எவரால் கொடூர முடிவு ஏற்பட்டு நிம்மதியில்லாமல் பேயாக உலவி பழிவாங்க புறப்பட்டதோ அவரின் மன்னிப்புடன் கூடிய வேண்டுதல் சாந்தமாக்கும் நிலையும் நிகழக்கூடும்.
மனநிலை மருத்துவரான பிரகாஷ் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த மாருதியின் கடந்த காலக் காதலை பணத்திற்காக அவளின் கணவனிடம் சொல்லியதால் சச்சரவு ஏற்ப தற்கொலை செய்து கொண்டவள் பிரகாஷை பழிவாங்க அவனின் வீட்டிற்குள்ளேயே வந்துவிடுகிறாள். ஏற்கனவே ஆண்மைகுறை கொண்டவன் பழியை மனைவி மேல் போட்டு அவளுக்குக் குற்றவுணர்ச்சி கொடுத்தது போதாது என்று மாருதியின் ஆவியுடன் மல்லுக்கட்ட வேண்டிய சூழல்.
மனைவியைக் காட்டி பிரகாஷை கொல்ல முற்படும் வேளையில் மாருதி கணவனின் மன்றாடல் அவளைத் தேவதையாக்கிவிடுகிறது.