Jump to ratings and reviews
Rate this book

வான்கா

Rate this book
வாழ்வின் முக்கியமான தருணங்கள் எது என என்னிடம் யாரேனும் கேட்டால் அது சில புத்தகங்களை நான் வாசித்த தருணங்கள்தான் என்பேன். அந்த தருணங்களை மட்டும் நான் சந்தித்திருக்காவிட்டால் இன்று வரையிலான என் வாழ்க்கை அதன் அர்த்தத்தையும் சாரத்தையும் பெருமளவு இழந்திருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நண்பனை போல என் தோள் மேல் கைபோட்டு மெல்ல ஆன்மாவின் ஆழத்துள் என்னை அழைத்துச் சென்று வார்த்தைகளின் துணையோடு என்னை மேலும் பண்படுத்தி மேலும் ஆழமிக்கவனாய் மாற்றிதந்திருக்கின்றன. அத்தகைய தருணங்களில் மனம் தன் அழுக்குகளையெல்லாம் கண்ணீரின் வழியாக என்னுள்ளிருந்து வெளியேற்றும். இப்படியாக என்னை இதர மனிதர்களிடமிருந்து வேறுபட்டவனாக மாற்றிய மிக முக்கியமான புத்தகங்களில் ஒன்றாக நான் கருதும் புத்தகம் வான்கோவின் வாழ்க்கை வரலாற்றை ஒட்டி இர்விங் ஸ்டோன் எழுதிய லஸ்ட் பார் லைஃப்.

108 pages, Paperback

Published January 1, 2022

9 people want to read

About the author

Ajayan Bala

18 books6 followers
Ajayan Bala is a writer, film director and screenplay writer from Thirukalukundram, Tamilnadu, India. His book Ulaka cin̲imā varalār̲u : maun̲ayukam 1894-1929 was awarded as best book in the fine arts section by Tamil Nadu Government in 2007. He has written several fiction and non-fiction works in Tamil. He has written a history serial in the popular Tamil magazine Ananda Vikatan.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
1 (6%)
4 stars
10 (62%)
3 stars
3 (18%)
2 stars
1 (6%)
1 star
1 (6%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Abishethvarman  V.
10 reviews3 followers
January 1, 2023
வின்சென்ட் வான் காவின் வாழ்க்கை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அணுகியிருப்பர். அவர் எவ்வழியில் நமக்கு அறிமுகமானாரோ அவ்வளியிலேதான் அவரைப்பற்றிய விம்பம் இருந்திருக்கும்.

அவரது ஓவியங்கள் மூலமாக அணுகியவர்கள் அவரது கலையையும் புதுமையையும் பார்த்து வியந்திருப்பர்.

அவரை ஓவியராக அணுகியவர்கள் அவரது வாழ்க்கையை வரலாற்றின் பக்கங்களில் பார்த்திருப்பர்.

ஆளுமையாக அணுகியவர்கள் அவரது வாழ்க்கையை அவரின் பார்வையில் பார்க்க விளைந்திருப்பர்.

அவர் ஸ்டாரி நைட் போன்ற தலைசிறந்த ஓவியங்கள் மூலமாக அறிமுகமானாலும், தம்பி தியோக்கு எழுதிய கடிதங்கள் மூலமாக அறிமுகமானாலும். அவரது வாழ்க்கை வரலாற்று கதை மூலமாக அறிமுகமானாலும் இன்னும் அவர் அறிமுகப்படுத்தப்பட வேண்டியவராகவே இருக்கிறார்.

ஒவ்வொரு பார்வையிலும் வான்கா ஒரு புதுமை. நீல நிறத்தின் தாக்கத்தில் இருக்கும் அவரது ஓவியங்கள் நம்மை திரும்பத்திரும்ப நாம் அவர் பற்றி கொண்ட கற்பிதங்களை உடைத்த வண்ணமே இருக்கினறன.

புது வருடத்தில் புதுப்புத்தகம் வாசிக்க வேண்டும். எந்த புத்தகத்தை எடுக்கலாம் என்ற எண்ணமே இன்று வாசிக்க தேவையில்லை என்ற எண்ணத்தை உருவாக்கிவிடகூடாது என்று அவசர அவசரமாக தேடியதில் கிடைத்த மின்நூல் தான் இந்த வின்சென்ட் வான் கா: ஒரு ஓவியனின் சரித்திரம். எழுதியவர் நன்கு அறிமுகமான எழுத்தாளர் அஜயன் பாலா. நாயகன் வரிசைப் புத்தகங்களின் இந்த புத்தகமும் ஒன்று. நீண்ட நாளாய் வாசிக்காத புத்தகம். தியோக்கு எழுதிய கடிதங்களை ஆங்கில மொழிபெயர்ப்பில் வாசித்த போதே இணையத்தில் வான்காவைப் படித்து விட்டேன். தியோக்கு எழுதிய கடிதங்கள் வலியை, கையறு நிலையை, இயலாமையை, ஏக்கத்தை, ஆசையை, இரக்கத்தை கடத்திய பக்கங்கள். அதை வாசித்த பின் ஒரு நிறைவும் வெறுமையும் தோன்றும். நான் சரிவிலிருந்து மீள அந்த புத்தகம் உதவியது. அது யாரை வேண்டுமானாலும் சரியவைக்க வல்லது. அதன் பின்னர் வான்காவைப் படித்தது இந்தப் புத்தகத்தில் தான்.

தன்னைப் பாதித்த Irving stone எழுதிய lust for life எனும் புத்தகத்தின் தாக்கமே இப் புத்தகம் உருப்பெற உதவியது என்கிறார் ஆசிரியர்.
இதை அந்த புத்தகத்தின் சுருக்க மொழிபெயர்ப்பு என்றும் சொல்லலாம் அல்லது அஜயன் பாலா வழியில் உருவாகிய வான்காவின் வரலாறு என்றும் சொல்லலாம்.

100 பக்கங்களில் வாசிப்பின் நிறைவை முத்தமிடத் கூடிய புத்தகம் என்பதில் ஐயமில்லை.

மீண்டும் தியோக்கு எழுதிய கடிதங்களை வாசிக்க போகிறேன். இதுவே இந்த ஆண்டின் சிறந்த விடயமாக அமைய வேண்டும் என எண்ணுகிறேன்.
This entire review has been hidden because of spoilers.
Profile Image for Udhaya Raj.
112 reviews2 followers
January 12, 2026
The books were a way for this artist to express the deep love and pain that he felt in his heart.
Profile Image for Maari Veer Cinn.
9 reviews
August 26, 2021
வான் கா வின் வாழ்க்கையை கடந்து வரும் பொழுது நம்முடைய ஏமாற்றங்கள், துக்கங்கள், அழுகைகளெல்லாம் தலையில் கடுகு விழுந்த வலியாய் தான் உணர முடிகிறது!
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.