Jump to ratings and reviews
Rate this book

நாவலெனும் சிம்பொனி [Navalenum Sympony]

Rate this book
கதாபாத்திரங்களை முழுமையாக
உருவாக்குவதே நாவலாசிரியனின்
பிரதான சவால். சிறிய கதாபாத்திரங்கள்
கூட முழுமையாக இடம்பெற்றிருப்பதே
செவ்வியல் நாவல்களில் தனித்துவம்.
அதற்காகத் தான் டால்ஸ்டாயும்
தஸ் தா யெவ்ஸ் கியும் இன்றும்
பேசப்படுகிறார்கள். தமிழ் நாவல்களின்
குறுக்கு வெட்டுத் தோற்றத்தை
ஆராயும் இந்த கட்டுரைகள் நாவல்
எனும் வடிவம் குறித்த ஆழமான
கேள்விகளை எழுப்புகின்றன.

148 pages, Paperback

Published February 1, 2018

14 people want to read

About the author

S. Ramakrishnan

163 books675 followers
S. Ramakrishnan
(Tamil: எஸ்.ராமகிருஷ்ணன்; born 1966)

is a noted Tamil author and Tamil film dialogue writer. He was born in Mallankinaru, Virudhunagar district, Tamil Nadu.

Ramakrishnan is noted for his column Thunai Ezhuthu in the magazine Ananda Vikatan. His short stories have been translated in German, French, Kannada, Hindi and Malayalam.

His other works include Kadhaa Vilaasam, Desaandri, and Alainthen Tirindhen.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (7%)
4 stars
5 (38%)
3 stars
4 (30%)
2 stars
2 (15%)
1 star
1 (7%)
Displaying 1 of 1 review
Author 2 books16 followers
July 25, 2023
ஒரு வாசகர் சமூகத்தை உருவாக்க முயற்சித்திருக்கும் ஆசிரியருக்கு முதலில் மனம் நிறைந்த பாராட்டுக்கள் . எழுத்து கலை என்றில்லாமல் எல்லா வகை கலைகள் பற்றியும் அவை எப்படி அனுபவிக்கப்பட வேண்டும் , போற்ற பட வேண்டும் என்பதை தீவிரமாக விளக்கியிருக்கிறார். தமிழ் எழுத்து சமூகத்தில் மட்டும் தான் மற்ற எழுத்தாளர்களின் படைப்புக்களை பரிந்துரைக்கும் தைரியமும் , துணிவும் நிறைய இருக்கும் . வாசிப்பு பழக்கம் யார் எழுதிய புத்தகம் படித்து ஆரம்பித்தாலும் பரவாயில்லை இந்த சமூகத்தில் அந்த பழக்கம் ஒரு புரட்சியாக மலர வேண்டும் , அந்த புரட்சியால் தமிழ் எழுத்தாளர்கள் ஆங்கில எழுத்தாளர்கள் போல் செழிப்புடன் வாழ வேண்டும் என்கிற எண்ணம் தமிழ் எழுத்து சமூகத்தில் கடந்த சில வருடங்களாக ட்ரெண்டாகி வருகிறது . ஆனால் ராமகிருஷ்ணன் அப்படிபட்ட ஒரு எழுத்தாளர் இல்லை என்பது என்னுடைய ஒரு அனுமானம் . இந்த புத்தகத்திலும் அவர் சில புத்தகங்களை பரிந்துரைகளை செய்திருக்கிறார் . புத்தகத்திற்காக தன்னுடைய விருப்பமான சிலரது படைப்புக்களை பரிந்துரைந்திருந்தது சற்றே நெருடியபோதும் , பரிந்துரைத்திருந்த மற்ற புத்தகங்கள் மற்றும் புத்தகங்களின் அறிமுகம் என்பது வாசிப்பாளனுக்கு பயன் அளித்தது என்றே தான் சொல்ல வேண்டும் . உலக சிறுகதைகளின் கதை சுருக்கம் , சில கதைகளின் சிறப்புகள் என்று நாவலின் தலைப்புக்கு நியாயப்படுத்தும் விதமாக படைக்கப்பட்டிருந்தாலும் , சம்பந்தம் இல்லாமல் கம்யூனிச சித்தாந்த வாசம் வீசுவதை வாசிக்கும் நம்மால் ஜீரணிக்க முடியவில்லை (எழுத்தாளன் தன் சித்தாந்தத்தை சொல்ல கூடாது என்பது என் நிலைபாடில்லை , ஒரு பக்கத்தில் முடிக்க வேண்டிய ஒரு விடயத்தை நீட்டி முழக்கி வலுக்கட்டாயாமாய் நம்மிடையே திணிக்க முனையும் போதே சற்றே எரிச்சலாகிறது ) . கண்டிப்பா தமிழ் வாசக சமூகம் படிக்க பரிந்துரைக்க வேண்டிய புத்தகம் . இன்னொரு பாகம் வந்தாலும் படிக்கலாம் என்கிற மனநிலை தரும் எழுத்துலகம் பற்றிய , எழுத்தாளரின் தனித்துவ பாணியில் படைக்கப்பட்டிருக்கும் ஒரு தகவல் களஞ்சிய ( அல்லது அது மாதிரியான ) நாவல் இதுவென்று சொல்லலாம் .
Displaying 1 of 1 review

Can't find what you're looking for?

Get help and learn more about the design.