8 அத்தியாயங்கள் கொண்ட குறுநாவல், ஆனால் சிந்திக்க நிறைய கருத்துக்களை படைத்திருக்கிறார் எழுத்தாளர்.
நாம் செய்யும் தவிறினை சரி செய்யும் உறவையும், நடப்பையும், சேமிப்பது வரம்.. அவ்வரத்தை பெற்ற சாகச பெண்ணாக ‘கண்மணி’... கதையில் வரும் அனைத்து கதாபாத்திரமும் நாயகிகள் தான்.
6” திரையில் தோலையும் குழந்தை பருவத்தை மீட்க ‘கண்மணி’ யின் செயலியின் வழி கருத்தினை பதிவு செய்வதாகட்டும், வெற்றிகளை ருசிக்கும் சாதனை பெண்ணிற்கும் அர்த்தம்மில்லா புறக்கணிப்பினால் வாழ்வில் சலிப்பு வரும் என்ற உருவாக்கமும் அற்புதம்.
நாம் அதிகம் போட்டியிடும் நம் உடன்பிறப்புகளுக்கே நம்முடைய பலவீனம் தெரியும் என்பதை ‘கார்த்திக்’ போறபோக்கில் தன் தமக்கையின் மேல் உள்ள அக்கறையை வெளிப்படுத்திய விதம் அவனை நம் இல்லத்தில் இருக்கும் ஒருவனாக ரசிக்க தோண்றியது.
தற்கொலை என்பது ஒரு நொடி மனபிறழ்வினால் வரும் எண்ணம், அந்நொடியை நாம் கடந்தால் நிச்சயமாக இவ்வுலகிலேயே நாம் அதிகம் நேசிக்கும் நபர் நம்மை தான்.
நம் வாழ்வின் முடிவிற்க்கான நாளை நாம் குறித்தால், குறித்த நேரத்தில் அதை செயல்படுத்த முடியுமா? அதை செயல்படுத்த நம் ஆசைகள், கடமைகள் வழி வகுக்குமா?
“மனுஷன இந்த உலகத்தோட பிடிச்சு வைக்க எத்தனை இணைப்புகள் இருக்கு தெரியுமா? ஆசைகள், லட்சியங்கள், கடமைகள், உறவுகள், உரிமைப்பட்ட பொருட்கள் அப்படின்னு எத்தனையோ உலகத்துல இருக்கு...“ விஷாலியின் வரிகளில், மனித வாழ்க்கையின் பிடிப்பா? பேராசையா ? தாற்பரியமா ?
எதுவானாலும் வாழ்ந்து பார்த்துவிடு என்னும் ஊக்கத்தை கொடுக்கும் காரணிகள் அவை...
எழுத்தாளரின் சமூக சிந்தனையில் சில வார்த்தை கோர்வையின் தவறுதலால் வரிகளை நிறுத்தி, கோர்த்து பயணித்த தோற்றம். அவைகளை மட்டும் தவிர்த்தால், நிச்சயமாக நல்ல எழுத்து நடையில் பயணிக்கலாம்.