ஹரன் பிரசன்னாவின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பு இது.
தனி மனித வாழ்வனுபவங்களின் தொகுப்புக்கிடையே இருக்கும் பொதுத்தன்மையை உணரச் செய்பவை இவரது கதைகள். இத்தொகுப்பில் உள்ள கதைகளில் காணக்கிடைக்கும் எளிய மனிதர்களை நாம் அன்றாடம் நம் வாழ்க்கையில் எப்போதும் சந்தித்த வண்ணம் இருப்போம். ஒரு தருணத்தில் இந்த மனிதர்கள் புனைவுச்சம் கொள்கிறார்கள். அந்தத் தருணத்தை, மெல்லிய அங்கதத்தோடும் அங்கங்கே தெறித்துவிழும் நுட்பமான நகைச்சுவையோடும் இக்கதைகள் கச்சிதமாகப் படம்பிடிக்கின்றன.