முலை: Amazon-இல் எனது மூன்றாவது புத்தகம். பெண்ணியம் (or பெண்களுடன்) பேசுவதென்பதும் பெண் குறித்தெழுதுவதென்பதும் என்னைப்பொறுத்தவரை இருபக்க கூர்முனைக்கத்தியின் ஒருமுனை "Handling". கத்தியின் மறுமுனையில் மனமெனும் கனமான "Leather Glove" அணிந்து பிடித்திருக்கும் பெண்களுக்கு யாதொரு சேதாரமும் விளையாதிருக்க பிரயாசைப்படும் என் எழுத்துகளில் சர்வ நிச்சயமாய் சில தவறுகளோ ஒழுங்கீனமற்ற வார்த்தைகளோ இருப்பினும், "நல்லாத்தான் எழுதறீங்க, நீங்க பயப்படாம கத்தியை பிடிங்க தம்பி/அண்ணா/சகோ/தோழா/Bro/"ங்க", என்றென் எழுத்தருவிக்கு அணை போடாது, நதியென ஓடவிடும் நங்கைகளுக்கென் நன்றியெல்லாம் சொல்லப்போவதில்லை. காரணம், எழுத்தை பொறுத்தவரை அடியேன் வெறும் "(மனம், அறிவு, அனுபவம் இம்மூன்றும்) கண்&