Jump to ratings and reviews
Rate this book

பின்பாட்டு

Rate this book
யுகபாரதி, கவிஞரும் பாடலாசிரியருமாவார். நவீன கவிதைகளின் பரிச்சயத்துடன், மரபுக் கவிதைகளிலும் பாண்டியத்தியம் மிக்கவர். இந்நூலில் காலம் கடந்த திரைப்பாடல்களையும் அப்பாடல் உருவாக்கத்திற்குப் பின்னே நிகழ்ந்த சுவாரஸ்யமான தகவல்களையும் அளித்துள்ளார். அவருடையத் திரைப்பாடல்கள் குறித்தும் இடையிடையே குறிப்பிட்டிருப்பது சிறப்பு. திரைப்பாடல்களை விரும்பிக்கேட்போர் அத்தனைபேரும் ரசித்துகிழும் விதத்தில் நூலை எழுதியிருக்கிறார். பல அரியத் தகவல்கள் நிறைந்த அதேசமயம், அலுப்பூட்டாத நூல். அச்சுப் பிரதியிலேயே அதிகம் விற்பனையான இந்நூல் தற்போது மின்னூலாக வந்திருக்கிறது. தஞ்சாவூரைப் பூர்வீகமாகக் கொண்ட யுகபாரதி, கணையாழி, படித்துறை ஆகிய இதழ்களின் ஆசிரியக் குழுவில் ஆறு ஆண்டுகளுக்கு மேல் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். தொடர்ந்து இரண்டு முறை சிறந்த கவிதை நூலுக்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர்.
இதுவரை பத்துக் கவிதைத்தொகுப்புகளும் எட்டுக் கட்டுரைத் தொகுப்புகளும் தன்வரலாற்று நூல் ஒன்றும் எழுதியுள்ளார். வெகுசனத் தளத்திலும் தீவிர இலக்கியத் தளத்திலும் ஒருசேர இயங்கிவரும் இவருடைய திரை உரையாடல்கள் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க கவனத்தைப் பெற்று வருகின்றன. இது, இவருடைய ஐந்தாவது கவிதை நூல்.
திரைமொழியையும் மக்கள் மொழியையும் நன்கு உணர்ந்த இவர், ஏறக்குறைய ஆயிரம் திரைப்பாடல்களுக்குமேல் எழுதியிருக்கிறார். இவரே இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணிப் பாடலாசிரியர்

295 pages, Kindle Edition

Published April 15, 2020

5 people are currently reading
13 people want to read

About the author

Yugabharathi

34 books13 followers
Yugabharathi is a Tamil poet, music director, and lyricist. His birth name was "Santhanam Desan" and he was known as "Santhanam" by his family and friends. During the early 1990s when he began writing poems for magazines he started using the pen name "Yugabharathi" in honour of the great Tamil poet Subramanya Bharathi, commonly known as Mahakavi Bharithiyar.

Debuting in the film Aanandham with lyrics for the song "Pallankuzhiyin vattam parthaen", he has become a successful lyricist penning more than 1000 songs.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
3 (17%)
4 stars
7 (41%)
3 stars
5 (29%)
2 stars
2 (11%)
1 star
0 (0%)
Displaying 1 - 3 of 3 reviews
Profile Image for Arun Bharathi.
108 reviews2 followers
December 14, 2024
கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு"

கவிஞர் யுகபாரதியின் "பின்பாட்டு" தமிழ் திரையிசை பாடல்கள் பற்றிய ஒரு கட்டுரை தொகுப்பு. திரையிசை பாடல்கள் காலப்போக்கில் அடைந்த மாறுதல்களையும், அந்த மாறுதல்களுக்கான காரணிகளையும் வரலாற்று தரவுகளுடன் எடுத்துக்காட்டுகிறார் கவிஞர். ஒரு பாடல் உருவாவதற்கு பின்னால் இருக்கும் உழைப்பையும், சிக்கல்களையும், வியாபார நோக்கில் நடக்கும் சமரசங்களையும், அதை தன்னிலையிலிருந்து எதிர்கொள்ளும் விதத்தையும் கவிஞர் தான் எழுதிய பாடல்களைச் சுட்டிக்காட்டி விவரிக்கிறார்.

பாடலாசிரியர்கள் பற்றியும், இசையமைப்பாளர்கள் பற்றியும், அவர்கள் உருவாக்கிய பாடல்கள் குறித்தும் பல சுவையான செய்திகள் இந்நூலில் கொட்டிக்கிடக்கின்றன. அந்தந்த காலக்கட்டத்தில் நிலவிய சமூக கட்டமைப்பு பாடல் வரிகளின் வழி தென்படும் எடுத்துக்காட்டுகள், தனிநபர் விருப்பு-வெறுப்புகள் வெளிப்படும் பாடல் வரிகள், சமகால அரசியல் சூழலின் நீட்சியாக அமைந்த பாடல்கள் என பல விவரங்களை இந்நூல் நமக்கு தருகிறது. ஆங்காங்கே விவரணைகள் சற்று நீளமாக இருப்பதும், ஒரே செய்தி மீண்டும் மீண்டும் விளக்கப்படுவதும் சிறிது சலிப்பை உண்டாக்குகிறது.

திராவிட அரசியல் ஆளுமைகள் கலை இலக்கியங்களையும், திரையிசை பாடல்களையும், திரைப்படங்களையும் தங்கள் கொள்கை பரப்பும் கருவிகளாக பயன்படுத்தி வெற்றியும் கண்ட யுக்திகளை இந்நூல் விளக்குகிறது. நூல் நெடுக பாடகர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் இசையமைப்பாளர்கள் பற்றிய யுகபாரதியின் பாராட்டுகளிளும் சரி விமர்சனங்களிளும் சரி நேர்மை மட்டுமே தென்படுகிறது. "ஆகாசத்த நான் பாக்குறேன்" பாடல் முதலில் "ஆகாசத்த நான் பாக்கல" என தான் எழுதியிருந்ததாகவும், இயக்குனர் ராஜூ முருகன் தான் வரிகளை சற்று மாற்றினார் என்று யுகபாரதி குறிப்பிடுகிறார். அதை குறிப்பிட்டுவிட்டு "உண்மையில், பாக்கல என்றால் கழிவிரக்கமே வருகிறது. பார்க்கிறேன் என்னும்போதுதான் காதல் வெளிப்படுகிறது." என ஏற்புடன் கூறுவதே கவிஞரின் நேர்மை.


இந்நூலில் என்னை கவர்ந்த வரிகள் ---

"மேல் நோக்கி வளர்வதுதான் வளர்ச்சியென்று நம்பிக்கொண்டிருக்கிறோம். உண்மையில், கலையும் இலக்கியமும் கீழ்நோக்கிப் பரவ வேண்டும். அதாவது, கீழே இருக்கும் மக்களை நோக்கி. கீழே இருக்கும் வேர்களால்தான் மரங்கள் வளர்கின்றன என்கிற அடிப்படையைப் புரிந்துகொண்டால் வளர்ச்சி குறித்த நம்முடைய சிந்தனைகளில் மாறுதல் ஏற்படலாம்."

Profile Image for Srikkanth Dhasarathy.
50 reviews1 follower
September 16, 2020
A scholarly work. As a lyricist, who has written over 1000 songs, Yugabharathi could have taken the leeway to elaborate on 'juicy' stories behind the songs he had worked on. But, this reads like a carefully crafted work from a writer, who is passionate about everything Tamil. The themes, Yugabharathi chose for each chapter and the references he had cited shows the years of reading and understanding that went behind writing this book. To quote from his book, "அறிந்தவற்றைப் பிறரிடம் பகிர்ந்துகொள்வதில் கிடைக்கும் இன்பத்திற்கு ஈடில்லை" (There is no joy greater than sharing what we learnt).
Profile Image for Vignesh Asokan.
22 reviews5 followers
June 21, 2020
சினிமாவில் பாடல்கள் உருவாகுவது பற்றியும், தமிழ் திரை இசையின் வரலாறு பற்றியும் தான் பெற்ற அனுபவங்களின் வாயிலாக நேர்மையாக பகிர்கிறார் யுகபாரதி அவர்கள்.

சினிமா மற்றும் பாடல் ரசிகர்கள் தவறவிடக்கூடாத புத்தகம்.
Displaying 1 - 3 of 3 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.