அவரது புரட்சிகர வாழ்க்கை இன்றைக்கும் தமிழகத்தின் இடதுசாரிகளும், முற்போக்காளர்களும் கூட முழுமையாக அறியாதது. 14 தொகுதிகளில் விரியும் அவரது ஆழமும் ஒளியும் நிரம்பிய எழுத்துகள் பெருமளவு தமிழுக்கு வந்து சேரவில்லை. இந்நிலையில் ஒரு சிறு அறிமுகமாக, ரோசா எழுதிய இரு முக்கியமான கட்டுரைகளையும், சுருக்கமான வாழ்க்கை வரலாறும் இந்நூலில் தரப்பட்டுள்ளது.