புதுசாக மாற்றலாகி வந்தவன் “இந்த ஊரு எப்படி” என்று விசாரித்தான். “உன் வாய் ஒழுங்கா இருந்தா எல்லா ஊரும் நல்ல ஊருதான்” என்று பதில் வந்ததாம். விபரம் தெரிந்த நாள் முதல் இந்தக் கதையை அப்பா என்னிடம் அடிக்கடி சொல்வார். ‘உன் வாயி இருக்கே வாயி…’ என்பதை ஒரு தடவையாவது என்னிடம் அங்கலாய்க்காத உற்றார் உறவினர் சுற்றத்தார் இல்லை. எந்த நெருக்கடியிலும் எவ்வளவு அடக்கினாலும் பால் பொங்கிவிடும். எழுத்திலும் அப்படித்தான். படு சீரியஸாக எழுதிக்கொண்டிருப்பேன். திடுதிப்பென்று ஒரு கதாபாத்திரம் கோளாறாகிவிடும். துக்கம் நீங்கள் பார்க்கவே விரும்பாத பக்கம் என்பார் பார்கவி. உண்மைதான். ஆனால், தனி வாழ்வில் நான் மிகப்பெரிய ரெளடி. என்னைக் கட்டிவைத்து உதைக்காதவரென ஒருவர்கூட என் சொந்த ஊரில் இல்லை.
பல்லாண்டுகளுக்குப் பிறகு நான் தொடர்ச்சியாக எழுதிவரும் நாட்கள் இவை. “கொரோனாவால் திட்டுமுட்டு ஆகியிருக்கிறோம். உன் லைட்டர் கட்டுரைகளைப் புத்தகமாகப் போடேன்” என திவ்யா துரைசாமி மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டார். சரி நீங்கள் நம்பவில்லை. போட்டு.
இந்நூல் அதிகமும் இலக்கிய பாவனைகளை கிண்டல் செய்கிறது. அவ்வப்போது எனக்கு நேரிட்ட அனுபவங்களைச் சொல்கிறது. கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத சிற்றூரின் குணச்சித்தர்கள் சிலர் அவ்வப்போது மின்னி மறைகிறார்கள். என் பிரியத்திற்குரிய எழுத்தாளர் பி. மாசானமுத்து கும்பமுனிக்கும் பேயோனுக்கும் சீனியர். அவரது எழுத்துக்களும் இந்நூலை அலங்கரிக்கின்றன. எவ்வளவு யோசித்தாலும் இந்நூலுக்கு ஏன் ‘நகுமோ… லேய் பயலே’ என தலைப்பு வைத்திருக்கிறேன் என்பதை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.
கிட்டத்தட்ட 20 கட்டுரைகள் கொண்ட இந்தத் தொகுப்பில் குறைந்தது 15 கட்டுரைகளாவது நம்மை வாயவிட்டு சிரிக்க வைப்பவை. மீதி கொஞ்சம் வாயைக்குள்ளேயேயாவது சிரிக்க வைக்கின்றது. மாசானமுத்து என்ற தமிழின் மாபெரும் கவிஞர் இந்த புத்தகத்திலிருந்து எழுந்து வருகிறார் அவர் முழுதாக வந்து தமிழ் இலக்கியத்தை ஆக்கிரமிக்கும் காலம் வெகு தொலைவில் இல்லை. (அதற்குள் புத்தகத்தை மூடி விட்டேன்) :)
செல்வேந்திரனின் 'வாசிப்பது எப்படி' புத்தகத்திற்குப் பிறகு அதிகம் வாசிக்கப்படக்கூடிய புத்தகமாக இது இருக்கும். செல்வாவிற்கு பகடி அவர் இயல்பிலேயே இருக்கக்கூடும். அவரது பயணக்கட்டுரை புத்தகமான ' பாலை நிலப் பயணம்' ல் கூட அது அவ்வளவு இலகுவாக அது வெளிப்படுகிறது. நகைச்சுவை என்பதே ரசக்குறைவான ஜோக்ஸ் எனும் காலகட்டத்தில் இருக்கிற இன்றைய நாட்களில் சொற்களின் அழகிய வெளிப்பாடுகளில் பகடியும் சுய/அரசியல்/சமூக எள்ளலும் வெளிப்படுத்தும் இந்தப் புத்தகம் நிச்சயமாக ஒரு 'மஸ்ட் ரீட்' அல்லது 'மஸ்ட் கீப்' (எப்போதும் ரிலாக்ஸ் மோடுக்கு நம்மை ட்யூனாக்க 'கையில் வைத்திருக்க') வேண்டிய புத்தகம்.
Its extremely rare to find an out and out genuinely hilarious books in tamil. I found this. I smiled, giggled, laughed and ROFL-ed too. Special treat if you're familiar with Tamil literary world, especially the authors - the inside jokes are brilliant. Definitely one of the funniest books I've ever read
ஆசிரியரின் "வாசிப்பது எப்படி" புத்தகம் முன்பே படித்திருக்கிறேன். இந்தப் புத்தகத்தின் அட்டைப் படமும் தலைப்பும் என்னை ஈர்த்தது.
கொரோனா ஊரடங்கு நாட்களில் வீட்டுக்குள்ளேயே முடங்கிய வேளைகளில் தான் எதிர்கொண்ட அனுபவங்களை நகைச்சுவை உணர்வோடு ஆசிரியர் பதிவு செய்திருக்கிறார் இந்த கட்டுரைத் தொகுப்பில்.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸில் பிரயாணம் செய்தபோது அண்ணாச்சி உடன் நடந்த உரையாடல், புலிக்குட்டி விஜயின் கோபத்தைக் கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சிகள், நெல்லை to சென்னை பஸ் பயணத்தின்போது 2 குடிகாரர்களால் ஏற்பட்ட வேதனைகள், பள்ளிப் பருவத்தில் நாடகம் நடித்த அனுபவம், இடை இடையில் எழுத்தாளர் பி. மாசானமுத்துவின் பொன்மொழிகள் மற்றும் கவிதைகள் என பல வடிவங்கள்.
எனக்கு மிகவும் பிடித்த கட்டுரைகள் - பார்த்த முகம், தூஸ்ரா, அம்மா பதிப்பகம், ஈரட்டி இலக்கிய மாநாடு, இலக்கிய வாசகனின் இணையற்ற பாவனைகள்.
ஆசிரியரின் நகைச்சுவை உணர்வு எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பல இடங்களில் குபீர் சிரிப்பை அடக்க முடியவில்லை. சிறுகதை, நாவல், கவிதைகள் தவிர்த்து மனதுக்கு லேசாக சிரிக்கும் வகையில் ஒரு புத்தகம் படிக்க விரும்பினால் இந்தப் புத்தகம் படியுங்கள்.
நகுமோ லேய் பயலே - செல்வேந்திரன் கமல் அவர்கள் பரிந்துரை செய்த 'வாசிப்பது எப்படி' என்ற நூலைத் தேட போய் எழுத்தாளரின் இந்த புத்தகத்தை படிக்க நேர்ந்தது. புத்தகத்தின் தலைப்பே வித்தியாசமாக இருக்கிறது. 23 கட்டுரைகளில் அவருடைய அனுபவத்தை பகடியாக எழுதி நம்மை சிரிக்க வைக்கிறார் எழுத்தாளர். தினந்தோறும் நாம் கடந்து போகும் மனிதர்களையும் சம்பவங்களையும் நகைச்சுவையாக ரசிக்கும் படி சொல்லும் ஒரு புத்தகம். மன அழுத்தத்தை போக்கும் ஒரு மிகச் சிறந்த நூல் இது. மீண்டும் ஒரு முறை படித்து சிரிக்க காத்திருக்கிறேன். நீங்களும் படித்து சிரிக்க பரிந்துரைக்கிறேன். Amazon Kindle Unlimitedல் இருக்கிறது.
அச்சு ஊடகங்களில் பணியாற்றும் அனுபவத்திலும், தமிழின் இலக்கியத் தளத்தில் கொண்ட மிகுந்த பரிச்சயங்களினாலும் இலக்கியம்/பதிப்பு/ஊடகம் தொடர்பான பகடியும் எள்ளலும் தெறிக்கும் கட்டுரைகளை சிறப்பாக எழுதியிருக்கிறார் எழுத்தாளர். சொந்த பயண/ குடும்ப அனுபவங்களையும் சுய எள்ளலுடன் எழுதியிருக்கிறார். வெடிச்சிரிப்பு இலட்சியம், புன்முறுவல் நிச்சயம் என்கிற உன்னத நோக்கோடு எழுதத் தொடங்கியிருப்பார் போலும். நெருக்கடி மிகுந்த கொரோனா காலத்தில், சிரிப்போடே எளிதில் படித்துக் கடக்க தகுந்த புத்தகம்!
வெகு நாட்களுக்குப் பிறகு சிரிக்க சிரிக்க ஒரு புத்தகம். எள்ளலும் துள்ளலும் நிறைந்த எழுத்துக்களின் மூலம் இதுவென்றல்லாது எது வேண்டுமானாலும் சுவாரசியமாக எழுத முடியுமென்பதற்கு செல்வேந்திரனே சான்று. தமிழில் இயங்கும் சமகால எழுத்தாளர்களை பற்றி அறிந்தவர்க்கு கூடுதல் சிரிப்பு!
நகைச்சுவையான கட்டுரைகளின் தொகுப்பு ‘நகுமோ லேய் பயலே’ , சில இடங்களில் மத்தாப்பு போல சிரிப்பை உண்டுபண்ணும். பல இடங்களில் இது புஸ்வானமாகிவிடுகிறது. - கலைச்செல்வன் செல்வராஜ்
Some of the articles are good to laugh and some of them just fill the content in the paper. If you want to read a book with short books, you can choose and the writing style is good.