உன்மத்தம் உன்மேலாகிறேன்... சிறுவயது முதலே ஆதி, பிரபா, நந்தினி மூவரும் நட்புடன் பழகுவதும், பிற்காலத்தில் அவர்களது இணைகளும் இவர்களது நட்பை அப்படியே ஏற்றுக் கொண்டு சிறப்பிப்பதும் என சுவாரஸ்யமான கதைக்களத்தை கொண்ட இக்கதை உங்கள் மனதையும் கொள்ளை கொள்ளும் என நம்புகிறோம். இதில் ஆதியிடம் சிக்கி தவிக்கும் அவனது அத்தை மகள் நிவி, நந்தினியை வஞ்சம் தீர்க மணமுடிக்கும் ராஜா விஜயேந்திர பூபதி, பிரபாவின் குடிகார மனைவி பவானி எல்லோரும் உங்களுக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை தரக்கூடியவர்களாக இருப்பார்கள். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.