இந்து தமிழ் நாளிதழின் ஞாயிறு பதிப்பு நடுப்பக்கத்தில் வெளிவந்த தொடர், நடைவழி நினைவுகள். நவீனத் தமிழின் 16 பிரதான படைப்பு சக்திகள் பற்றி, ஒவ்வொருவர் குறித்தும் 4 பதிவுகள் என 64 வாரங்கள் வெளிவந்தது. படைப்பு ஆளுமைகளுடன் அமைந்த என்னுடைய நேரடி நட்பிலிருந்தும் படைப்புகளுடன் கொண்ட உறவிலிருந்தும் உருவான கட்டுரைகள் இவை. அவர்களுடைய தனித்துவ குணாம்சங்கள் மற்றும் படைப்புலகின் மகத்துவங்கள், பங்களிப்புகளின் முக்கியத்துவம், தமிழ்ச் சூழலில் அவர்கள் ஏற்படுத்திய தாக்கங்கள் எனப் பல அம்சங்களும் ஓர் இசைமையில் லயப்படும் வகையில் அமைந்த தொடர். இது. என் கலை இலக்கிய வாழ்வில் இத்தொடர் விசாலமான வாசகப் பரப்புக்கு வழி அமைத்துக் கொடுத்தது. வாசகர்களுடன் என் அனுபவங்களைப் பĨ
சி. மோகன் (C.Mohan) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், நூல்தொகுப்பாளர், கலை இலக்கிய விமர்சகர் என்று பன்முகங்களுடன் இயங்கும் ஒரு தமிழ் இலக்கியவாதியாவார். 2014 ஆம் ஆண்டு சி.மோகனுக்கு விளக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மேலும், விமர்சனக்கருத்துக்கள் வழியாகவும், பதிப்புகள் மூலமாகவும் கவனத்தை ஈர்த்துள்ளார். ‘விந்தைக் கலைஞனின் உருவச் சித்திரம்’ என்ற சிறியநாவல் ஒன்றையும் கமலி என்ற ஒரு நாவலையும் எழுதியிருக்கிறார். இவரது மொழியாக்கத்தில் வந்த ‘ஓநாய்குலச்சின்னம்’ என்ற மொழிபெயர்ப்பு குறிப்பிடத்தக்க ஒரு படைப்பாகும். எழுத்து தவிர, ஓவியம், சிற்பம், திரைப்படம் ஆகிய துறைகளிலும் கவனத்தைச் செலுத்திவருபவர்.
தமிழிலக்கியத்தின் முக்கிய படைப்பாளிகளுடன் அவருக்கான உறவு குறித்து சுவாரஸ்யமான கட்டுரைகள் அடங்கிய நூல்.கூடவே அந்தப் படைப்பாளிகளின் படைப்பைப் புரிந்துகொள்ளவும் உதவி செய்கிறார்.சி.மோகனுக்கு எனது நன்றிகள்.
சிறந்த விமர்சகரும் படைப்பாளியும் மொழிபெயர்ப்பாளருமான சி.மோகனின் தமிழின் முன்னணி படைப்பாளிகளினுடனான அவரது அனுபவங்களையும் அப்படைப்பாளிகளின் ஆளுமைகளையும் விவரிக்கும் சிறந்த படைப்பு