சிறுகதையின் உருவம் கடந்த நூற்றாண்டில் பல வடிவ மாற்றங்களை அடைந்துவிட்டது. இந்தத் தொகுப்பில் எளிய நேரடியான கதைகளும், சிக்கலான பல உள்ளடுக்குகள் கொண்ட புதுமையான கதைகளும், நீண்ட கயிற்றின் நடுவில் ஒரு துண்டு வெட்டி எடுத்ததுபோல தொடக்கம் இல்லாமல் தொடங்கி, முடிவு இல்லாமல் முடியும் கதைகளும், திடீர்த் திருப்பங்களோ, திடீர் முடிவுகளோ, அதிதமான நெகிழ்ச்சியோ, பிரச்சார நெடியோ அணுகாமல் ஏராளமான வாசகப் பங்களிப்புக்கு இடம்தரும் கதைகளும், மையம் உள்ளவையும், மையம் இல்லாதது போன்ற சாயல் கொண்டவையும் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.