எனது விற்பனை வகுப்பில் எனது பேராசிரியர் விற்பனை பற்றி எல்லோரையும் கூற சொன்னார்கள். எல்லோரும் ஒவ்வொரு விதமாக சொன்னார்கள். எல்லோரும் வாடிக்கையாளர் காலை நக்குவதுக்கு சமமான விளக்கத்தையே கூறினர். பேராசிரியர் இறுதியாக கூறினார். ஏன் எல்லோரும் சுற்றிவளைக்கிறீர்கள். விற்பனை ஒரு விலைமாது (prostitute ) தொழில் என்று தானே சொல்ல வருகிறீர்கள். ஆனால் அது அப்படிப்பட்ட கெட்டவார்த்தை அல்ல. விற்பனை ஒரு அற்புதமான திறன் என்று விளக்கினார். அடுத்த மூன்று மாதங்கள் அதை மெய்ப்பித்தார். விற்பனை திறன் என்பது எல்லோருக்கும் தேவையான ஒரு திறன். ஏனெனில் ஒவ்வொரு உரையாடலும் ஒவ்வொரு ஒப்பந்தமும் ஒருவித விற்பனை தான். இருவரும் வெற்றி பெற வேண்டும். இறுதியில் இருவதும் சந்தோஷமாக இருத்தல் வேண்டும். ஆதலால் போலி அல்லாத நேர்மையான விற்பனை திறனை வளர்த்துக்கொள்வது நம்மை முன்னேற்றவும் நம்மை எல்லோருடனமும் நட்பாக வைத்துக்கொள்ள உதவும்.
87 பக்கங்களே கொண்ட சுருக்கமான இந்த "ஆட்டத்தின் ஐந்து விதிகள்" புத்தகம் கூறும் இயந்திரத்தனமற்ற நடைமுறைக்கேற்ற விற்பனை விதிகள் என்று கூறலாம். விற்பனைக்கு மட்டும் அல்ல. தனிநபர் வாழ்வில் அன்றாடம் குடும்பத்தாருடனும் உறவினர்களுடனும் அக்கம் பக்கம் சுற்றத்தாருடனும் சக அலுவலர்களுடனும் பின்பற்ற வேண்டிய விதிகள் என்பேன்.
பல இடங்களில் நான் செய்த தவறுகளை உணர்ந்தேன் (மனம் அதற்கு சாக்குகளை கண்டுபிடித்துக்கொண்டே இருந்தது. அதற்கு குட்டிக்கொண்டேன்.). விற்பனை பற்றி ஆழமாக சென்று இருந்தால் அது முற்றிலும் விற்பனை துறை சார்ந்த புத்தகமாக ஆகியிருக்கும். நல்ல வேலை பொதுவாக எல்லோருக்கும் பயன்படக்கூடிய புத்தகமாக அமைந்தது.