' வனத்தில் தொலைந்திட விரும்பியே வந்தேன்..' ப்ரீதிக்கு உற்சாகமாக இருந்தது.. இறக்கைகள் இருந்திருந்தால் வானில் சிறகடித்துப் பறந்திருப்பாள்.. எத்தனை நாளைய கனவு இது.. நாள்கள் என்பதை விட வருடங்கள் என்று சொல்லலாம்.. விசாகா அத்தை பூனாவை விட்டுக் கிளம்பிய போது தானும் அவளுடன் கிளம்ப வேண்டும் என்று கை கால்களை உதைத்துத் தரையில் புரண்டு அழுதாளே.. அன்று ஆரம்பித்த அடம் இது..