Jump to ratings and reviews
Rate this book

சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும்: Chandrababu

Rate this book
கண்ணீரும் புன்னகையும்


என்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க?
அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி!

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான்.

எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன?
அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம்.

மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை.

மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.'

204 pages, Kindle Edition

First published January 1, 2005

12 people are currently reading
90 people want to read

About the author

Mugil

30 books50 followers
Mugil, a renowned, best-selling Tamizh writer contributing to various platforms like Weekly Magazines, Books, Television and Cinema. Mugil's works focus on introducing History & Research based Historical content to the current generation of young readers. Born 1980, Native Tuticorin, Tamilnadu and Mugil lives in Chennai.

முகில், முழுநேர தமிழ் எழுத்தாளர். புத்தகங்கள், தொலைக்காட்சி, சினிமா என்று மூன்று தளங்களில் இயங்கி வருகிறார். 35-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியிருக்கிறார். சரித்திரத்தை எளிய மொழிநடையில் வலிமையாகச் சொல்லும் இவரது பாணி தனித்துவம் வாய்ந்தது. 1980-ல் பிறந்த இவரது சொந்த ஊர் தூத்துக்குடி. வசிப்பது சென்னையில்.

Ratings & Reviews

What do you think?
Rate this book

Friends & Following

Create a free account to discover what your friends think of this book!

Community Reviews

5 stars
51 (43%)
4 stars
40 (34%)
3 stars
23 (19%)
2 stars
2 (1%)
1 star
0 (0%)
Displaying 1 - 8 of 8 reviews
Profile Image for Saravanan.
356 reviews20 followers
July 31, 2021
ஒருவரின் வாழ்க்கையை பற்றியது என்பதால் எதை வைத்து rating கொடுப்பது என்று தெரியவில்லை. இதில் சந்திரபாபு அவர்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் 75% , அவரை பற்றி செய்தித்தாள், பேட்டிகள் 25% இருக்கிறது. திரையில் வீரர்களாக இருக்கும் நடிகர்களுக்கு மத்தியில் வாழ்விலும் தைரியமாக பேசிய இவர் பரவாயில்லை. ஆனால் மற்ற செயல்கள் இவருக்கு கொஞ்சம் தலைக்கனம் இருந்திருக்குமோ என்று தோன்றுகிறது. ஒரு நடிகராக MGR இவருக்கு ஏற்படுத்திய இழப்பு, நட்சத்திர கிரிக்கெட் அந்த காலத்தில் இருந்திருக்கிறது என்று தகவல்கள் எனக்கு புதிது.

- இந்தி பேசும் நீங்கள் தமிழ் நாட்டுக்கு வந்தால் உங்களைத் தமிழில் பாடச் சொன்னால் எப்படி இருக்கும்? ARR யை மடையர்கள் இந்தி பாடல்கள் பாடச் சொல்லி வெளியேறிய நிகழ்வு தான் ஞாபகம் வந்தது.

- சார்பட்டா பரம்பரை (ரௌடிகள்?) பற்றி தவறான புரிந்தால் இருந்திருக்கிறது?
60 reviews6 followers
July 15, 2023
ஒரு செலிபிரிட்டி என்றாலே எப்போதும் ஒரு பொய் பிம்பத்துக்குள் தன்னை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு எழுதப்படாத சட்டம். அப்போதைய எம்.ஜி.ஆரில் துவங்கி இப்போது சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி வரை அனைவருக்கும் இது பொருந்தும்.
அவர்கள் நிஜ முகம் எதுவாக இருந்தாலும் சமூகத்தின் முன்பு அவர்கள் ஒரு முகத்தை உருவாக்கி வைத்திருப்பர். ஆனால் சமூகம் பற்றிய கவலை இல்லாமல் தன் மனம் விரும்பியப்படி வாழ்ந்த, தனக்கென ஒரு போலி முகத்தை உருவாக்காத பிரபலங்கள் சிலர் உள்ளனர். அந்த சிலரில் சந்திரபாபுவும் ஒருவர்.
மனசில பட்டத சொல்லிடுவேன் சார், மூஞ்சுக்கு நேரா பேசிடுவேன், எனக்கு உள்ள ஒன்னு வச்சிக்கிட்டு வெளிய ஒன்னு பேச தெரியாது இந்த மாதிரியான வசனங்களை பலரும் பெருமையுடன் கூறுவதை கேட்டிருப்போம். இந்த மாதிரியான விஷயங்களை பெருமையாக கூறிக்கொள்ளலாம். ஆனால் நிஜ வாழ்க்கையில் அதை நாம் கடைப்பிடித்தால் வாழ்க்கை எவ்வளவு கடினமாகிவிடும் என்பதற்கு சந்திரபாபு ஒரு உதாரணமாக இருக்கிறார்.
சினிமாவில் வந்த காலம் முதலே மனதில் பட்டதை அப்படியே பேசியிருக்கிறார். எம்.ஜி.ஆரிடம் கூட அப்படியே இருந்துள்ளார். வளர்ந்து வரும் காலங்களில் எம்.ஜி.ஆர் படமே சந்திரபாபுவால்தான் ஓடுகிறது என்கிற பேச்சுக்கள் வர துவங்கியது, மேலும் சந்திரபாபுவும் ஒரு பத்திரிக்கையில் எழுதும்போது எம்.ஜி.ஆர் குறித்து சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் எழுதுகிறார்.
எம்.ஜி.ஆர் மட்டுமின்றி சிவாஜி கணேசன், ஜெமினி கணேசனிடம் கூட இவருக்கு மன கசப்பு ஏற்படுகிறது.
ஏனெனில் ஒவ்வொரு நடிகர்களும் அவர்கள் பற்றிய ஒரு பிம்பத்தை சமூகத்தில் கட்டமைத்து வைத்திருக்கும்போது அவர்களை பற்றிய பல உண்மைகளை பொதுவெளியில் பேசி விடுகிறார் சந்திரபாபு. எம்.ஜி.ஆருடன் ஆன மன கசப்பால் எம்.ஜி.ஆர் கொடுக்கும் ஒரு அடி சந்திரபாபு வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.
இவற்றையெல்லாம் விரிவாக புத்தகம் பேசுகிறது. எழுத்தாளர் முகில் நமக்கு சோர்வு ஏற்படுத்தாத வகையில் மிகவும் விறுவிறுப்பாக புத்தகத்தை எழுதியுள்ளார். பொதுவாக வாழ்க்கை வரலாறு, கட்டுரை தொகுப்புகள் என்றாலே பேசஞ்சர் ட்ரெயின் போல மெதுவாகதான் போகும், ஆனால் மருதன், பா.ராகவன், முகில் போன்ற சில எழுத்தாளர்கள் அதை கமர்ஷியல் படம் போல வேகமெடுத்து கொண்டு போவதால் இந்த புத்தகங்களை படிப்பதில் பெரிதாக சிரமம் இருப்பதில்லை.
சந்திரபாபுவையும், சினிமா அரசியலையும் புரிந்துக்கொள்ள உங்களுக்கு ஒரு புத்தகம் வேண்டும் எனில் அது இந்த புத்தகமாகதான் இருக்கும். முடிவில் கதை உணர்த்தும் நீதி என்னவெனில் இந்த சமூகத்தில் நாம் நமது இஷ்டத்துக்கு மகிழ்வான ஒரு வாழ்க்கையை வாழ நினைத்தால் அதற்கு முதலில் இந்த சமூகத்தில் அதிக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மனிதராக நாம் இருக்க கூடாது.
தனக்கென தனி பாணியை கொண்டு, இந்திய சினிமாவிலேயே தனி இடம் பிடித்த ஒரு மகா கலைஞனின் துயரமான வாழ்க்கை கதைதான் இந்த நூல்.
197 reviews7 followers
February 25, 2023
ஒரு ஈடு இணையற்ற கலைஞனின் வாழ்க்கை பயணம் - The great artist Chandrababu - who is multi-talented in all forms of art - be it music, dance, acting, his articulation in English.. Coming from a fisherman background, who underwent so many struggles to become an great actor of his times. The support he could not get from.his parents, he came out of his family, life was full of unexplainable hurt, betrayals and misunderstandings. His marital life ended even before it started ( that was hot topic those days). His drinking habits messed him up from that episode of marriage which did not end until his death.

His straightforwardness was his biggest enemy. At one time,.there were so many producers who circled him for his talent but during his later days no one even bothered to know about his whereabouts except for a few..

His clash with " Makkal thilakam MGR" become a controversy( mgr did not attend his funeral,.not even a condolence speech)..

He died at an early age of 46 because of his excessive drinking causing jaundice..

Such a heartfelt listening and experience to know about the life of great artist Chandrababu.. His songs with so much philosophy and meaning are such a motivation..

Stories of great artists have a huge part of sadness, this was not an exception, but he passed on so much of happiness to people lives through his songs and acting..
Profile Image for Karthick.
371 reviews123 followers
May 7, 2025
10 Sep 2016 - 11 Sep 2016

சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது
சின்ன மனுஷன் பெரிய மனுஷன் செயலை பாக்க சிரிப்பு வருது

மேடை ஏறி பேசும் போது ஆறு போல பேச்சு
கீழ இறங்கி போகும் போது சொன்னதெல்லாம் போச்சு

நல்ல கணக்க மாத்தி கள்ள கணக்க ஏத்து
நல்ல நேரம் பாத்து நண்பனையே மாத்து

The rise and fall of a inarguable LEGEND!
Profile Image for Hari.
102 reviews15 followers
March 28, 2022
What a sad story, remembering thr thirukural

Iru veru ulagthu thiru veru theliyaladu veru, just like day and night are separated in this worldz, wealthy ppl are deprived of knowledge and knowledgable ppl are doesnt poses wealth and even sadder in the cursed melancholy life :(
Profile Image for Shyam Sundar.
112 reviews39 followers
May 21, 2014
எதற்காகவும், யாருக்காகவும் தன் தனித்துவத்தை விட்டுக் கொடுக்காது வாழ்ந்த ஒரு கலைஞனின் வாழ்வில்
அவனைத் தொடர்ந்த சோதனைகளும், துயரங்களும் எளிமையான மொழியில் விவரிக்கப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான கலைஞனை எப்படித் தேவை தீர்ந்ததும் வீசி எரியப்பட்டுவிடுகிற எச்சில் இலையைப் போல, திரையுலகம் அவரை பயன்படுத்திவிட்டுத் தூக்கி எரிந்துவிட்டது என்பதற்குச் சான்றான நிகழ்வுகள் அதன் பக்கங்களில் விரிகின்றன. கோடிக்கணக்கான ரசிகர்களை வசியப்படுத்தி வைத்திருக்கும், அவர்களது வாழ்வின் போக்கை நிர்ணயம் செய்யும் வல்லமை கொண்ட கதாநாயகர்களின் முகப்பூச்சுக்குப் பின்னே மறைந்திருக்கும் கோரமுகங்கள், அவர்கள் கடைவாயில் வழியும் ரத்தம் காணப்படுமாறு உரித்துக் காட்டப்பட்டுள்ளன. காமிரா முன் தவிர வேறெங்கும் நடிக்கத் தெரியாத, பிறருக்குத் தொந்தரவில்லாமல் தன் இச்சைப்படி வாழ நினைக்கும் ஒரு நேர்மையான மனிதனைச் சமூகம் எவ்வாறு புறந்தள்ளி விடுகிறது என்பதற்கு பாபுவின் வாழ்க்கை ஒரு உதாரணம்.மிகுந்த வறுமையில்தான் துவங்கியிருக்கிறது அவரது வாழ்க்கை. கொலைப் பட்டினியிலும் தன் தனித்துவ��்தை இழக்காத மனிதர் அவர். தான் நடித்த காலத்தில் கதாநாயகனுக்கு ஈடாக ஊதியம் பெற்ற ஒரே நகைச்சுவை நடிகர் அவர். திரைத்துறையில் குறுகிய காலத்தில் புகழின் உச்சியை அடைந்த போதிலும் அவரது சொந்த வாழ்க்கையில் துரோகங்களும், ஏமாற்றங்களும், சோகங்களுமே சூழ்ந்துகொண்டிருந்தன.

சந்திரபாபு மது அருந்துகிற அழகை இந்தப் புத்தகத்தில் வர்ணித்திருப்பதைப் படித்தாலே நமக்கும் ஆசை வந்துவிடும். சுத்தமாகக் குளித்து முடித்துவிட்டு, தூய்மையான பூப்போட்ட லுங்கி அணிந்துகொண்டு, வெள்ளை முழுக்கை சட்டையை அணிந்து பட்டன்களைத் திறந்துவிட்டபடி கைகளைச் சுருட்டிவிட்டுக்கொண்டு, ஒரு கையில் சிகரெட்டும், இன்னொரு கையில் மதுகோப்பையையும் வைத்துக் கொண்டு, சோஃபாவில் சம்மணமிட்டு அமர்ந்தபடி நிதானமாக அனுபவித்து மது அருந்துவாராம். பின்னாளில் போதைக்கு அடிமையாகிவிட்ட நடிகை சாவித்திரியும், எழுத்தாளர் ஜெயகாந்தனும் இவருக்கு ‘தண்ணி பார்ட்னர்’களாக இருந்திருக்கிறார்கள். (சந்திரபாபுவுடனான தனது நட்பு பற்றி ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்களில் ஜெயகாந்தன் எழுதியிருக்கிறார்). எல்லாரையும் மிஸ்டர் போட்டு அழைக்கும் பழக்கம் இருந்திருக்கிறது சந்திரபாபுவுக்கு. மிஸ்டர் எம்.ஜி.ஆர், மிஸ்டர் சிவாஜி என்றுதான் கூப்பிடுவாராம். மனதில் தோன்றுவதை வெளிப்படையாகப் பேசுவதோ, செய்துவிடுவதோ சந்திரபாபுவின் பண்புகளில் ஒன்று. ஒருமுறை அவரது கலைநிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அந்நாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணனின் ரசிக்கும் திறமையைக் கண்டு, துள்ளிக் குதித்து அவர் மடியிலமர்ந்து அவர் தாடையைப் பிடித்துக் கொஞ்சி ‘ரசிகன்டா நீ!’ என்று பாராட்டினாராம்.
Profile Image for J Rishi Dadhichi.
Author 6 books
January 25, 2021
Well written

Read to understand one of the best actors. You'll be happy and sad the same time. Possibly you'll miss him.
Profile Image for Venkatraman Dhamodaran.
9 reviews3 followers
August 8, 2021
Author has done a good job on collecting information from different sources and structured it very well.
Displaying 1 - 8 of 8 reviews

Can't find what you're looking for?

Get help and learn more about the design.