What do you think?

எழுத்தாளன் முகவரி
அறிவும் திறனும் நம்முடைய முன்னோர்கள் உயிரணுக்களை மட்டும் சார்ந்தவை அல்ல. அவ்வகையில் உலகின் பல கோடி மக்களும் எதோ ஒருவகையில் உறவுக்காரர்களே, இருந்தும் நம்மில் ஒரு பலர் இடறி விழுகின்றனர், சிலர் தொடர்ந்து படியேறுகின்றனர். இடறுவது எதிர்பாராதது, எழுந்திருந்து படியேறியவர்கள் அனேகர். எழுத்தும் அதிலொன்று. எழுத்தாளுமைகளிடம் கற்றது, சொந்த அனுபவத்திடம் பெற்றது என இரண்டையும் பகிர்ந்துகொண்டிருக்கிறேன். உங்கள் எழுத்தாற்றலை வளர்த்துக்கொள்ள இச்சிறு நூல் உந்துதலை தரும் என்பது என் நம்பிக்கை. இனி, அது எப்படி இந்நூலை உள்வாங்கிக் கொள்கிறீர்கள், உள்வாங்கி கொண்டதை எங்ஙனம் செயல்படுத்துகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.
65 pages, Kindle Edition
Published May 4, 2020
About the author
Nagarathinam Krishna
23 books3 followersநாகரத்தினம் கிருஷ்ணா ஒரு தமிழக எழுத்தாளர். புலம்பெயர்ந்து பிரான்சில் வசித்து வருகிறார். இவர் எழுதிய "நீலக்கடல்" மற்றும் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி இரண்டு நாவல்களும் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 மற்றும் 2012 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் வெளிநாட்டுத் தமிழ் படைப்பிலக்கியம் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கின்றன.
இவர் தமிழ்நாடு, விழுப்புரம், கொழுவாரி என்ற ஊரைச் சேர்ந்தவர். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பிரான்சில் ஸ்ட்ராஸ்பூர்க் என்ற நகரில் வசித்து வருகிறார். சமூகவியலில் முதுகலை, பிரெஞ்சு-ஆங்கிலம் மொழிபெயர்ப்பில் டிப்ளோமா ஆகியவற்றைப் பெற்றுள்ளார். தொழில் வாணிபம். பகுதிநேர மொழிபெயர்ப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார். பிரெஞ்சு இலக்கியத்தில் ஆர்வம். இணையம், சிற்றிதழ்களில் எழுதி வருபவர்.
எழுபதுகளில் கவிதைகளில் இவரது இலக்கிய பயணம் தொடங்கிற்று. சிறுகதைகள் குமுதம், விகடன், கல்கி எனத் தொடங்கி தற்போது இணைய தளங்கள், சிற்றிதழ்களில் எழுதி வருகிறார். பிரான்சு நாட்டில் ' நிலா' என்கிற இருமாத இதழைத் தொடங்கிப் பின்னர் அதனை மாத இதழாகவும் மூன்றாண்டுகாலம் நடத்தினார். கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்கள், மொழிபெயர்ப்புகளென படைப்பிலக்கியத்தின் பல துறைகளிலும் இயங்கிவருபவர்.. முதல் நாவல் "நீலக்கடல்" தமிழக அரசின் பரிசினையும், இரண்டாவது நாவல் 'மாத்தா கரி' கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை பரிசினையும், மூன்றாவது நாவல் கிருஷ்ணப்ப நாயக்கர் கௌமுதி தமிழக அரசின் பரிசினையும் பெற்றுள்ளன. ஓர் அறிவியல் சிறுகதை உட்பட இதுவரை ஐந்து சிறுகதை தொகுப்புகள்; ஆறு நாவல்கள்; மூன்று பிரெஞ்சு நாவல்கள், மூன்று சிறுகதைதொகுப்புகள் உட்பட ஏழு மொழிபெயர்ப்புகள்; ஒன்பது கட்டுரை தொகுப்புகள், அம்பை சிறுகதைகளின் பிரெஞ்சு மொழி பெயர்ப்பு - De haute luttre (Editions Zulma) இவரது மொழிபெயர்ப்பில் வந்துள்ளன. தவிர இவருடைய 'மாத்தா ஹரி' நாவல் 'Bavani, l'avatar de Mata- Hari என்ற பெயரிலும், இறந்த காலம் நாவல் ' Je vis dans le passé என்ற பெயரிலும் (Edilivre) வெளிவந்துள்ளன. 2021 ஆம் ஆண்டு, பிரான்சு நாட்டில் Tu connais la nouvelle? என்கிற பிரெஞ்சு இலக்கிய அமைப்பு Centre- Val de Loire மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து மே 25-29 ஷத்தோதன் (Châteaudun) என்ற நகரிலும் ஜூன் 1-5 ழர்ழோ(Jarjeau) நகரிலும் நடத்திய தமிழ் இலக்கிய அறிமுக நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

Ratings & Reviews
Friends & Following
Create a free account to discover what your friends think of this book!
Community Reviews
No one has reviewed this book yet.