விரல்கள்-
இந்த புத்தகத்தை நான் இந்த ஆண்டின் புத்தக கண்காட்சியில் வாங்கினேன். எனக்கு யாரும் சிபாரிசு செய்யவில்லை, ஒரு வித தேடலின் நிகழ்வில், இதை நான் தேர்ந்தெடுத்தேன்.
எது என்னை தூண்டியது என்று என்னால் சொல்ல முடியவில்லை தெளிவாக. ஆனால் இதன் அட்டை பட ஓவியம் ஒரு காரணமாக இருக்கலாம். மற்றும் இதன் எழுத்தாளரின் பெயர், குட்டி ரேவதி எங்கேயோ கேள்வி பட்டதாக உணர்வு. மன்னிக்கவும். என் அறியாமை காரணம், அமோக எழுத்தாளர்களை நான் அறிந்திருக்கவில்லை. சீக்கிரம் அது மாறும் என்று நம்புகிறேன் ஓர் அளவாயினும்.
அதுவும் பெண் எழுத்தாளர்களின்பால் மீது எனக்கு பெரிய ஆர்வமுண்டு, பெண்களின் மீதுள்ள ஓர் விருப்பமான மற்றும் ஆழ்ந்த உணர்வும் ஒரு காரணமாக அறிகிறேன்.
இந்த புத்தகம் பல குறு கதைகளின் தொகுப்பாகும், ஒவ்வொரு சிறு கதையும் என்னை ஈர்த்தும், தமிழ் புத்தகங்களை நான் மேலும் வாசிக்க வேண்டும் என்ற உணர்வை மேலும் வலுவூட்டுவதாய் உணர்கிறேன்.
ஒவ்வொரு கதையின் மாந்தர்களும் அவர்களின் எண்ணங்களும் கதைகளும் அவர்களின் ஆழ்ந்த உணர்வுகளும் ஒரு பெண்ணின் வாயிலாக அறிவதில், வாசிப்பதின் இன்பமே இனிமையாக உள்ளது. இது என் எண்ணங்களை மேலும் விரிவு படுத்துவதாக அறிகிறேன்.
இந்த கதைகள் நிஜமாக நிகழும் கதைகள் ஆயினும் அந்த கதைகளுக்கும், சில கற்பனை மிகுந்த மற்றும் கற்பனையை தூண்டுகிற கதை சொல்லல் விதம், என்னை மிகவும் கவர்ந்ததாக உணர்கிறேன். மிகவும் எளிதான நடையிலும் மற்றும் என் தமிழ் அறிவை சிறுது மேம்படுத்த உதவியதாகவும் இதை கருதுகிறேன்.
கண்டிப்பாக குட்டி ரேவதி அவர்களின் மேலும் பல கதைகளின் உள்ளே உட்செல்ல விரும்புகிறேன். இங்கே தொடங்கி...