥
1) போதிய அனுபவம் இல்லாமல் அனுபவம் கொண்டவர்கள் இல்லாமல் தொடங்கப்படும் புதிய தொழில்கள் முடங்குவது,2) ஒரு வாழ்க்கைக்குள் ஓராயிரம் நிகர் வாழ்க்கை வாழ இலக்கியத்தை வாசிக்க வேண்டும், 3) இதழிலியலாளர்கள் சூழிலியல் சார்ந்த செய்திகள் கட்டுரைகள் எழுதும் பொழுது பயன்படுத்தவேண்டிய பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள், 4) கவிதைகள் வாசிப்பு, 5) நம் வீட்டில் பேப்பர் போடும் ஒரு பேப்பர் boyகளின் அன்றாடம்-அவர்களை நாம் நடத்தும் விதம், 6) கலைகளில் இருந்து கொஞ்சம் திருடலாம் என்பது மட்டும் இல்லை-நாம் அன்றாடத்தில் பலவற்றை கற்று design-thinking-இல் innovation க்கொண்டுவருவது, 7) ஒரு வரி படிக்காமல் மிஷ்கினை திட்டுவதும், 8) ஒன்று வாசிக்காமல் மொன்னைகளாக இருப்பது இழிவு என்று தனது சிந்தனைகளை அக்கறையுடன் பதிவு செய்து உள்ளார் செல்வேந்திரன்
பிரமாதமான கட்டுரைகள் கொண்ட சிறிய புத்தகம். "சார் பேப்பர்" என்ற கட்டுரை இதுவரை அதிகம் பேசப்படாத பேப்பர் போடுபவர்களை பற்றி பேசுகிறது. பேப்பர் போடும் வேலை செய்து உலகமே உற்று நோக்கிய அப்துல் கலாம் பற்றி மட்டுமே அறிந்து வைத்திருந்தேன். ஆனால் காலம் முழுக்க பேப்பர் போடும் வேலை மட்டுமே செய்தவர்களையும், மழை - புயல் - வெள்ளம் என எதன் பொருட்டும் பணியை நிறுத்தாத அவர்களின் அர்ப்பணிப்பு பற்றியும் இந்த கட்டுரையின் வழியே தெரிந்து கொண்டேன்.
அதே போல "ஒரு இலக்கிய வாசகனின் ஒப்புதல் வாக்குமூலம்", "திருடலாம் தப்பில்லை" என்ற இரண்டு கட்டுரைகளும் இந்த புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்தவை.
வாசிப்பு பழக்கத்தை வலியுறுத்தும் பலர் எப்படி வாசிப்பது எதை வாசிப்பது என்பதை கூறாமல் வெறுமனே படி என்று கூறுவதைப் பார்த்திருக்கிறேன். இந்த புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் வழி அந்த கேள்விக்கான பதிலை வழங்கி உள்ளார் ஆசிரியர்.